வெளிப்படுத்தின விசேஷம் 4 அதிகாரம் #2 Jeffersonville, Indiana, USA 61-0101 1... இக்காலையில் மீண்டும் இங்கே இருப்பதற்காக மிகவும் மகிழ்ச்சியாயிருக்கிறேன். நான் இப்பொழுது தான் சிந்தித்துக் கொண்டிருந்தேன். எவ்வாறு இந்தப் பனியானது... இப்பொழுது நாம் கொலராடோவில் இருந்திருந்தால், பனியானது பூஜ்யம் டிகிரிக்கு கீழே நாற்பது டிகிரியாகவும், மிருது வாயும், இளகினதாயும் இருக்கும். அதினால் நீங்கள் ஊதினால், அது மண்ணின் தூசி வரையிலும் செல்லும். (சகோ.பிரன்ஹாம் காற்றை வெளியே ஊதுகிறார் - ஆசி) குளிர்காலம் முழுவதும் இப் படித்தான் இருக்கும். ஆனால் இப்பொழுது இங்கேயோ, மத்தியப் பிரதேசமாக இது இருப்பதால், மிகவும் அதிகமாக ஈரமாகவும் தூறிக் கொண்டும் மிகவும் மோசமாக இருக்கிறது. நான் இங் கிருந்து பறந்து அரிசோனாவுக்கு போய், வசந்தம் வரும்வரை யிலும் அங்கே காத்து இருந்துவிட்டு, அதன்பிறகு திரும்ப வர வேண்டும் போல் இருக்கிறது. இப்படித்தான் நமக்கெல்லாம் ஜலதோஷம் பிடிக்கிறது. கிருமிகள் யாவும் நிலத்தில் கிடக்கின்றன. அவைகள் யாவும் உறைந்து போய் இருக்கிறது, அது மீண்டும் உருகிடும், பிறகு மீண்டும் உறைந்து விடும்; பிறகு மீண்டும் உருகிடும். அது வெளியே மீண்டும் வருகிறது, அதை நாம் சுவாசிக்கிறோம், அதினால் கரகரப்பான தொண்டை நோயும், தலைவலிகளும், உபாதைகளும், வலிகளும் பெற்றுக் கொள்கிறோம். என்னே இது ஒருவேளை, என்னே ஒரு ஸ்தலம் அது. ஆனால் நதிக்கப்பால் ஓர் தேசமுண்டு அது என்றும் இனிமையானது என்பர் விசுவாச அளவைக்கொண்டே அதின் கரையை நாம் அடைவோம் ஒவ்வொருவராய் அதன் நுழைவாயிலில் நுழைவோம். அங்கே சாகாமையுள்ளவரோடு வாழ்வோம் ஒரு நாளில் பொன்னான மணியோசை ஒலிப்பர், உமக்காகவும் எனக்காகவும். அப்பரம் வீட்டுக்குத் தான் நாம் போய் வாழப் போகிறோம் அல்லவா? அந்நாளுக்காகத்தான் நாம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். 2கடந்த இரவில் எனது சகோதரர்கள் பிரசங்கித்த அற்புதமான பிரசங்கங்களை நான் நிச்சயமாக கேட்டு உணர்ந்து மகிழ்ந்தேன். பேட் டைலர் எங்கே இருக்கிறார்? அவர் இன்று காலையில் இங்கே இருக்கிறாரா? பேட், நீங்கள் அங்கே ஜீவனைப் போல் பெரிதாக வும், இயற்கையைப் போல் இரட்டை மடங்காகவும் உட்கார்ந் திருப்பதை நான் காணவில்லை. நீங்கள் அங்கே உட்கார்ந்திருப் பதை நான் காணவில்லை. முதல் தடவையாக பேட் அவர்கள் பிரசங்கிக்கக் கேட்டேன். அதை நான் நிச்சயமாக கேட்டுணர்ந்து மகிழ்ந்தேன். நாம் யாவருமே அவ்வாறுதான் உணர்ந்தோம் என்று நான் நிச்சயமாக இருக்கிறேன். அதன்பிறகு, அந்த சிறிய சகோதரனொருவர் இங்கே ஒரு பிரசங்கத்தைப் பற்றி அனல் கக்கும் சாட்சியைக் கொடுத்தார்; அது உண்மையிலேயே ஒரு இயந்திரத் துப்பாக்கியால் சுட்டது போல் இருந்தது. ஓஹையோவிலிருந்து வந்த ஒரு சகோதரன் அவர், இக்காலையில் அவர் இங்கேயிருக்கிறாரா? சகோதரன் நெவில் அவர்கள், அவர் மிகவும் தீவிரமாக அனலுறைக்கப் பேசியதைப் பற்றிக் குறிப்பிட்டார். பிறகு, சகோதரன், ஜே.டி.பார்நெல் அவர்கள். சகோதரன் பீலரை அவர்கள் பேசும்படி கேட்டுக் கொள்ளவில்லை என்று நான் எண்ணுகிறேன். சகோதரன் பார்நெல் இங்கு இருக்கிறாரா? சகோதரன் பார்நெல் அவர்களும், சகோதரன் பீலர் அவர்களும்? எனக்கு நிச்சயமாகத் தெரியவில்லை, நான் சகோதரன் பீலரை பார்த்தேன் என்று நினைக்கிறேன். 3இந்த விளக்கொளிகள், இது ஒரு... புதிய கூடாரத்தை அவர்கள் கட்டுகையில் அவைகளை வித்தியாசமாக அமைப்பார்கள் என்று நான் நம்புகிறேன். சிறிது வித்தியாசமாக ... பரீட்சார்த்தமாக இது முதலில் அமைக்கப்பட்டுள்ளது. ஆகவே, புதிய ஒன்றை அமைக் கையில், இவ்விளக்குகள் இப்போதிருப்பதை விட சற்று வித்தியாசமாக இருந்திட வேண்டும் என்று நாம் விரும்புகிறோம். சரியாக பார்க்க முடியவில்லை; ஒரு புதிய கூடாரத்தைக் கட்டு கையில், மக்கள் அமர்ந்திருக்கும் இடம் சற்று சாய்வாக இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். எப்பொழுதும் சபை யாரை நேருக்கு நேராகப் பார்க்க வேண்டியது உள்ளது. அதிலும் விசேஷமாக இருதயத்தைப் பகுத்தறிந்து சொல்லும் கூட்டங்களின் போது, நாம் முன்னும் பின்னுமாக இருந்து, நபர்களைக் கூறி அழைக்க வசதியாக இருக்கும்படி கட்ட வேண்டும். பின்பு, ஒரு சிறிய முகப்பு (பால்கனி) இருந்தால் வெளியே வருவதற்கு நன்றாக இருக்கும். 4சகோதரன் லிட்டில்ஃபீல்ட், பில்லி இங்கேயிருந்தால்.... அவர் நேற்று இரவு என்னை தொலைபேசியில் அழைத்து, நான் பிரதிஷ்டை செய்த அந்த கூடாரத்திற்கான விளக்கங்களுடன், கட்டிடக் கலைஞர்கள் வரைந்த படத்துடன் அனுப்பியிருப்பதாகக் கூறினார்... சகோதரன் வுட்ஸ் அவ்வரைப்படத்தை வரைய கட்டிடக் கலைஞர் களுக்கு ஐந்நூறு டாலர்கள் கொடுக்க வேண்டியதாயிருந்தது என்று நான் நம்புகிறேன். அவர் கட்டிடப் பொருள்களுக்கான விலை விபரங்களுடன், இவ்வளவுக்கு இவ்வளவு அளவில் கலவை இருக்க வேண்டும், என்பது பற்றிய விபரங்களையெல்லாம் அனுப்புவதாகக் கூறினார். அதை அவர் நமக்கு அனுப்புவதாகவும், நாம் வரவேண்டுமென்றும் விரும்புகிறார் என்றும், கட்டப் போகும் கட்டிட மாதிரியை மரத்துண்டுகளால் வெட்டி மாதிரி வடிவமைப்பை, உருவாக்குபவர்களிடம் போய், அவருடைய கூடாரத்தைப் போல் ஒரு வடிவமைப்பை, மாதிரியை உருவாக்க முடியுமோ என்று பார்த்து வருவதாகவும் கூறினார். அது ஒரு அழகான கூடாரமாகும், ஒரு பெரியதொன்றல்ல, ஆனால் அது அழகான கூடாரமாகும். “பில்லிக்கு நீங்கள் அதை அனுப்பின உடனேயே, அதை அறங்காவலர்களிடமும், உதவிக்காரர்களிடமும் கொடுத்து விடுவேன்; அப்பொழுது அவர்கள் எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும், தங்கள் கட்டிடத்தை ஆரம்பிக்க அவர்களுக்கு எவ்வளவு பணம் தேவைப்படும் என்பதை மதிப்பீடு செய்யட்டும்'' என்று நான் அவரிடம் கூறினேன். அவர் கூறினார், “நீங்கள் வேலையை ஆரம்பிக்கும் பொழுது, நான் வேலை செய்யும் பொழுது அணிந்து கொள்ளும் ஒரு ஜோடி மேல்காற் சட்டைகளை அணிந்து கொண்டு , வேலை நடக்கும் காலத்தில் அங்கேயே தங்கி கவனித்துக் கொள்கிறேன்'' என்று. சகோதரன் லிட்டில் ஃபீல்ட் அத்தனை தயவுள்ள மனிதர் அவர். அவர் அருமையானவர், தயவு பொருந்திய மனிதர். 5இப்பொழுது இப்புத்தாண்டை துவங்குவதற்கு நீங்கள் யாவரும் சரியான உணர்வோடு இருக்கிறீர்களா? இப்புத்தாண் டில் சரியான சீரோடு இங்கிருந்து வெளியே செல்லுங்கள். கர்த்தரை சேவிக்கிறவர்களாய் நாம் இவ்வாண்டை சரியாக ஆரம்பிக்க போகிறோம். எத்தனை பேர் காலையில் எழுந்து, பழைய ஆண்டுக்காகவும் அது உங்களுக்கு எவ்வளவு முக்கியம் வாய்ந்த தாயிருந்தது என்பதற்காகவும் நன்றி செலுத்தி, பழையனவற்றை மறந்துவிடும்படி அவரைக் கேட்டுக் கொண்டீர்கள்? எனவே நாம் நமது படுக்கையண்டையில், எழுந்திருக்கும் போது அதைச் செய்கிறோம். அதன்பிறகு நாம் மேசைக்கு வந்து, வழக்கமான குடும்ப பலிபீடமாக அது இருக்கிறது; அங்கே குடும்பமாக மேசையண்டை கூடி வந்து ஜெபிக்கப்படுகிறது. எனவே நாம் எப்பொழுதும் படுக்கைக்கு செல்லும் முன்னர், இரவில் ஜெபிக்கிறதை ஒரு பழக்கமாக கொள்ள முயற்சிக்கிறோம். நான் மனந்திரும்பியது முதல் அதை என் பழக்கமாகக் கொண்டிருக் கிறேன். அதிகாலையில் நான் எழுந்து, அது இருளாயிருந்தாலும் பனி மூட்டமாயிருந்தாலும், நான் எங்கே போகிறேன் என்பதே தெரியாமல் நடந்து செல்வேன். ஆனால் நான் அவரிடம் என் கரத்தைப் பிடித்து, அந்த நாள் முழுவதும் நடத்தும்படி கேட்பேன். 6முன்பு இந்த தெருவுக்கு அப்பால் நாங்கள் குடியிருந்த போது, நான் இளைஞனும், பில்லி பாலுக்கு மூன்று அல்லது நான்கு வயது இருக்கும், அந்நாட்கள் எனக்கு நினைவுக்கு வருகிறது. ஒரு இரவில் அவன் குடிக்கத் தண்ணீர் கேட்டான். ஒரு வாளியில் குவளையுடன் தண்ணீர் சமையலறையில் இருந்தது. நாள் முழுவதும் நான் கடினமாக வேலை பார்த்து விட்டு வந்து, பாதி இராத்திரி வரையிலும் பிரசங்கம் செய்திருந்தேன். அவன், ''அப்பா, எனக்கு தண்ணீர் வேண்டும்'' என்றான். “பில்லி, சமையலறைக்குள் போ, தண்ணீர் அந்த சிறிய மேசையின் மேல் இருக்கிறது, எடுத்துக்குடி” என்றேன் நான். அவன் எழுந்து, கண்களை கசக்கிக் கொண்டு, அங்கே பார்த்தான். ''அப்பா, எனக்குப் போக பயமாயிருக்கிறது'' என்று கூறினான். “ஓடிப்போய் தண்ணீர் குடித்துக் கொள், அப்பா மிகவும் களைப்பாயிருக்கிறேன், அன்பே” என்று கூறினேன். அந்த ஜன்னல் வரைக்கும் உள்ள தூரம் தான், மிகவும் சமீபத்தில் இருந்தது. “ஆனால் போக எனக்குப் பயமாயிருக்கிறது, அப்பா'' என்றான் அவன். பாருங்கள். 7நான் சிறுவனோடு எழுந்தேன். அவன் கையை நீட்டி என் கையைப் பிடித்துக் கொண்டான். அது நன்றாக இருந்தது. நாங்கள் நான்கு அல்லது ஐந்து அடிகள் நடந்திருப்போம். அங்கே அவன் தரை விரிப்பின்மேல் இடறிக்கொண்டான், அதினால் அவன் சற்று சறுக்கிவிட்டான். மேடா மெழுகைக் கொண்டு தரையைப் பூசி விட்டு, அதன் மேல் லினோலியத்தை விரித்திருந்தாள். அது எப்படியிருக்கும் என்று உங்களுக்குத் தெரியும். ஆனால் நான் அவனது கையைப் பிடித்திருந்தேன். அப்பொழுது அவனும் என் கையைப் பிடித்து இறுக்கி இன்னும் அதிகமாக பற்றிக் கொண்டான். அங்கே அப்பொழுது நான் ஒரு கணம் நின்றேன். அப்பொழுது நான் எனக்குள், “தேவனே, அது சரிதான், என் கரத்தை நீர் பிடித்துக் கொள்ளாமல் ஒரு அடி கூட எடுத்து வைக்க விரும்பவில்லை; ஏனெனில் எப்பொழுது என் அடிகள் சறுக்கும் என்பதை நான் அறியேன்'' என்று சிந்தித்தேன். பார்த்தீர்களா? ”உம்முடைய பலத்த வல்லமையான கரமானது என் கரத்தை இறுகப் பிடித்துக் கொள்கிறது என்பதை நான் உணர முடிகிற வரையிலும், எனது அப்படிப்பட்ட வேளைகளில் நீர் என்னைப் பிடித்துக் கொள்வீர் என்பதை நான் அறிவேன்'' என்றேன். பாருங்கள். 8எனவே, என் கரத்தை அவர் கரத்தினுள் வைத்துக் கொள்ளும் பழக்கத்தை பழக்கமாகக் கொண்டிருக்க நான் முயலுகிறேன். சில வேளைகளில் என் பார்வைக்கே நகைப்புக்கிடமானதாக, அர்த்த மற்றதாக இருக்கக்கூடிய காரியங்களை நான் செய்திருக்கிறேன், அவ்விதமான காரியங்கள் மானிட சிந்தைக்கு, இயல்பானதாக இராமல் அதற்கு முரணாக இருப்பதாகத் தோன்றும்; ஆனால் அப்படியே நடக்கட்டும் என்று அதை விட்டு விடுவோமானால், சரியாக செய்யக்கூடிய காரியம் அது ஒன்றே என்பதை நான் பின்பு கண்டுபிடித்திருக்கிறேன். சரியாக இல்லை என்பதாக பார்வைக்கு தோன்றும் காரியங் களைச் செய்யும்படி தேவன் உங்களை நடத்துவாரெனில், எங்கோ அது சரியாகத்தான் இருக்கும் என்பதை நீங்கள் காண்பீர்கள்; ஏனெனில் எவ்விதம் வழிநடத்துவது என்பதை அவர் அறிவார். எனவே, நம்முடைய சகலத்திற்கும் போதுமான கிருபையுள்ளவர் அவரே என்பதையும், நமக்கு அவசியமானவை யாவும், நமக்காக அக்கறை கொள்கிறதும் யாவும் அவரிலே உள்ளது என்றும் நாம் கண்டு கொண்டோமானால், அவரைத்தவிர மற்ற எல்லாவற் றையும் நாம் தள்ளிவிட்டு, மாறாதவரான அவரது கரத்தை பற்றிக் கொள்வோமாக. 9இங்கே நாம் ஒரு பாடலை பாடுவது வழக்கம். நீண்ட காலமாக அதைப்பாட நான் கேட்டிருக்கவில்லை. ஆனால் என்னால் பாட முடியாது ..... இங்கே அந்நியர்கள் யாரும் நம்மோடு இல்லை என்று நான் நினைக்கிறேன். எனவே தான் நான் இந்த சிறு பாடல்களை பாட முயற்சிக்கிறேன், ஏனெனில் நான் அவைகளை நேசிக்கிறேன். ஜீன், இதை ஒலிநாடாவில் பதிவாக விடுவீரெனில், பொதுவிலே கேட்கும்படி போகட்டும். இந்த ஒரு சிறிய பாடலை பாடுவது வழக்கம். காலமானது விரைவான சூழல் மாற்றங்களைக் கொண்டது, பூமியில் ஒன்றும் அசையாதவைகள் அல்ல, அசையாத வைகளே நிலைக்கும் நித்தியமானவைகளின் மேல் நம்பிக்கை கொள்ளுவீர், தேவனுடைய மாறாத கரத்தைப் பற்றிக்கொள்வீர் நீங்கள் எத்தனை பேர்கள் இப்பாடலைக் கேட்டிருக்கிறீர்கள்? நான் அதை நேசிக்கிறேன். நீங்கள் நேசிக்கவில்லையா? ஒரு வரியை முயற்சிப்போம். தேவனுடைய மாறாத கரத்தைப் பற்றிக்கொள்வீர் தேவனுடைய மாறாத கரத்தைப் பற்றிக்கொள்வீர் நித்தியமானவைகளில் உம் நம்பிக்கையைக் கட்டுவீர் தேவனுடைய மாறாத கரத்தைப் பற்றிக்கொள்வீர் ஒரு அடியை பாட முயற்சிப்போம் : நம் யாத்திரை முடியும் பொழுது, தேவனுக்கு நாம் உண்மையாய் இருந்திருப்போமெனில், மகிமையில் அழகும் பிரகாசமுமான உமது வீட்டை பரவசமான உம் ஆத்துமா காணுமே. தேவனுடைய மாறாத கரத்தைப் பற்றிக்கொள்வீர் தேவனுடைய மாறாத கரத்தைப் பற்றிக்கொள்வீர் நித்தியமானவைகளில் உம் நம்பிக்கையைக் கட்டுவீர் தேவனுடைய மாறாத கரத்தைப் பற்றிக்கொள்வீர் ஜெபத்திற்காக நாம் ஒரு நிமிடம் எழுந்து நிற்போமாக. விரும்பினால் நாம் நமது கரங்களில் ஒன்றை தேவனுக்கென்று உயர்த்துவோமாக, அப்பாடலை மீண்டும் பாடுவோம். தேவனுடைய மாறாத கரத்தைப் பற்றிக்கொள்வீர் தேவனுடைய மாறாத கரத்தைப் பற்றிக்கொள்வீர் நித்தியமானவைகளில் உம் நம்பிக்கையைக் கட்டுவீர் தேவனுடைய மாறாத கரத்தைப் பற்றிக்கொள்வீர் உலகின் வீணான ஐசுவரியத்தை இச்சியாதீர் அது விரைவில் கெட்டுப்போகும் நித்தியமானவைகளில் உம் நம்பிக்கையை கட்டுவீர் அவை ஒருக்காலும் ஒழிந்து போவதில்லை. 10பரம பிதாவே, நாங்கள் நிற்கையில் கர்த்தாவே, ஓ, நான் இப் பழைய பாடல்களை பாட விரும்புகிறேன், அவைகள் எங்களது இருதயத்தின் ஆழத்தில் அதின் உள்பாகங்களில் போய், ஜீவிக்கிற தேவனாகிய உமக்கு எங்களது அன்பைத் தெரியப்படுத்தலை வெளிக் கொணர்கிறது. இக்காலையில் எங்கள் கரங்களை உயர்த்தியிருக் கையில், கர்த்தாவே, அதுதானே “எங்கள் கரங்களை பற்றிக் கொள்ளும்'' என்று நாங்கள் கேட்பதற்கு அடையாளமாக அது அமைந்திருக்கிறது. பில்லி பால் எவ்வாறு என் கரத்தைப் பற்றிக் கொண்டான் என்றும், அவ்வாறு நான் அவன் கரத்தைப் பற்றிக் கொண்டிருக்காவிடில், அவன் கீழே விழுந்திருப்பான் என்பதைப் பற்றி நான் சொல்லிக் கொண்டிருந்தேனே, அதைப் போல், ஓ தேவனே, நீர் எங்கள் கரத்தை பற்றிக் கொண்டு இருந்திருக்கா விடில், அவன் கீழே விழுந்திருப்பான் என்பதைப் பற்றி நான் சொல்லிக் கொண்டிருந்தேனே, அதைப்போல், ஓ தேவனே, நீர் எங்கள் கரத்தை பற்றிக் கொண்டு இருந்திருக்காவிடில், எத்தனை தடவைகளில் நாங்கள் விழுந்திருப்போமே. அவனைப் பற்றி நினைக் கையில், தாயில்லாமல் இருந்தான், ஒரு சிறிய பிள்ளை அவன், எவ்வாறு அவனது வாழ்க்கை முழுவதிலும், அவன் எடுத்துக் கொண்ட பாதையைப் பார்த்தால், அவன் எப்பொழுதோ கொல்லப்பட்டிருப்பான், ஆனால் அந்த மகத்தான கரமானது, என் கரம் நீட்டி காப்பாற்ற முடியாத இடத்திலெல்லாம் நீட்டப்பட்டு பற்றிக் கொண்டு காத்ததுவே. நாங்கள் அதற்காக நன்றியுள்ள வர்களாயிருக்கிறோம், இப்பொழுது. எங்களது ஆத்துமாவானது இந்த சரீரத்தினின்று பிரிக்கப்படு வதாக நாங்கள் உணருகையில், அப்பொழுது கூட, நதிக்கப்பால் எங்களை நடத்திச் செல்லும் ஒரு கரமானது நாங்கள் கையை நீட்டி பற்றிக் கொள்ளத்தக்கதாக எங்களுக்கு இருக்கிறது என்பதை நாங்கள் உணரும் பொழுது, நாங்கள் மிகவும் மகிழ்ச்சியாயிருக் கிறோம். இவைகளுக்காக, இந்த உறுதி மொழிக்காக, எங்களுக்கு இருக்கிற இந்த ஆசீர்வதிக்கப்பட்ட உறுதிமொழிக்காக, நாங்கள் உமக்கு நன்றி செலுத்துகிறோம். அது ஒரு ஆத்தும நங்கூரமா யிருந்து எங்களை உறுதியாக நிலை நிறுத்துகிறது, நாங்கள் இந்த யாத்திரையில் நடந்து செல்லுகையில், அல்லது வாழ்க்கையின் ஆரவாரமிக்க ஆழ்கடலில் பயணம் செய்கையிலும் அக்கரம் காக்கிறது. 11“நிர்பாக்கியமுள்ள, கப்பல் சேதத்தில் சிக்கிக் கொண்ட, ஒரு சகோதரன், எங்களுடைய நிலைத்து நிற்கும் தன்மையைக் கண்டு, அதினால் மீண்டும் தைரியம் கொண்டு, மீண்டும் முயலட்டும் என்று கவிஞன் பாடியது போல், நாங்கள் ஜெபிக்கிறோம், பிதாவே . நாங்கள் இடறும் பொழுதோ அல்லது விழும் பொழுதோ, சகலத்திற்கும் போதுமான தேவனுடைய கரமானது எங்களுக்கு உதவி செய்ய இருக்கிறது என்றும், அவருடைய கிருபை போதுமானது என்றும் நாங்கள் அறிந்து கொள்ளட்டும். இன்று காலையில், இப்புத்தாண்டை ஞானப்பாட்டுகளை பாடிக் கொண்டும், களிகூர்ந்து கொண்டும், வாழ்க்கையின் பயணம் முழுவதிலும், பிறகு மரண நதிக்கப்பாலும், வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்குள் வழி நடத்துவார் என்று அறிந்து கொண்டும் நாங்கள் துவங்கட்டும் என்று ஜெபிக்கிறேன், தேவனே. கரைபுரண்டு ஓடும் மரண யோர்தானுக்கப்பால் எங்கள் கண்கள் ஏறெடுக்கின்றன, அங்கே பசுமையான மகிழ்ச்சி தரும் வயல்வெளிகளும், இலையுதிராத மரங்களும் உள்ள நிலங்கள் உண்டு, எங்கள் ஆத்துமாக்கள் அதன் காட்சியை கண்டு கொண்டு, அதை இழக்காதிருக்கட்டும் என்று நாங்கள் ஜெபிக்கிறோம், தேவனே. என்றாவது ஒருநாளில், நாங்கள் அந்த நதியண்டையில் வந்து அதைக் கடக்க வேண்டியதிருக்கும் பொழுது, முன்காலத்து எலியாவைப்போல், தேவனுடைய சால்வையானது மரண நீரோட்டங்களை அடித்து வற்றிப் போகப் பண்ணி, அதினால் ஒரு பயமும் இன்றி, நாங்கள் கடந்து செல்வோம், அதை அளித்தரு ளும், கர்த்தாவே. 12உம்முடைய வார்த்தையை நாங்கள் அணு குகையில், கர்த்தாவே, எங்களுக்கு உதவி செய்யும். இவ்வார்த்தைகளை உம்முடைய பரிசுத்த ஆவியானவர் அபிஷேகித்தருளவேண்டுமென்று நான் ஜெபிக்கிறேன், கர்த்தாவே . நாங்கள் ஒரு போதகரல்ல. எனவே, போதிக்கிறதற்கு நாங்கள் தகுதியுள்ளவர் களல்ல. அதை நாங்கள் அறிந்து கொள்வதற்குள்ள ஒரே வழி என்னவெனில், அந்த மகத்தான போதகரானவர் வந்து, எங்கள் இருதயங்களில் வாசம் பண்ணி, எங்களுடைய சிந்தைகளையும் எண்ணங்களையும் மேற்கொண்டு, பரிசுத்த வேத வாக்கியங்களை அவரே எங்களுக்கு வியாக்கியானித்துத் தர வேண்டும். பயபக்தி யோடு நாங்கள் அதை சார்ந்து கொள்கிறோம். அதைப் பற்றி சிந்திக்கிறோம், தேவனே. 13அவ்விதமான ஒரு ஜீவிக்கிற பிதா எங்களுக்கு இருக்கிறார் என்பது எத்தனை அற்புதமானது; அவர் நித்தியத்தின் பிறப்பு அழிவுள்ளவர்களாகிய எங்களிடத்தில் ஏற்பட உதவி புரிந்து, அவர் தமது வார்த்தையை கொண்டு வந்து, எங்கள் வாயிலும் இருதயங் களிலும் காதுகளிலும் கொடுத்து, அதினால் நாங்கள் செவி கொடுத்து, ஜீவிக்கும்படி செய்து இருக்கிறார்; அதோடு, எங்களை ஒரு சாபத்தினின்றும் மீட்டுக் கொண்டிருக்கிறார், அச்சாபம் எங்களுக்கு வருவதற்கு நாங்கள் காரணமல்ல; பிதாவே, ஏனெனில் முதல் மனித இனம் அதற்கானதைச் செய்தது, நாங்கள் அம் முதல் தம்பதிகளுடைய வழித்தோன்றல்கள் தான், நாங்கள் பாவத்தில் பிறந்திருக்கிறோம், மீறுதலில் உருவாகியிருக்கிறோம். ஆனால் ஒரு நீதியுள்ள ஜீவிக்கிற தேவனோ , எங்களுக்கும் அதற்கும் சம்மந்த மில்லை என்பதை அறிவார், எனவே, தப்பித்துக் கொள்வதற்கான ஒரு வழியை உண்டாக்கி, அவரிடம் வருவதற்கு ஒரு சிலாக் கியத்தை உண்டாக்கிக் கொடுத்திருக்கிறார். பிதாவின் வீட்டிற்கு நாங்கள் வந்திருப்பதைக் குறித்து நாங்கள் எவ்வளவாய் மகிழ்ச்சி யுள்ளவர்களாய் இருக்கிறோம்! இங்கேயுள்ள எங்கள் சபையை நீர் இப்பொழுது ஆசீர்வதிக்க வேண்டுமென்றும், எங்களுடைய தீரமிக்க மேய்ப்பர் சகோதரன் நெவில் அவர்களை ஆசீர்வதிக்க வேண்டும் என்றும் ஜெபிக்கிறோம், அவர் உம்முடைய தாழ்மையான ஊழியக்காரனாவார். எங்க ளுடைய உதவிக்காரர்களுக்காகவும் ட்ரஸ்டிகளுக்காகவும் ஜெபிக்கிறோம். நீர் தாமே அவர்களுக்கு எல்லா ஆண்டுகளையும் விட மிகச் சிறப்பான ஆண்டைத் தாரும். கர்த்தாவே. அவர்களுக்கு நீண்ட ஆயுளைத் தாரும். அவர்களை பெலப்படுத்தியருளும், கர்த்தாவே. அவர்கள் உம்முடைய ஊழியக்காரர்களாய் இருக்கிறார் களே. தங்கள் பனிமனையில் அவர்கள் தொடர்ந்து தீரத்தோடு நிலைத்திருக்கட்டும். சபையின் அங்கத்தினர்களை ஆசீர்வதியும். அவர்கள் உம்முடைய பிரியமுள்ள பிள்ளைகளாவர், இந்த வீட் டிற்கு அவர்கள் வருகிறார்கள், தேவனே, இவ்வீட்டின் வாசற் படியைத் தாண்டி இங்கே வருகிற இவர்களுடைய ஒவ்வொரு ஆத்துமாவையும் நாங்கள் உரிமை கோருகிறோம். அவர்களை உமக்கென்று கோருகிறோம், கர்த்தாவே . வார்த்தையை எளிமை யாகவும், மிகவும் உண்மையாகவும் பரிசுத்த ஆவியினாலே கொண்டு வந்து, அதினால் மக்கள் உம்மைப் போல் ஆக வாஞ் சிக்கும்படி ஆகத்தக்கதாக, அத்தகைய ஊழியக்காரர்களாக எங்களை ஆக்கியருளும். அதை அளித்தருளும், கர்த்தாவே. உள்ளே வருகிற வியாதிப்பட்டவர்களையும் துன்பப்பட்டவர்களையும் குணமாக்கி யருளும். உலக முழுவதிலும் ஒவ்வொரு தேவனுடைய வீட்டில் உள்ளவர்களுக்கும் அதைச் செய்தருளும். 14முடிவாக, நீர் உம்முடைய கிரியை முடிக்கும் பொழுது, கர்த்தாவே, நாங்கள் உம்முடைய வாயிலில் பிரவேசித்து, தேவனு டைய வரவேற்பு மேசையில் அமர்ந்து, முடிவில்லாத காலங்களில் ஒன்று சேர்ந்து நாங்கள் வாழ்வோமாக. அதுவரையிலும், நாங்கள் ஆரோக்கியம், பெலன், சந்தோஷம், மகிழ்ச்சி, வல்லமை, சத்துவம், எங்களை வழி நடத்துவதற்காக பரிசுத்த ஆவியின் ஆசீர் வாதங்கள் ஆகியவைகளை நாங்கள் உடையவர்களாயிருக்கட்டும். இயேசுவின் நாமத்தினால் கேட்கிறோம். ஆமென். (நீங்கள் அமரலாம்). 15இக்காலையில் அந்த அருமையான இசையை நான் பாராட்டு கிறேன். நான் சரியான நேரத்தில் உள்ளே பிரவேசித்தேன்; அப்பொழுது வாசலண்டையில் என்னுடைய நல் நண்பர் சகோதரன் ஸ்நேக்ஸ் அவர்களுடனும், பின்னால் இருக்கிற சகோ.ஜீன் அவர்களிடமும், இன்னொரு சகோதரனிடமும் பேசிக் கொண்டிருந்தேன். நான் அதன் ஒரு பகுதியை மட்டுமே கேட்டேன். ஆனால் அது ஒலிப்பதிவு கருவிக்கு மிகவும் அழகாக வந்து கொண்டிருந்தது. வெளிப்படுத்தின விசேஷத்தை நீங்கள் எத்தனை பேர் கேட்டுணர்ந்து மகிழ்ந்திருக்கிறீர்கள்? நல்லது, என்னுடைய சிறிய மகள் சாராளைப் போல் அநேகருக்கு அது நன்றாக இருக்கிறதாக நான் நம்புகிறேன். சாராள் கூறுவது போல் அது எனக்கு “சுழற்சி களாக'' (Revolutions) ஆகியிருக்கிறது. அது மீண்டும் வருகிற சுழற்சியாக இருக்கிறது. நான் விரும்புவதென்னவெனில், நமக்கு மார்ச் அல்லது ஏப்ரல் வரையிலும் கூட்டங்களை ஒழுங்கு செய்து கொண்டு இங்கே பின்னால் பெரிய கூடார கேன்வாசை போட்டு, பகல் வேளைகளில் வந்து இச்செய்தியைப் பற்றிய சித்திரங்கள், விவர விளக்கப்படங்கள் ஆகியவற்றைக் கொண்டு, அவைகளை வேண்டுவது போல், ஜன்னல் ஷேட்களை ஏற்றி இறக்கிக் கொள்வது போல் செய்து, (ஜன்னல் ஷேட்கள் என்றால், கெட்டியான துணியானது ஜன்னல்கள் மேல் விரிக்கப்பட்டு, ஒரு ஸ்ப்ரிங் ரோலரில் மாட்டப்பட்டு, அதினால் வேண்டும் பொழுது சுருட்டி விட்டு, பிறகு இறக்கிக் விட்டுக் கொள்ளலாம் - மொழி பெயர்ப் பாளர்) செய்தியைப் படிப்பிக்கலாமே என்பது தான். இவ்வாறான வசதியையுடைய ஒரு பெரிய கூடாரத்தைக் கொண்டிருக்க வேண்டும் என்று நான் எப்பொழுதும் வாஞ்சிப்பதுண்டு; அங்கே இந்த விவர விளக்கப் படங்களை மேடையில் மாட்டி வைத்து, வேண்டுபவைகளை காண்பித்து, அதைக் கொண்டு போதித்து, மேடையிலிருந்து வந்து, கர்த்தர் எனக்குத் தருகிற வெளிப்படுத்து தல்களையும், வியாக்கியானங்களையும் போதித்து, விவர விளக்கப் படங்களை ஒரு சுட்டிக் காட்டும் கோலைக் கொண்டு சுட்டிக் காண் பித்து விளக்கி, இந்த சபைக்காலங்களைக் குறித்து போதிக்கலாம். ஒரு படத்திலிருந்து ஒன்றை விளக்கிக் காண்பித்த பிறகு, அதை மேலே சுருட்டிவிட்டு, அடுத்ததை இறக்கிவிட்டு, அதிலிருந்து போதித்து, இவ்வாறாக எல்லாவற்றையும் விளக்கிக் காண்பித்து, போதித்து வரலாம். ஓ, அது சிறிய பரலோகம் போல் இருக்கு மல்லவா? குளிர்காலம் முழுவதும் அவ்வாறு அமர்ந்து, கர்த் தருடன் அமர்ந்து இருக்கலாம். அவரோடு தனித்திருப்பது மிகவும் நல்லதாக இருக்கிறது. “என் ஆண்டவராகிய கிறிஸ்துவோடு தனித்திருக்கும்படி நான் வாஞ்சிக்கிற வேளைகள் உண்டு, அப்பொழுது, நான் அவரிடம் எனது துன்பங்கள் யாவற்றையும் தனித்திருந்து கூறுவேனே'' என்ற ஒரு பாடலை நாங்கள் பாடுவது வழக்கம். அவ்விதமாகத்தான் பெற்றுக் கொள்ள முடியும். அவர்கள் பாடுவது வழக்கம். ராய்டேவிஸ் அவர்கள், ”தனித்திருந்து, இயேசுவிடம் ஜெபி' என்று பாடலை பாடுவதுண்டு. யாவும் சுட்டிக்காட்டுகிறது. யாவும் நமக்கு இயேசு கிறிஸ்துவையே எடுத்துக் காண்பிக்கிறதாய் இருக்கிறது அல்லவா? 16இப்பொழுது, கடந்த எட்டு நாட்கள் கூட்டங்களில், சபைக் காலங்களை பேசக் கேட்டோம். நேற்றிரவில், வெளிப்படுத்தின விசேஷம் 4ம் அதிகாரம் 2ம் வசனம் முடிய பார்த்தோம் என்று நான் நினைக்கிறேன். நீங்கள் யாவருமே நேற்று இரவில் அச் செய்தியைப் பெற்றுக் கொள்ள இங்கிருந்தீர்கள் என்று கருது கிறேன். எனவே, ஒருவேளை, நான் இக்காலையில் ஒன்றோ அல்லது இரண்டோ வசனங்களை எடுத்துக்கொண்டு பிரசங்கித்தால் ... அல்லது கர்த்தர் எதுவரையிலும் நடத்துவார் என்பது எனக்குத் தெரியாது. நான் 6 அல்லது 7ம் வசனம் வரையிலும் ஆராய்ந்து கொண்டிருந்தேன். அதைப் பற்றி சம்பவங்களை கோர்வைப்படுத்தி இணைத்துப் பின்னி ஒரு அமைப்பை எழுதி வைத்திருக்கிறேன். அதிலிருந்து வேதவாக்கியங்களின் பல்வேறு பாகங்களுக்குள் சென்று, அவைகளை உங்களுக்கு நான் எடுத்து காண்பிக்க முடியும், நான் நேற்றிரவில் படித்தவைகளையும் உங்களுக்கு தெளிவாக்க முடியும். 17நேற்றிரவில் நாம் 2ம் வசனத்தோடு நிறுத்திக் கொண்டோம் என்றும், 3ம் வசனத்தை ஆரம்பிக்க வேண்டும் என்றும் நான் நம்புகிறேன். “எக்காளத்தின் சத்தம்' என்பது வரையிலும் நாம் பார்த்தோம் என்று நான் நினைக்கிறேன். அது சரிதானே? ''சத்தம் முழங்குவது?'' நாம் எல்லாவற்றையும் வாசித்து மீண்டும் திருப்பிப் பார்ப்போம். “இவைகளுக்கு பின்பு, இதோ, பரலோகத்தில் திறக்கப்பட்டிருந்த ஒரு வாசலைக் கண்டேன். முன்னே எக்காள சத்தம் போல் என்னுடனே பேச நான் கேட்டிருந்த சத்தமானது; இங்கே ஏறிவா, இவைகளுக்குப் பின்பு சம்பவிக்க வேண்டிய வைகளை உனக்குக் காண்பிப்பேன் என்று விளம்பினது. உடனே ஆவிக்குள்ளானேன்; அப்பொழுது, இதோ வானத்தில் ஒரு சிங்காசனம் வைக்கப்பட்டிருந்தது, அந்த சிங்காசனத்தில் மேல் ஒருவர் வீற்றிருந்தார். வீற்றிருந்தவர், பார்வைக்கு வச்சிரக்கல்லுக்கும் பதுமராகத் துக்கும் ஒப்பாயிருந்தார்; அந்தச் சிங்காசனத்தைச் சுற்றி ஒரு வானவில்லிருந்தது; அது பார்வைக்கு மரகதம் போல் தோன்றிற்று. வெளி.4:1-3 18இப்பொழுது இது அழகான, ஓ, அழகான பாடமாகும். இன்று காலையில் நான் இங்கே வருவதற்கு முன், ஆறாம் வசனத்தை தியானித்துக் கொண்டிருந்தேன். அப்பொழுது நான், “ஓ, என்னால் இவ்வசனத்தைவிட்டு அகலவே முடியவில்லையே; ஏனெனில் இந்த ஆறாம் வசனத்தில் ஒரு காரியம் உள்ளது, நாம் இந்த ஜீவன்களைக் குறித்து படிக்கையில் யாவரும் அதை மிகவும் கவனமாகக் கவனிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்'' என்று எண்ணினேன். மூல வேதாகமத்தைப் பார்க்கையில், இந்த ஜீவன்களைப் பற்றி வேறுபட்ட விளக்கங்கள் இங்கே இருக் கின்றன, ஒன்று ஒரு விதமாக மிருகமாகும், ஏனைய நான்கு மிருகங் களும் வேறு ஆகும். இம்மிருகங்களைக் குறித்து வித்தியாசமான விளக்கமானது தரப்பட்டிருக்கிறது. ஆனால் மூல வேதாகமத்தில் நான்கு ஜீவன்களைப் பற்றி வேறு வார்த்தை கூறப்பட்டுள்ளது. மிருகம் என்று சொல்லப்படுவதற்கு வேறு வார்த்தை, நான்கு ஜீவன்களுக்கு உபயோகிக்கப்பட்ட வார்த்தை யல்லாமல், வேறு விதமாக சொல்லப்பட்டுள்ளது கிரேக்க மொழியில் மிருகம் என்று சொல்லப்படுவது ”கெடியுள்ள மிருகம்'' என்று அர்த்தத்தில் தரப்பட்டுள்ளது. ஆனால் இந்த நான்கு ஜீவன்களைப் பற்றி ஜேம்ஸ் அரசனின் ஆங்கில வேதாக மத்தில்'' சரியான அர்த்தத்தில் மூலத்திலிருந்து மொழிபெயர்க்கப்படவில்லை. அவைகள் மூல கிரேக்கத்தின்படி மிருகங்கள் அல்ல. அச்சிருஷ்டிகள் எப்படிப்பட்டவை யெனில், அவைகள் மனித இனமுமல்ல, தூதருமல்ல. எனவே அவைகள் ''ஜீவனுள்ள சிருஷ்டிகள்'' ஆகும். அவைகளுக்கு நான்கு முகங்களும், நான்கு... உள்ளன. அவைகளை நாம் நேராக சுவிசேஷத்தோடு பொருத்திப் பார்ப்போம். பிறகு இன்றைக்குள்ள காரியத்தோடு அது எவ்வளவு பரிபூரணமாக பொருந்துகிறது என்பதையும் நாம் பார்க்கலாம். நான்கு என்ற எண் பூமிக்குரிய எண்ணாகும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அது தானே அங்கே அழகான தொரு பாடமாக உள்ளது. ஆனால் நாம் இப்பொழுது அதற்குள் போகப் போகிறதில்லை என்பதைக் குறித்து நான் நிச்சயமாக இருக்கிறேன். ஒருவேளை பின்னால் நாம் பார்க்கலாம். ஆனால் அது மிகவும் அற்புதமானதாக இருக்கிறது. 19பிறகு கர்த்தருக்கு சித்தமானால், நாம் இங்கு 19 இருந்தால், அடுத்த ஞாயிறு அன்று அதை நாம் மீண்டும் பார்க்க முயற்சிக்க லாம். நாம் இங்கிருந்து கிளம்பிச் சென்றுவிடும் முன்னர்; 4ம் அதிகாரத்தை முடிக்கப் பார்ப்போமாக. முதல் துவக்கமானது எங்கே என்பதை நாம் சரியாக அறியவில்லை. “இவைகளுக்குப் பிறகு'' என்ற இடத்தைப் பார்த்தோம். ''பிறகு'' என்றால் ''சபைக்காலங்கள் முடிவடைந்த பிறகு” என்று அர்த்தமாகும். பிறகு யோவான் “இங்கே ஏறிவா' என்று மேலே ஏறிப் போகும்படி அழைக்கப்பட்டான். சபைக்காலத்தில் உலகத்தில் நடைபெறப் போகிறவைகளை அவர் அவனுக்குக் காண்பித்தார். சபைக்காலங்களுக்குப் பிறகு, உன்னதத்திலிருந்து கிறிஸ்து வானவர், ''மேலே ஏறி வாருங்கள்'' என்று அழைக்கப் போகும் ஒவ்வொரு உண்மையான விசுவாசிக்கும் முன்னடையாள மாக, மேலே ஏறி வரும்படி அவன் சபைக் காலங்களுக்குப் பிறகு அழைக்கப்பட்டான். ”இங்கே ஏறிவா'' என்று அவன் அழைக் கப்பட்டான். அப்படித்தானே? அவனோடு பேசிய சத்தமானது எக்காள சத்தம் போன்று இருந்தது; அது தெளிவாக புரிந்து கொள்ளும்படியாக இருந்தது, அதே சத்தம் தான் அவனோடு பூமியில் இருந்தும் பேசியது. அவர் ஏழு பொன் குத்துவிளக்குகளின் மத்தியில் இருக்கிற வரையிலும், அவர் அவைகளிலிருந்து கொண்டு பேசிக் கொண் டிருந்தார் . ஓ , நான் அதை விரும்புகிறேன். ''குத்து விளக்குகளின் மத்தியிலிருந்து பேசிக் கொண்டிருந்தார்.“ பாருங்கள், அவர் குத்து விளக்குகளில் இருந்தார். அங்கிருந்து கொண்டு தம்முடைய சபையோடு பேசிக் கொண்டிருந்தார். பிறகு சபைக்காலங்கள் முடிவடைந்த பிறகு, அவர் பூமியை விட்டு பரலோகத்திற்குச் சென்று, தன்னால் மீட்கப்பட்டவர்களை மேலே வரும்படி அழைத் தார். ஓ, அது அழகாக இருக்கவில்லையா? ஓ, அது என் இருத யத்தை துள்ளச் செய்கிறது. 20நாம் இந்த காரியங்களைப் பற்றி போதிக்கையில், விசேஷமாக கர்த்தருக்குள் புதிதாக வந்திருக்கிற சகோதரி ஐனாவும் அவளுடைய கணவரும், ராட்னியும் அவரது மனைவியும், சார்லி தம்பதி யினரும் ஒரு விஷயத்தை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள். மற்றும் கர்த்தருக்குள் புதிதாக வந்திருக்கிற இளமையான வர்களாகிய ஏனைய அநேகர், நீங்கள் இன்னமும் ஆழமாகச் செல்ல வில்லை, நீங்கள் கர்த்தர் நல்லவர் தயையுள்ளவர் என்பதை மட்டும் ருசி பார்த்திருக்கிறீர்கள்; இவைகளை நீங்கள் நன்கு புரிந்து கொள்ள வேண்டியது அவசியமென்பதால் தான் உங்களுடைய விசு வாசத்தை நிலைநாட்டிடவும் வேண்டுமென்பதற்காகத்தான் இவைகளை போதிக்கிறோம். தேவன் எதையாவது கூறினால் அது நிச்சயமாக நிறைவேறும். அது தவறவே தவறாது. தேவன் உரைத்த வைகள் அவை நிறைவேறுவதற்குரிய வாய்ப்புகளுக்கு பல இலட்சக்கணக்கான மைல்கள் தூரத்தில் உள்ளது போல் தோன்ற லாம், ஆனால் தேவனோ, சரியானபடி அதை சம்பவிக்கப் பண்ணு கிறார். உங்கள் தோற்றத்தில் அது சாத்தியமில்லாதது போல் தோன்றக் காரணம், அவர் உங்களை சோதிப்பதற்காக அவ்வாறு செய்வதினால்தான். 21அவர் ஆபிரகாமுக்குக் கூறியதைப் பாருங்கள். ஆபிரகாம் அவனுக்காக இருபத்தைந்து ஆண்டுகள் காத்திருந்தான். அவர் அவனிடம், 2நீன் உள் மகனை மலையின் மேல் கொண்டு சென்று அவனை அங்கே கொன்று விடு,'' என்றார். அவர், ''அவனை இங்கே கொன்றுவிடு,'' எவ்விதம்..... “நான் உன்னை தேசங்களின் பிதாவாக்குவேன்.'' ஆபிரகாம் நூறு வயதாயிருந்தான், அவன் மனைவியோ தொண்ணூறு வயது டையவளாயிருந்தாள். அவர்களது ஒரே மகனை..... அப்பொழுது ஆபிரகாமுக்கு நூற்றுப் பதினைந்து வயது இருக்கும், எனவே அவன் கூறினான், ''அது எவ்வாறு நடக்கப் போகிறது, அவன் எவ்வாறு....? நான் முதிர்வயதுடைய வனாயிருக்கிறேன், அவளும் என்னைப் போல் முதிர்வயதுடைய வள்தான், நாங்கள் இருபத்தைந்து ஆண்டுகள் காத்திருந்த பிறகு..... நான் எழுபத்தைந்து வயதாயிருக் கையில் நீர் எனக்கு ஒரு வாக்குத்தத்தத்தைத்தந்தீர். இதோ இங்கே நான் நூறு வயதுள்ளவனாயிருக்கிறேன், சாராளோ அறுபத்தைந்து வயது டையவளாயிருக்கையில் ..... அவள் இப்பொழுது தொண்ணூறு வயதுடையவளாய் இருக்கிறாள். எப்படி? இந்தக் குழந்தையை நாங்கள் பெற்ற பிறகு.... நீர் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னால், அப்பொழுது நான் எழுபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னால், அப்பொழுது நான் எழுபத்தைந்து வயதுடையவனாய் இருந்தேன். சாராளோடு நான் இத்தனை ஆண்டுகள் வாழ்ந்துவிட்ட பிறகு, நான் குழந்தையை அடையப் போகிறேன் என்று நீர் கூறினீர். நானோ மூப்படைந்ததினால் இனப் பெருக்கத்துக்கு தகுதி யற்றவனாகவும், சாராள் மலடியாகவும் இருந்தாள். ஆகவே, பிறகு அது எவ்வாறு நடந்தது? என்னையும் அவளையும் இனப் பெருக்கத் துக்கு தகுதியுள்ளவர்களாக ஆக்கினீர். இவ்வாறாக நீர் எங்களுக்கு இக்குழந்தையைத் தந்தீர். இந்தப் பிள்ளையை இந்தப் பதினைந்து ஆண்டுகள் வரையிலும் வளர்த்து விட்டோம். இந்தக் குழந்தை யின் மூலமாக பூமியிலுள்ள புறஜாதிகள், மற்றும் எல்லா ஜாதி களும் ஆசீர்வதிக்கப்படுவார்கள் என்று கூறினீர். இப்படியாக நான் புறஜாதிகளுக்கும் கூட தகப்பனாவேன் என்று சொன்னீர்; பிறகு வரப்போகும் காலங்களில் கூட, கர்த்தாவே, நீர் என்னை வானத்தின் கீழே, ஒவ்வொரு ஜாதியினருக்கும், இக்குழந்தையின் மூலமாக என்னை தகப்பனாக ஆக்குவேன் என்று நீர் வாக்கருளியிருக்கிறீர். இந்தக் குழந்தையின் மூலமாக, இதன் சந்ததியில், ஒரு மீட்பர் வருவாரென்றும், அந்த மீட்பர் முழு மனித இனத்தையும் மீட்டுக் கொள்வார் என்றும் கூறினீர். ஆகவே நீர் அதையெல்லாம் எவ்வாறு நடத்தப் போகிறீர் கர்த்தாவே?“ என்று கேட்டிருப்பானா? அது ஆபிரகாமுடைய சிந்தையல்ல, அது ஆபிரகாமுடைய கேள்வியல்ல. கீழ்ப்படிதல்! ”நீர் எப்படி இதைச் செய்யப் போகிறீர்?'' என்று அவன் கேட்கவில்லை. ''அது என்னுடைய வேலையல்ல. நீர் அதைக் கூறினீர். உம்முடைய வார்த்தை சரியாயிருக்கிறது என்பதை நான் அறி வேன். நான் எழுபத்தைந்து வயதுடையவனாய் இருக்கையில், 'நீ பிரிந்து வந்து, நீ அறியாத நான் காண்பிக்கும் அந்நிய தேசத்திற்குள் சஞ்சரி' என்று கூறினீர். நான் இந்த தேசத்தில் இருபத்தைந்து ஆண்டுகளாக சஞ்சரித்து வருகிறேன்; வயோதிபனாக இத்தேசத்தில் விடப்பட்டு, என் மனைவியோடு வாழ்ந்து வருகிறேன்; அவள் சிறு பெண்ணாக இருந்த காலந்தொட்டு அவளோடு வாழ்ந்து வந்திருக்கிறேன்.'' அவள் அவனது ஒரு வழியில் சகோதரி முறை யானவளுங்கூட. “நீர் வாக்குத்தத்தம் செய்தபடியே இக்குழந் தையை எனக்குத் தந்தீர். மரித்தோரிலிருந்து எழுந்த ஒருவனைப் போல் அவனை பெற்றுக் கொண்டேன். இதையெல்லாம் நீர் செய் திருப்பதை நான் கண்ட பிறகு, இப்பொழுது அவனை பலியிடு என்று கூறும் பொழுது, நான் அவனை அவ்வாறு பலியிட்டு விட்டாலும் நீர் அவனை மரித்தோரிலிருந்து மீண்டும் உயிரோடு எழுப்பிட வல்லவராயிருக்கிறீர் என்பதை நான் அறிவேன்'' என்று கூறினான். ஓ, என்னே ! அவ்வாறு தான் நடக்கும். அவர் அதைச் செய்தார். 22அவன் முழுமையாக தேவனுக்கு கீழ்ப்படிந்த போது, அவன் தனது ஒரே மகனாகிய ஈசாக்கின் தலைமுடியை ஒன்று சேரப் பிடித்துக் கொண்டு, அவனைக் கொலை செய்வதற்காக ஈட்டியை எடுத்தான்; தேவன் தாமே இந்நிகழ்ச்சியின் மூலமாக நமக்கு ஒரு மாதிரியைக் காண்பிக்கிறார். எதற்காக அதை அவர் செய்தார்? அவர் அதைச் செய்ய வேண்டுவதில்லை. ஆனால் உங்களுக்காகவும் எனக்காகவும் அவ்வாறு செய்தார், ஏனெனில், மனிதருடைய இருதயங்கள் பொல்லாததாய் இருக்கும் இந்தப் பயங்கரமான நாட்களில், நாம் இந்தக் காரியங்களை உற்று நோக்கி, அவருடைய வாக்குத்தத்தத்தை அவர் காத்துக் கொள்கிறார் என்பதை அறிந்து கொள்ளும்படிதான் அவ்வாறு செய்தார். அவருடைய வாக்குத் தத்தத்தங்கள் எவ்வளவு தான் போதுமானதாகவும், சாத்தியமான தாகவும் இல்லாதது போல் தோன்றினாலும், தேவன் தேவனாகவே நிலைத்திருந்து, தான் செய்த ஒவ்வொரு வாக்குத்தத்தத்தையும் காத்துக் கொள்கிறார். 23அதைத் தான் நான், இந்த சுகமளித்தலின் ஆராதனையில் நாம் உட்கார்ந்து எழுந்து நிற்கையில், உங்களுக்குக் கூற முயன்று கொண்டிருக்கிறேன். நீங்கள் எழுந்து நின்று, “நான் சுகவீனமா யிருக்கிறேன்'' என்று கூறுகிறீர்கள். நீங்கள் வியாதியஸ்தராயிருக் கிறீர்கள் என்பதில் ஒரு சந்தேகமுமில்லை. ஆனால் தேவனோ தம்முடைய வாக்குத்தத்தத்தை காத்துக் கொள்ளுகிறவராயிருக்கிறார். அப்பொழுது அவர் இறங்கி வருவார். இப்பொழுது, பாருங்கள், அவர் உங்களை சுகமாக்கத்தக்கதாக, அவர் பலியாகி, பிராயச்சித்தத்தை உங்களுக்காக செய்தார். அதையே அவர் செய்திருக்கிறார். உங்களை அவர் கேட்பதெல்லாம், அப்பிராயச் சித்தத்தை நீங்கள் விசுவாசிக்க வேண்டுமென்பதே, ஆபிரகாமைப் போல் அதைப் பற்றி கண்டுகொள்ள வேண்டுமென்பதே, ஆபிரகாமைப் போல் அதைப் பற்றி கொள்ள வேண்டு மென்பதே. ''நல்லது, இன்னும் ஒரு நாள் தான் நான் ஜீவிப்பேன் என்று மருத்துவர் கூறினார்'' என்கிறீர்கள். நான் அதைப்பற்றி கவலைப்படவில்லை. அது அருமையாகத் தான் இருக்கிறது. அவ்வளவு தான் மனிதன் அறிந்துள்ளவை யாகும்; அதிகபட்சம் அவன் அறிந்ததெல்லாம் அவ்வளவுதான். ஆபிரகாம் தன் மகனை அங்கே பலிபீடத்தில் கிடத்தி விட்ட பிறகு, அவனை திரும்ப எவ்வாறு தனக்கு பெற்றுக் கொள்ளப் போகிறான், ஏற்கனவே தேவனுடைய வார்த்தையோ “நீ போய் உன் மகனை பலியிடு'' என்று கூறிவிட்டதே? அவன் எவ்வாறு அதைச் செய்யப் போகிறான்? அந்தக் கேள்விக்கே அங்கே இடமில்லை. அவ்வாறு செய்யும்படி தேவன் கூறிவிட்டார், அதுவே அதன் முடிவு. ”டாக்டர்கள் நான் குணமடைய மாட்டேன்? என்று கூறியிருக் கையில், நான் குணமடைவது எப்படி?'' என்று கேட்கலாம். அவ்வாறு நான் கேள்வி கேட்க எனக்கு தேவையில்லை. தேவ னுடைய வார்த்தையை அப்படியே ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். நீங்கள் சுகமாகப் போகிறீர்கள் என்பது உங்களுக்கு வெளிப்படுத்தப்பட்டவிட்ட உடனேயே, நீங்கள் குணமடையப் போகிறீர்கள் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அதைப் பெறுவதிலிருந்து உங்களை ஒன்றும் தடுத்துவிட முடி யாது. அது உண்மை. பாருங்கள்? 24ஆகவே ஆபிரகாம் பரிபூரணமாக கீழ்ப்ப டிந்த போது..... அவர் எவ்வாறு அதைச் செய்யப் போகிறார்? கடைசி வேளையானது வருவதற்கு இன்னும் ஐந்து நிமிடங்களே உள்ளன, இன்னும் மூன்று நிமிடங்களே உள்ளன; கடைசி இரண்டு நிமிடங்கள் வந்து விட்டது, கடைசி ஒரு நிமிடம், கடைசி முப்பது வினாடிகள், கடைசி வினாடியும் வந்துவிட்டது, மகனின் ஜீவனை எடுக்க தந்தையின் கையானது ஏற்கனவே ஓங்கியாகிவிட்டது, அந்த க்ஷணத்தில் தேவன், “நிறுத்து, நிறுத்து, அங்கேயே. நீ உண்மையிலேயே என்னை நம்புகிறதை நான் காண்கிறேன்; இப்பொழுது ஆபிரகாமே, நான் இதைச் செய்ததற்குக் காரணம் என்னவெனில்; எதிர்காலத்தில் பிரன்ஹாம் கூடாரத்தின் மக்கள் என்னை நம்பவேண்டும் என்பதற்காகத்தான். அவர்கள் என்னை சந்தேகப்படவே கூடாது. என்னை நம்ப வேண்டும் என்பதற்காகத் தான்'' என்றார். சரியாக அந்த வேளையிலே, அங்கே ஒரு பலியானது ஆயத்த மாக இருந்தது. அவர் அதை வீணாக உண்டாக்கவில்லை. இல்லை, அவர் அதை வீணாக உண்டாக்கவில்லை; சரியாக அந்த வேளையிலே தானே, ஒரு ஆட்டுக்கடாகத்தியது; ஒருசிறு ஆட்டுக்குட்டி ஒன்று, வனாந்திரத்திலே புதரிலே தன் கொம்புகள் சிக்கிக் கொண் டிருந்த நிலையிலே இருந்தது. இதைக் குறித்து எத்தனை தடவைகள் நாம் படித்திருக்கிறோம்! அவ்வாட்டுக்கடா எவ்வாறு அங்கே வந்தது? எல்லா காட்டு விலங்குகளைக் கடந்து எவ்வாறு அது அங்கே வந்தது? மக்கள் வாழும் பகுதிகளை விட்டு நூற்றுக்கணக் கான மைல்கள் தூரத்தில், சிங்கங்களும் ஓநாய்களும், நரிகளும் மற்றும் எல்லாவிதமான காட்டு விலங்குகளின் மத்தியில், தண்ணீரோ புற்களோ காணக்கிடையாத அந்த வறண்ட மலையின் மேல், அவ்வாட்டுக்கடா அங்கே என்ன செய்து கொண்டிருந்தது? தேவன் அதை சிருஷ்டித்து, அதை அங்கே வைத்தார். 25நாம் வாழும் நமது நாட்களில் அவரைக் காண்பதற்கு இயன்றி ருக்கிறது. இப்பொழுது இன்று காலையில், நான் என்ன கூற விரும்புகிறேனோ, அதைக் குறித்து கூற, அதற்காக நான் ஏராள மான தனிப்பட்ட காரியங்களைக் கூறியாக வேண்டியதிருக்கிறது. எனவேதானே, இதை ஆரம்பிப்பதற்கு முன்னர், நான் செய் கிறபடி, அதை இவ்வாறு ஆதாரப்படுத்துகிறேன். தனிப்பட்ட விஷயமாகத் தோன்றுகிற இவைகளை நீங்கள், அவைகள் தனிப் பட்ட காரியங்கள் என்பதாக எடுத்துக் கொள்ளக்கூடாது என்று நான் விரும்கிறேன். அவைகள் இங்கு எடுத்து இயம்பப்படுவதற்கு காரணம் என்னவெனில், அவைகள் உங்களுக்கு முன்னுதாரண மாக அமைந்து, அதைக் கொண்டு, உங்கள் விசுவாசமானது கிறிஸ்துவிலே உள்ள விசுவாசத்திலே பயபக்தியோடு அமைந்திருக்க வேண்டும் என்பதற்காகத்தான்; நீங்கள் அவரது வாக்குத் தத்தத்தின் மேல் இளைப்பாறுவதற்காகத்தான். ஏனெனில், தேவன் தனது வாக்குத்தத்தத்தை, அது எவ்வளவு பரிபூரணமாக இருக்க முடியுமோ, அந்த அளவுக்கு அதைக் காத்துக் கொள்கிறார், இப்பொழுது நமக்கு காண்பித்துக் கொண்டிருக்கிறார். 26யேகோவாயீரே என்று ஆபிரகாமால் அழைக்கப்பட்ட அவரை நோக்கிடுங்கள். எபிரெய பாஷையில் அதற்கு, “தேவன் தமக் கென ஒரு பலியை அளித்திடுவார்'' என்பதே அர்த்தமாகும். தேவனால் அதைச் செய்ய முடியும். அதற்கான அவருடைய வழியை அவர் உண்டாக்கினார். அவர் ஒன்றைக் கூறினாரெனில் ... நோவாவைக் குறித்து அவர் கூறினார்.... ''நல்லது, அது ஆபிரகாமுக்குத் தான் கூறப்பட்டது'' என்று நீங்கள் கூறலாம். இல்லை. அவர் காலங்கள் தோறும் கூறிக் கொண்டிருக்கிறார். இன்னமும் அவர் சொல்லிக் கொண்டேதான் இருக்கிறார். தேவன் நோவாவிடம், “மழை பெய்யப் போகிறது'' என்று கூறினார். அங்கே ஆகாயத்தில் ஒரு மேகம்கூட இல்லை. எங்கோ ஒரு சிறு நீரோடை, அல்லது சிறு ஊற்றைக் கொண்டு தான் அதற்கு முன் தேவன் தேசத்திற்கு நீர்ப்பாய்ச்சினார். அது தான் அன்றைக்கு இருந்த பெரிய நீரோடையாயிருந்தது. அன்றைக்கு அங்கே இருந்த பெரிய நீரோடையே அது தான். “எவ்வாறு ஆகாயத்தில் இருந்த மழையானது, தண்ணீரானது கீழே வரப்போகிறது?” என்று மக்கள் நோவாவை கேட்கின்றனர். ''உஷ்ணமான சூரியன் இருக்கும் வானத்தில் தண்ணீரானது ஏதாவது இருக்கிறதா என்பதை எனக்கு காண்பியுங்கள் பார்க்க லாம்'' என்றார்கள். “ஒரு பேழையை கட்டி உண்டாக்கு'' என்று தேவன் கூறினா ரெனில், மழை வருகிறது என்று சொன்னாரென்றால், பேழையைக் கட்டி உண்டாக்கி அதற்காக ஆயத்தமாகக் காத்து இருக்க வேண்டியது என் வேலை, ஏனெனில் அது நிச்சயமாக வருகிறது. அவர் யேகோவாயீரேயாக இருக்கிறார். அவரால் தண்ணீரை மேலே யிருந்து அளிக்க முடியும்'' என்று நோவா கூறினான். 27அவர் செய்திருக்கிற ஒரே காரியம் என்னவெனில், என்ன சம்பவிக்க போகிறது என்று அவர் அறிந்திருக்கிறாரோ, அது வந்து சம்பவிக்கத்தக்கதாக, மதியீனமும் அற்பத்தனமும் உள்ள மனி தனை, தன்னுடைய விஞ்ஞான அறிவைக் கொண்டு, அதே காரி யத்தை (அழிவுக்கேதுவாக) செய்து கொள்ள அவனை அனு மதித்து விட்டார். தேவன் ஒருபோதும் உலகை அழிக்கவில்லை. மனிதனே உலகை அழிக்கிறான். தேவன் ஒன்றையும் அழிக்கிறதில்லை. தேவன் எல்லாவற்றையும் அழியாமல் காக்கவே முயலு கிறார். அந்த மரத்தைக் கொண்டு, மனிதன் ஏதேன் தோட்டத்தில் செய்தது போலவே, மனிதன் தன் அறிவைக் கொண்டு தன்னையே அழித்துக் கொள்ளுகிறான். ஆகவே, ஏதோ ஒரு பைத்தியக்காரன் கையில் அணுசக்தியானது அகப்பட்டுக் கொள்கிறது. அவர்கள் அதைக் கொண்டு கிரியை செய்யக் கூடியதாக இருந்தது. ஏனெனில், இக்காலத்தில் நாம் கற்றுக் கொண்டிராத அளவுக்கு மிகவும் அறிவார்ந்த காரியங்களை அக்காலத்து மக்கள் உடையவர்களாயிருந்து, அவர்கள் பெரிய காரியங்களைச் செய் தார்கள். இக்காலத்தில் அந்த அளவுக்கு செய்வதற்கு இன்னும் மூன்று அல்லது நான்கு ஆண்டுகள் அதற்கு கூடுதலான ஆண்டு கள் ஆகக்கூடும். அவர்கள் பிரமிடுகளையும் ஸ்பிங்க்ஸ் என்னப் படும் எகிப்திய கல்லறைக் கோபுரங்களுக்கு அருகிலுள்ள சிறகு டைப் பெண்முகச் சிங்க உருவச் சிலைகளையும் அக்காலத்தில் கட்டினார்கள். அதைப் போல் நாம் இக்காலத்தில் செய்ய முடிய வில்லை. நம்மால் அம்மாதிரியானவைகளைப் போல் திரும்பச் செய்ய முடியாது. அவைகளைச் செய்ய நமக்கு வழியே இல்லை, அணுசக்தி வல்லமை இருந்தாலொழிய இயலாது. பெட்ரோலிய சக்தி, மின்சார சக்தி ஆகியவைகளால் அவைகளிலுள்ள ஒரு கற் பாளங்களைக் கூட தூக்க முடியாது, அதை தரையை விட்டு மேலே தூக்கிட முடியாது. அக்கற்பாளங்களில் சில, ஒரு நகரத்தின் நான்கு தெருக்களுக்குட்பட்ட வட்டகையின் நீளம் எவ்வளவு இருக்கு மோ அந்த அளவுக்கு ஆகாயத்தில் உயரமாக இருக்கக் கூடியதாக இருக்கும். ஒரு கற்பாளமானது ஒரு பில்லியன் டன் அளவுக்கு எடையுள்ளதாக இருக்கும். எவ்வாறு அவர்கள் அதை நகர்த்திக் கொண்டு வந்து அதில் பொருத்தினார்கள்? அவர்களுக்கு இருந்த அறிவைப் பாருங்கள். (ஒரு பில்லியன் என்பது நூறு கோடியாகும்). 28அக்காலத்தில் அவர்கள், அணுகுண்டுகளை ஒருவர் இன்னொரு வருடைய பாதுகாப்பு வளையத்தினுள் பறந்து சென்று தாக்கும்படி விட்டனர். ஏனெனில், 'நோவாவின் நாட்களில் நடந்தது போல, அந்நாட்களில் இருந்தது போல உள்ள நாகரிகமும், அந்த விதமான புத்தி சாதுர்யமான மக்களும், நோவாவின் நாட்களில் இருந்தது போலவே, மனுஷகுமாரனுடைய வருகையின் நாட்களிலும் நடக்கும்''. அந்நாட்களில் இருந்தது அப்படியே திரும்ப நடக்கும். பார்த்தீர்களா? இங்கே மெக்ஸிகோவில் சமீபத்தில், புதைபொருள் ஆராய்ச் சிக்காக அவர்கள் தோண்டிய பொழுது, நோவா காலத்து ஜலப் பிரளயத்திற்கு முந்தைய காலத்தைய நவீனமாக நீர் வழங்கும் அமைப்பு இருப்பதைக் கண்டு பிடித்திருக்கிறார்கள். அதைக் குறித்து பத்திரிக்கையில் நீங்கள் பார்த்திருக்கிறீர்கள். அதுதானே நவீனமாக நீர் வழங்கும் அமைப்பாகும். (நீர் வழங்கும் அமைப்பு (Water works) என்பது, நீர் சேமித்து வைத்து, குழாய்கள் வழியாக அதை விநியோகம் செய்வதாகும் - மொழி பெயர்ப் பாளர்). இக்காலத்தில் நமக்கு இருப்பதைப் போல் நவீனமான தாகும் அது. அது பூமியில் மிகவும் ஆழத்தில் புதைந்து போய் விட்டிருக்கிறது. அணுகுண்டு போன்ற ஒன்று அதை மூடிவிட்டது. அது வெடித்து, அவ்வாறு அது பூமியில் புதைந்து போய்விட்டது. 29“நோவாவின் நாட்களில் நடந்தது போல்,'' புத்தி கூர்மை யுடைய மனிதன், அணுசக்தி வல்லமையை உடைய புத்தி சாலியான மனிதன், அன்றைக்கு இருந்தான். அவனால் பிரமிடு களையும், ஸ்ஃபிங்கஸ்களையும் கட்டியெழுப்ப முடிந்தது. 'அந்த நாட்களில் நடந்தது போலவே இந்நாட்களிலும் இருக்கும்'' ஆனால் இந்நாளில் அவருடைய கிரியை உரிய வேளைக்கு முன் பாகவே விரைந்து முடிக்கப்படும். ஏனெனில் எடுத்துக் கொள்ளப் படுதலில் வெளியே எடுக்கப்பட வேண்டியவர்கள் அங்கே இருக் கிறார்கள். ஏனோக்கைப் போல் தீங்கு நாட்களுக்கு முன்பாகவே எடுக்கப்பட வேண்டிய மக்கள் உள்ளனர். இக்காலையில் நாமே அந்த வகுப்பாராக இருக்கிறோம். ஜலப்பிரளயத்தினூடே நோவா மேலே கொண்டு செல்லப்பட்டது போலவே, நாமும் மேலே கொண்டு செல்லப்படுவோம். இதை நீங்கள் மறந்துவிட வேண்டாம். ஒரு துளி மழை விழும் முன்னர், ஆகாயத்தில் ஒரு துளி இருப்பதற்கு முன்பு, நோவா பேழையை செய்து முடிப்பதற்கு முன்னர், ஏனோக்கு பரம வீட்டுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டான். ஏனோக்கு மரணத்தை ருசிபாராமல் மேலே எடுத்துக் கொள்ளப்பட்டான். ஒருநாள் அவன் நடக்க ஆரம்பித்து, இறுதியில், பூமியின் புவி ஈர்ப்பு விசை யானது அவன் மேல் உள்ள பிடியை நழுவவிட்டு விட்டது. அவன் ஒரு அடி சற்று உயரமாக எடுத்து வைக்கையில், அடுத்த அடி சிறிது உயரமாக எடுத்து வைக்கையில், மற்றொரு அடி சிறிது உயரமாக எடுத்து வைக்கையில், முதல் காரியம் என்னவெனில், ''உலகமே, உன்னிடமிருந்து விடை பெறுகிறேன்'' என்று கூறினான். அவன் மேலே மேலே நடந்து சென்று மகிமைக்குள் பிரவேசித்து விட்டான். நோவா சுற்றுமுற்றும் பார்த்து, ஏனோக்கை எங்கும் காண முடியாத பொழுது, ஏனோக்கு எங்கே சென்றான் என்பதை அவன் அறியவில்லை. அப்பொழுது அவன், “இப்பொழுது பேழையைக் கட்டுவதற்கான வேளையானது வந்துவிட்டது'' என்று கூறினான். பாருங்கள்? மீதியாயிருப்பவர்களை ஜலப்பிரளயத்தினின்று காக்கும்படி பேழையைச் செய்வதற்குப் போய் விட்டான். 30இங்கும் அதே காரியம்தான் நடக்கிறது. சபையானது பர லோகத்தினுள் எடுத்துக் கொள்ளப்பட்டுவிட்டது. உயிர்த்தெழுந்த வர்களுக்கு முன்னடையாளமாக யோவான் சபையோடு மேலே கொண்டு வரப்பட்டிருக்கிறான். அதைக் குறித்து நேற்றிரவில் நாம் பார்த்தோம். அவனைத் திரும்பிப் பார்க்கும்படி பூமியில் கூறிய அதே சத்தம் தான் மேலே ஏறிவரும்படி கூறினது. ஓ, ஒவ்வொரு கிறிஸ்தவர்க்கும் அதுதான்! சார்லி, அதே சத்தம்தான். உம்மை கெண்டக்கியில் வைத்து, “திரும்பு'' என்று ஒரு நாளிலே அழைத்த அதே சத்தம் தான், ஒரு நாளிலே உம்மை ”இங்கே ஏறிவா'' என்றும் அழைக்கிறதாய் இருக்கிறது. அதைப் பற்றி, சகோதரன் ஈவான்ஸ் அவர்களே, நீங்கள் மகிழ்ச்சியாயிருக்க வில்லையா? “திரும்பு' என்று சொன்ன அதே சத்தம் தான் ”இங்கே ஏறிவா'' என்று அழைக்கிற சத்தமாக இருக்கிறது. ஓ, என்னே ஒரு உண்மையானதாக இருக்கிறது! தெளிவாக விளங்கும், எக்காளத்தைப் போன்றதொரு சத்தம் இது. “திரும்பிடு வாயாக, என்னை சேவி, நான் இருக்கும் இடத்திற்கு நீயும் மேலே ஏறி வா'' என்கிறது அச்சத்தம். 31அங்கே அவன் மரித்த பரிசுத்தர்க்கு முன்னடையாளமாக நிற்கிறதைக் கண்டோம். மரித்து, உயிர்த்தெழப்போகும் பரிசுத்த வான்களுக்கு மோசே அடையாளமாய் இருக்கிறான். எலியாவோ, எடுத்துக் கொள்ளப்படும் தன் குழுவோடு கடைசி நாளிலே அங்கே நின்று கொண்டு இருக்கிறான் . யாவரும் கர்த்தராகிய இயேசுவுக்கு முன்பாக நிற்கிறார்கள். யோவான் அதை வெளிப் படுத்தினான். அவன் மரிப்பதில்லையென்றும், அவருடைய வருகையை காணும் நாள் வரையிலும் அவன் உயிரோடிருந்தால் அவர்களுக்கென்ன என்றும் இயேசுவானவர் சீஷர்களிடத்தில் கேட்டார். அதைப் பற்றி ஒரு அபிப்பிராயத்தை அவர்கள் எழுப்பி விட்டார்கள். சபைக்கென சில நிமிட நேரம், இப்பொழுது, மிகவும் ஆழ மாகப் போக வேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஒவ்வொரு வரும் அறிவர்... ஒவ்வொருவரும் தேவனோடு தனிப்பட்டதொரு ஜீவியத்தைச் செய்கின்றனர். அதுதானே அவரவர் தனிப்பட்ட முறையில் கொண்டுள்ள விஷயமாக இருக்கிறது; ஆவிக்குரிய காரியங்கள் உங்களை மகத்தான இடங்களுக்கு கொண்டு செல் கிறது, அங்கே உள்ள காரியங்களைப் பற்றி உங்களால் பேசக்கூட துணிவிருக்காது. இக்காரியத்தை நான் என்னுடைய சிறிய தாழ்மையான ஊழியத்தில் அநேக வேளையில் கண்டிருக்கிறேன். அவ்வேளை களில் நான் ஏதாவது ஒரு காரியத்தைக் கூறியிருப்பேன். ஆனால் அதை ஏன் கூறினேன் என்பதை நானே அறியமாட்டேன். எனக்கே தெரியாது, அது சரியானதாகவும் பார்வைக்கு தோன்றாது, அப்படி யிருந்தும், யாராவது ஏதாவது சொல்வார்கள்; ஆனால் நானோ அதைக் கவனித்துக் கொண்டேயிருந்து அது எவ்வளவு பரிபூரண மாக இருக்க முடியுமோ அந்த அளவுக்கு சரியாக அப்படியே வந்து சம்பவிப்பதை காண்பேன். தேவன் அதை சம்பவிக்கப் பண்ணுவார். நான் எதையாவது கூற விரும்பினால், நான் கூறுவ துண்டு, “நல்லது, இப்பொழுது, ஒரு நிமிடம் தாமதியுங்கள், அந்த நபர், இன்னார் இன்ன காரியம் அவருக்கு வந்து சம்ப விக்கும், அது அந்த விதமாகத்தான் இருக்கும்'' என்று. அதை நான் ஏன் கூறினேன் என்பது எனக்கே கூட தெரியாது. பிரதான மான காரியம் என்னவெனில், அது அந்த விதமாகத்தான் இருக்கும், தேவன் அதைச் செய்கிறார். 71. இந்த சீஷர்கள் ”ஓ இயேசு கூறினார், அந்த சீஷன் மரிப்ப தில்லை என்று'' என்று கூறினார்கள். ஆனால் இயேசு அவ்வாறு ஒரு போதும் கூறவில்லை. இயேசு கூறினார், “நான் வரும் வரையில் இவனிருக்கச் சித்த மானால் உனக்கென்ன?'' என்று. 32ஆனால் சீஷர்களுக்குள்ளே இப்படி ஒரு பேச்சு அடிபட்டது. பிறகு இயேசு யோவானை கீழிருந்து மேலே எடுத்துக் கொண்டு வந்து, முழு சம்பவங்களின் முன்காணலைக் காண அனுமதித்தார், அவன் கர்த்தருடைய வருகையின் ஒத்திகையையும், சபையையும், மற்றும் அனைத்து சம்பவங்களின் நியமத்தையும் முன் கூட்டியே கண்டான். தேவன் என்ன செய்ய வேண்டியிருந்தது என்பதைப் பாருங்கள், அவன் தெய்வீகமானவன் என்பதை அவர்கள் காணத் தக்கதாக, இருபத்து நான்கு மணி நேரம் அவனை அவர்கள் கொதிக்கும் எண்ணெயில் போடும்படி செய்வித்தார்; ஆத்து மாவை தெய்வீக ஆவியானது நிறைத்திருக்கிறது. புறம்பேயுள்ள மண்ணான மானிட சரீரமானது, அதுவும் தெய்வீக ஆவியால் மிகவும் தெய்வீகமாக நிறையப்பெற்று, அதினால் இருபத்து நான்கு மணி நேரம் எண்ணெய் கொதித்தலானது அவனை பொசுக்க வேயில்லை. ஒரு மனிதனில் இருக்கும் பரிசுத்த ஆவியை சுட்டுப் பொசுக்கி அவனைவிட்டு அகற்ற முயன்றால் அது நடக்காது. பிறகு, யோவானை பத்மூ தீவில் போட்டுவிட்டார்கள், அங்கிருந்து கொண்டு அவன் வெளிப்படுத்தின விசேஷப் புத்தகத்தை எழுதினான்; பின்பு, அங்கிருந்து திரும்பி வந்து அநேகம் ஆண்டுகள் பிரசங்கித்தான். நிச்சயமாக, அவன் ஒரு கெட்ட பெயரைப் பெற்றுக் கொள்ள வேண்டியதாயிருந்தது. அவன் ஒரு குறி சொல்லுகிறவன், அவன் ஒரு பில்லி சூனியக்காரன்'' என்று அவனை அழைத்தார்கள். யோவான் ஒரு சூனியக்காரன் என்று அழைக்கப்பட்டான் என்பதை எத்தனை பேர் அறிவீர்கள்? நிச்சயமாக அப்படித்தான் அவன் அழைக்கப்பட்டான். இயேசுவுங்கூட அவ்விதமான தொரு பெயர் சூட்டித்தான் அழைக்கப்பட்டார். பாருங்கள்? இவைகளைப் பற்றி உலகம் ஒன்றுமே அறியாது என்பதைப் பாருங்கள். 'அவர் சிந்தையை மனோவசியத்தால் படித்து அறிபவர்'' என்று அழைக் கப்பட்டார். பாருங்கள்? 'அவன் கொதிக்கும் அந்த எண்ணெ யையே பில்லி சூனியத்திற்குட்படுத்தி, அதினால் அது அவனை சுட்டுப் பொசுக்க முடியாதபடி செய்து விட்டான், அப்படிப் பட்டதொரு சூனியக்காரன் அவன். அந்த எண்ணெய்க்கே அவன் பில்லி சூனியம் செய்துவிட்டான்'' என்று அவர்கள் கூறினார்கள். அவர்களுடைய கத்தோலிக்க மதக் கோட்பாடுகளை அவன் ஏற்றுக் கொள்ளாததினால் அவனை இவ்வாறு அழைத்தார்கள். அவ்வளவுதான். 33அவன் ஒரு தேவ ஊழியக்காரனாக இருந்தான், அவன் தாழ்மை யுள்ளவனும், அவன் காத்துக் கொண்டதான எளிய ஒரு ஊழி யத்தை உடையவனாயிருந்தான். அவர்களுடைய பெரிய காரியங் களை அவனால் சகித்துக் கொள்ளவே முடியவில்லை, ஆகவே தேவன் அவனை காத்து வந்தார். அவனை பாதுகாத்துக் கொண்டார். பரிசுத்த மார்ட்டினிலும் தேவன் அவ்வாறே செய்தார். ஐரேனியஸையும் அப்படித்தான். அவ்வாறு காலங்கள் தோறும் அப்படி செய்து வந்தார். இந்தக் காலத்திற்குள்ளும் வந்து, அவர் இன்றைக்கும் அதே காரியத்தைத்தான் செய்கிறார். இப்பொழுது, இதை நீங்கள் மறந்துவிட வேண்டாம், என்னவெனில், தேவன் மகத்தான அசை வைக் குறித்து வாக்குத்தத்தம் செய்திருக்கிறார், மகத்தானதும், வல்லமை பொருந்தியதுமான கிரியைகளை வாக்குப் பண்ணி யிருக்கிறார். நீங்கள் எழுதிக் கொண்டு வருகிற குறிப்பில் இதையும் எழுதிக் கொள்ளுங்கள். மனிதன் எவைகளை “வல்லமையும் மகத்துவமும் உடையது'' என்று அழைக்கிறானோ, அதை தேவன் ”மதியீனமானது'' என்று அழைக்கிறார். மனிதன் எதை “பைத் தியக்காரத்தனமானது'' என்று அழைக்கிறோனோ, அதையே தேவன் ”மகத்தானது'' என்று அழைக்கிறார். அதை மறந்துவிடா தீர்கள். பாருங்கள், அதை மறக்க வேண்டாம். வரும் ஆண்டுகளில் அது உங்களுக்கு உதவி புரிந்திடும்; ஏனெனில் நாம் எப்பொழு தும் மகத்தானதொன்றையே எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். மகத்தானதையே நாம் எப்பொழுதும் பெற்றுக் கொள்ளுகிறோம். ஆனால் உலகத்து மக்கள் அதை அறியமாட்டார்கள். நோவாவின் நாட்களில் இருந்தவர்களும் கூட அதை அறியவில்லை; யோவா னின் நாட்களில் இருந்தவர்களும் கூட அதை அறியவில்லை; இயேசுவின் நாட்களிலும், அப்போஸ்தலரின் நாட்களிலும், மற்றும் வேறு எந்த நாட்களிலும் கூட அவர்கள் ஒரு போதும் அறியவேயில்லை. 34ஜோன் ஆஃப் ஆர்க் என்பவளும் (Joan of Arc) கூட ஒரு எளிய பரிசுத்தவாட்டியான பெண்மணியாயிருந்தாள். அவள் ஒரு சிறு பெண்ணாக இருக்கையில், தேவன் அவளோடு தரிசனங்களில் பேசினார், ஒரு தூதன் அவளோடு பேசினான். கத்தோலிக்க சபை என்ன கூறியது தெரியுமா? 'அவள் ஒரு சூனியக்காரி'' என்று. அவளை கழு மரத்தில் கட்டி, சுட்டெரித்துக் கொன்று விட்டனர்; கத்தோலிக்க மதகுருமார்கள் அதைச் செய்தனர். அவளைக் கொன்ற னர், அவள் “சூனியக்காரி'' என்றழைக்கப்பட்டு கொல்லப் பட்டாள். அதற்கு இருநூறு ஆண்டுகளுக்குப் பின்னர், அவள் ஒரு சூனியக்காரி அல்ல என்றும், அவள் கிறிஸ்துவின் ஒரு சிஷி என்றும் கண்டுபிடித்தனர். அதே காரியத்தைத் தான் அவர்கள் அனைத்து பரிசுத்தவான் களுக்கும் செய்தனர். ''உங்கள் பிதாக்களில் யார் அவர்களை உபத்திர வப்படுத்தாதிருந்தார்கள்? உங்கள் தீர்க்கதரிசிகள் யாரையாவது ஏற்றுக் கொண்டதுண்டா? நீங்கள் வெள்ளையடிக்கப்பட்ட சுவர்கள். தீர்க்கதரிசிகளின் கல்லறையை வெளியே அலங்கரித்து, அழகுபடுத்துகிறீர்கள். ஆனால் நீங்கள்தான் அவர்களை அதற்குள் போடுவித்தது'' என்று இயேசு கூறினார். ஊ! என்னே ! என்னே ! அவர்கள் மேல் குறை கூற வேண்டும் என்ற நோக்கோடு அவர் அவ்வாறு கூறவில்லை, அவர்களுக்கு உள்ளதைச் சொன்னார். 35''விரியன் பாம்புக்குட்டிகளே, வரும் கோபத்திற்குத் தப்பித் துக் கொள்ள உங்களுக்கு வகை காட்டினவன் யார்'' என்று யோவான் கேட்டான். ''ஆபிரகாம் எங்களுக்குத் தகப்பன் என்று உங்களுக்குள்ளே சொல்லத் தொடங்காதிருங்கள்'' என்றான். ''நாங்கள் இன்ன பெரிய ஸ்தாபனத்தை சேர்ந்த வர்கள்'' என்று கூறிக் கொள்ளாதிருங்கள். “நீர் ஒரு கிறிஸ்தவரா?'' என்று கேட்டால், “ஓ, நான் ஒரு மெதோடிஸ்டு, நான் ப்ரெஸ்பிடேரியன், நான் பெந்தெகொஸ்தேயினன்'' என்கிறார்கள். அந்தவிதமான காரியம் அதில் இல்லை. பனிக்கட்டிக்கும் சூரிய வெளிச்சத்திற்கும் என்ன தொடர்போ, அதே அளவு தொடர்புதான் இந்த விதமாகக் கூறு வதற்கும் கிறிஸ்தவத்திற்கும் உள்ள சம்மந்தமும். நீங்கள் ஒரு கிறிஸ்தவர் என்றால், நீங்கள் மறுபடியம் பிறந்த தேவனுடைய ஊழியக்காரனாவீர். 36இப்பொழுது, யோவான் வந்த பொழுது, அதைப் பற்றி நேற்றிரவில் பார்த்தோம். இப்பொழுது நினைவில் கொள்ளுங்கள், நீங்கள் இதற்கு வரும்பொழுது .... காரியத்தின் இணைத்துப் பின் னும் வகையை அல்லது முறையைக் குறித்து நான் உங்களுக்குக் கூறினேன். உலகத்திற்கு இதுவரை கிடைத்திராத கடுமையான அசைவு கிடைக்கிறது, இப்பொழுது அது நடக்கிறது. சபை உலகைக் குறித்தே நான் கூறுகிறேன்.82. சந்தேகத்துக்கிடமின்றி, யோவானின் நாட்களில், இயேசுவின் நாட்களில், பெரிய பண்டிகைகளும், அவர்கள் நாட்களில் பெரிய பேச்சாளர்களும் இருந்திருப்பார்கள் என்பதை நினைவில் வைத் திருங்கள். அவர்கள் பல்லாயிரக்கணக்கான மக்கள் கூட்டத்தை கவர்ந்திழுக்கக் கூடியவர்கள். காய்பா ஒரு கூட்டத்தைக் கூட்டி யிருந்தால் என்ன செய்திருப்பான்? எருசலேமியர் அனைவரையும் இஸ்ரவேலரையும், மூலை முடுக்குகளிலிருந்தெல்லாம் வரவழைத் திருப்பான். 'ஓ, காய்பா இன்னின்ன காரியத்தைச் சொன்னால், அது மகத்தானதாக இருக்கும்'' என்று ஒருவன் சொல்லி யிருப் பான். 'ஓ ரபீ, சங்கைக்குரிய இன்னாரே, டாக்டர் அவர்களே, பிஷப் அவர்களே, வேத வாக்கியங்களை விசுவாசிக்கிறீரா? வேத வாக்கியங்களை விசுவாசிக்கிறீரா?'' ''நிச்சயமாக நான் வேதவாக்கி யங்களை விசுவாசிக்கிறேன் நான் ஒரு பிரசித்தி பெற்ற பண்டிதர்'' என்று கூறலாம். 37“நல்லது, இப்பொழுது வேதம் கூறுகிறது, ஒரு காலம் வரும், அப்பொழுது, 'சகல பர்வதங்களும் ஆட்டுக்குட்டிகளைப் போல் துள்ளும், விருட்சங்களெல்லாம் கைகொட்டும், பள்ளமெல்லாம் உயர்த்தப்பட்டு, சகல மலையும் குன்றும் தாழ்த்தப்படும். வனாந் திரத்திலிருந்து கூப்பிடுகிறவனுடைய சத்தத்தால் அது நடக்கும். ரபீ அவர்களே, சங்கைக்குரிய கலாநிதி , போதகர் அவர்களே, நீர் இதை விசுவாசிக்கிறீரா?'' “நிச்சயமாக, நான் அதை விசுவாசிக்கிறேன்'' ''அது எவ்வாறு சம்பவிக்கும்?“ ''ஓ, தேவன் ஒரு நாளிலே, ஒரு வல்லமையான மனிதனை பூமியின் மேல் அனுப்பவார். ஓ, அவன் பெரியவனாயிருப்பான். அவன் வனாந்தரத்திலிருந்து கூப்பிடுகிறவனுடைய சத்தமாயிருப் பான், அல்லது அவன் மேசிவாயின் வருகைக்கு முன்னோடுகிற வனாக இருப்பான். அவன் வரும் பொழுது... என் சிந்தையில் அதைப் பற்றி சந்தேகமேயில்லை. அவன் எதற்காக பரலோகத்தி லிருந்து வருவான், அவன் எதற்காக தேவாலயத்திற்கு வருவான் எனில், அவன் வந்து, 'நாம் இந்த ரோமர்களையெல்லாம் அகற்றி விட்டு, அவர்களை கொன்று போடுவோம். அனைத்து ரோமர்களையும் முறியடித்துவிடப் போகிறோம்' என்று கூறுவான். அதன்பிறகு அவன் 'மேசியாவே இறங்கி வாரும்' என்பான். அதன்படி மேசி யாவும் கீழே இறங்கி வருவார், அப்பொழுது, நாம் நமது பட்ட யங்களையெல்லாம் மண்வெட்டிகளாகவும், அரிவாள்களாகவும் இடிப்போம், இனிமேல் யுத்தங்களே இருக்காது.'' ஊ, ஊ, மேற்கண்டவாறுதான் அவர்கள் வியாக்கியானம் செய்தார்கள். 38ஆனால், அது வந்தபொழுது, என்ன சம்பவித்தது? என்ன நடைபெற்றது? அங்கே பரலோகத்தின் வெளிப்படையான காட்சி ஒன்றும் ஏற்படவில்லை. அவர்கள் அவ்விதமான காட்சி ஒன்றை யும் காணவில்லை. அவர்கள் எதிர்பார்த்த அந்த ஒருவன் வந்தான், ஆனால் அவர்கள் அதைக் காணவில்லை. பாருங்கள்? எப்பொழுது மலைகளெல்லாம் ஆட்டைப் போல் துள்ளியது? எப்பொழுது உயர்ந்த ஸ்தலங்களெல்லாம் தாழ்த்தப்பட்டன, பள்ளத்தாக்குகளெல்லாம் உயர்த்தப்பட்டன? விகார முகத்தையுடைய ஒரு பிரசங்கி வனாந்திரத்திலிருந்து புறப்பட்டு வந்தான், அவனுக்கு எழுத்துக்களின் அகரவரிசை கூட தெரியாது. வரலாற்றின்படி, அவன் ஒன்பது வயதுள்ளவனாயிருக்கையில், வனாந்திரத்திற்குள் சென்று, முப்பது வயதாகும் வரையிலும், வெளியுலகுக்கு தோன்றவே இல்லையாம். அவன் வெட்டுக்களிகளையும், காட்டுத் தேனையும் புசித்து உயிர் வாழ்ந்தான். அந்த வகை வெட்டுக் கிளிகள் நீளமானவைகள் ஆகும். அவர்கள் எல்லாக் காலங்களிலும் அதை சாப்பிடுவார்கள். நீங்கள் அதை இங்கே சூப்பர் மார்க்கெட்டுகளில் வாங்கலாம். அது கெடுதல் என்று நீங்கள் நினைக்க வேண்டாம். இங்கே இந்த சூப்பர் மார்க்கெட்டுகளில், பம்பிள்பீ என்னப்படும் ஒரு வகை ஈக்களும், தேனீக்களும், வெட்டுக்கிளிகளும், வாலில் கலகல வென்று ஒலி செய்யும் முள் வளையங்களுடன் கூடிய ரேட்டில் ஸ்நேக் என்னப்படும் பாம்புகள், மற்றும் உங்களுக்குத் தேவை யான இன்னபிறவும் விற்கப்படுகின்றன. 39ஆகவே, அவன் வெட்டுக்கிளிகளையும், காட்டுத் தேனையும் புசித்து உயிர் வாழ்ந்தான். நல்ல ஒரு ஆகராம் தான் இது! ஆனால் அவனோ தேவனுடைய வல்லமையால் காக்கப்பட்டான். கழுத் தப்பட்டை திரும்பியிருக்கிற நிலையில் அவன் உடை உடுத்தியிருக் கவில்லை. நேற்றிரவில் ஒருவர் கூறியது போல் சகோதரன் பார்னெலொ அல்லது வேறு யாரோ கூறினார்களோ அதைப் போல், அவன் மதகுருமார்கள் அணியும் நீண்ட, வாலுள்ள அங்கியை அணிந்திருக்கவில்லை. நான் கூறியபடி, ஒருவேளை அவன் மூன்று அல்லது நான்கு மாதத்திற்கு ஒருமுறைதான் வனாந்தரத்தில் குளித்திருப்பான், அது பற்றி எனக்குத் தெரியாது. நாம் தினந் தோறும் குளிக்க வேண்டியவர்களாய் இருக்கிறோம். அவன் பார்ப் பதற்கு அவ்வளவு நன்றாக தோற்றமளிக்கவில்லை. அவனுக்கு பிரசங்க பீடமே இல்லை அவன் பெரிய நகரங்களுக்குச் சென்று பெரிய கூட்டங்களை நடத்திடவில்லை. அவன் யோர்தான் நதிக் கரையில் முழங்கால் வரையிலும் சேறு படிந்திருந்தவனாய் அங்கே நின்று கொண்டு , “விரியன் பாம்புக் குட்டிகளே, வருங் கோபத் திற்குத் தப்பித்துக் கொள்ள உங்களுக்கு வகை காட்டினவன் யார்?” என்று கூறினான். ஆம், அப்பொழுதுதான், உயர்ந்த ஸ்தலங்க ளெல்லாம் தாழ்த்தப்பட்டன, பள்ளமெல்லாம் உயர்த்தப்பட்டன. ஊ, ஊ. ஆம், ஐயா. 40பின்பு, முதலாவதாக, மேசியா தன் தூதர்களோடு இறங்கி வந்து ஆலயத்தின் மேல் விதானத்தின் மீது இறங்கியிருந்திடுவார் என்று அவர்கள் எதிர்பார்த்தார்கள். அவர் இறங்கி வருவதற் காகவே அவ்விதானத்தை அவர்கள் கட்டி வைத்திருந்தார்கள். இன்றைக்கு தேசங்கள் தோறும், பெரிய ஸ்தலங்களையெல்லாம் நாம் கட்டி வைக்கிறோமே அதைப் போலத்தான். அவர் எப் பொழுது வந்தார்? அவர் அந்த ஒவ்வொரு ஜெப ஆலயங்களை யும், ஸ்தாபனங்களையும் தாண்டிச் சென்று, அவர்களை கடந்து சென்று, ஒரு எளிய முன்னணைக்குப் போய்விட்டார். அவர்கள் அவரை அங்கே போகும்படி செய்துவிட்டார்கள். இன்றைக்கும் அவ்வாறுதான் உள்ளது. அவர்கள் அவர் அவ்வாறு செய்யும்படி கட்டாயப்படுத்தி விட்டார்கள். அவர் ஸ்தாபனத்திற்கு புறம்பானவராக இருக்கும்படி அவரை கட்டாயப் படுத்தி விட்டார்கள். ஏனெனில் அவருடைய செய்தியானது ஸ்தாபனங்களோடு ஒத்துப் போகவில்லை. இன்றைக்கு அவரு டைய ஊழியக்காரர்களால் பிரசங்கிக்கப்படும் அவருடைய செய்தி யானது ஸ்தாபனங்களுக்கு ஏற்படையதாக இராமல் அதற்கு புறம்பானதாக இருக்கிறது, ஏனெனில், ஸ்தாபனங்கள் அவரை வெளியே தள்ளிவிட்டன. அவர் வாசலில் நின்று, உள்ளே வரு வதற்காக கதவைத் தட்டிக்கொண்டிருக்கிறார் என்று வேதம் கூறுகிறது. பாருங்கள்? தன்னுடைய சொந்த சபையிலேயே அவர் இந்த நிலைக்குட்படுத்தப்பட்டிருக்கிறார். அந்த நிலையில் தான் அது உள்ளது. இன்றைக்கும் அதேவிதமாகத்தான் உள்ளது என்பதைப் பாருங்கள். 41எனவே, மனிதனுக்கு பெரிதாகத் தோன்றும் எதுவும் தேவனுக்கு முன்பாக சிறியதாக இருக்கிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள். எனவே தான் உங்களுக்கு அதிகமான மலர்கள் தேவையில்லை. தேவன் திரும்பி வரும்பொழுது, இயேசு திரும்பி வரும்பொழுது, நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். அந்த தோட்டப் பாதையில் இருந்த சுத்தம் செய்கிற பெண் இருந்தாளே, அவளுக்கு நேர்ந்ததைப்போல், ஊ, ஊ, நீங்கள் ஆச்சரியப்பட போகிறீர்கள். ஒன்றும் வெளியே சொல்லாமல், தன் இரகசியங்களை தனக்குள் அடக்கி வைத்துக்கொண்டு, தேவனுக்கு முன்பாக தாழ்மையான நடக்கிற அந்த மனிதன். நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். அது .... 42சமீபத்தில், நியாயத்தீர்ப்பை குறித்து பிரசங்கித்தேன். “நியாயத்தீர்ப்பில் காத்திருக்கும் ஆச்சரியங்கள்'' என்று தலைப்பில் பிரசங்கித்தேன். அங்கே ஒரு மது காய்ச்சுபவனைப் பார்க்க ஆச்சரிய மாயிருக்காது, அவன் தான் போகப் போவதை அறிந்தேயிருக் கிறான். நிச்சயமாக, பொய்யனும், விபச்சாரக்காரனும் அங்கே போவதைப் பற்றி எள்ளளவும் ஆச்சரியப்பட வேண்டியதில்லை. ஆனால் காணப்போகும் ஆச்சரியம் என்னவெனில், ஏமாற்றம் என்னவெனில், தாங்கள் பரலோகத்திற்கு போகப் போவதாக நினைத்துக் கொண்டிருக்கிறவர்கள், நியாயத்தீர்ப்பில் நிற்கப் போவதுதான் ஆச்சரியமாயிருக்கப் போகிறது. நல்லது, கொஞ்சம் பொறுங்கள், என் தாயார் இந்த சபையைச் சேர்ந்தவர், என் தந்தையும் இந்த சபையைச் சேர்ந்தவர் தான், எனது தாத்தா, எனது பாட்டி ஆகியோரும் அப்படித்தான். என் வாழ்நாள் முழுவதும் நான் அதின் உறுப்பினராக இருக்கிறேன்'' என்று கூறும் நபர்கள் அவர்கள். ''நான் உங்களை அறியேன், அக்கிரமச் செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்று போங்கள்.'' அந்நாட்களில், இருந்த எளிய வயோதிப சிமியோன் வந்த பொழுது, அவனைப்பற்றி யாருக்கும் தெரியாது, கீர்த்தியில்லாத வன், வேதத்தில் அவனைக் குறித்து நமக்கு ஒன்றும் தெரியவில்லை. ஆனால், அவனுக்கு பரிசுத்த ஆவியால் வெளிப்படுத்தப்பட்டிருந் தது'' என்று வேதம் கூறுகிறது. ''கர்த்தருடைய கிறிஸ்துவைக் காணுமுன் அவன் மரணத்தைக் காணமாட்டான்' என்று அவனுக் குச் சொல்லப்பட்டிருந்தது. எனவே அவன் அங்கே இருக்கிறான். 43பிறகு, யோவான் ஸ்நானனை, அவன் யாரென்று பாருங்கள். அவன் ஒரு வினோதமானவனாகக் காணப்பட்டான், காட்டிலே வாழ்கிற ஒரு காட்டு மனிதனைப் போல் காணப்பட்டான். அவனுக்கு வெளிப்படுத்தப்பட்டது. அவன் செய்தியைப் பிரசங் கித்துக் கொண்டு வந்தான். அதைப் பாருங்கள். அந்த எளிய அன்னாள் யார்? மட்டமான ஜெபர்சன்வில்லைப் போலவேயிருந்த நாசரேத் தூரிலிருந்த கன்னிமரியாளைப்பாருங்கள். அப்பட்டணத்தில் பாவம் பெருகியிருந்தது, ஆனால் அவளோ, தன்னை பரிசுத்தமாக காத்துக் கொண்டான், ஒரு நாளில் மேசியாவானவர் வரப் போகிறார் என்று அவள் அறிந்திருந்தாள். பாருங்கள்? தச்சனாகிய யோசேப்பு தன் மனைவியை இழந்திருந்தான், எனவே அவன் இந்தப் பெண்ணை விவாகம் செய்ய அவளை நாடிக் கொண்டிருந்தான். அந்த சந்தர்ப்பத்தில் தான் பரிசுத்த ஆவி யானவர் அங்கே வருகிறார். பின்பு, உலகமானது அங்கே வந்து, இழிவான பெயர்களை அதற்கு சூட்டியது, “ஊருளும் பரிசுத்தர்'' என்றும் ”பெந்தெகொஸ்தே' என்றும், முறைகேடாக அவளுக்கு அக்குழந்தை பிறந்திருக்கிறது என்றும் இழிவான பெயர்களை சூட்டினார்கள். அவர்கள் எவ்வாறு விசுவாசித்தார்கள், அது அவ்விதமாகத்தான் இருக்குமோ என்று தோற்றத்தில் இருந்தது. ஆனால் தேவனோ, ஞானிகள், கல்விமான்கள் ஆகியோரின் கண்களை குருடாக்கும்படியும், கற்றுக் கொள்ள விரும்பும் பால கருக்கு வெளிப்படுத்தவுமே அவ்வாறு செய்தார். 44சற்று நேரத்தில் நான் ஒரு விஷயத்தை எடுத்து இயம்புவதற்கு போதுமான பின்னணி ஏற்படுத்தப்பட்டு விட்டது என்று நான் நம்புகிறேன். நான் உங்களுக்கு காண்பிக்கப் போகிறேன். இந்த எண்ணெயைப் பார்க்கிறீர்களா? நான் உங்களுக்கு உரைத்த பின்னணி, அது மனிதன் அல்ல, அது தேவனாயிருக்கிறது, என்பதைக் காணச் செய்யும். நான் இதற்கு அதை சுட்டிக் காட்டுவேன். “இங்கே ஏறிவா'' என்று அழைத்தது அந்த சத்தம் தான். அவன் திறந்த வாசலைக் கண்டபொழுது, அவன் எக்காளம் போன்ற சத்தத்தைக் கேட்டான். உடனே யோவான் ஆவிக்குள் ளானான். அவன் ஆவிக்குள்ளான உடனேயே, காரியங்கள் நடைபெறு வதைக் காண ஆரம்பித்தான். நீங்கள் ஆவிக்குள்ளான உடனே, மேலான காரியங்களைக் காண ஆரம்பிக்கிறீர்கள். முதலாவதாக நீங்கள் ஆவிக்குள்ளாகுங்கள். அது சரிதானே? 45நீங்கள் ஒரு பந்து விளையாட்டுக்கு சென்றால், எனக்கு தளக் கட்டுப்பந்து விளையாட்டு (Baseball). நிச்சயமாக ரொம்ப பிடிக்கும்'' என்று கூறுவீர்கள். நீங்கள் முன்வரிசை இருக்கை ஒனறைப் பெற்றுக்கொண்டு , யாங்கீஸ் அல்லது புல்டாக் ஆகிய ஏதாவது ஒரு குழுவினர் விளையாடுவதை பார்த்துக் கொண்டிருக் கிறீர்கள். அங்கே அவர்கள் பெரிய விளையாட்டு ஒன்றை விளையாடுகிறார்கள். உங்களுடைய குழு தோற்கப் போகிற வேளையில் திடீரென அதற்கு வெற்றி வருகிறது என்றால், அதைப் பார்த்துக் கொண்டிருக் கிறவர்கள் யாவரும் குதிக்கிறார்கள், கத்துகிறார்கள், ஆதரவான மகிழ்ச்சியொலி எழுப்புகிறார்கள். 46நானே இவ்விளையாட்டு ஒன்றுக்குச் சென்று அவர்கள் செய்வதையெல்லாம் பார்த்திருக்கிறேன். நான் ஒரு நாள் இந்த பேஸ் பால் என்ற பந்து விளையாட்டு ஒன்றுக்கு சென்றேன். அந்த விளையாட்டில் மட்டை பிடிப்பவர் ஒரு ஓட்டம் எடுக்கும்படி எல்லாத் தளத்தையும் தொடும்படி அடிக்கும் ஒரு அடியை (home run) அடித்தார். அப்பொழுது எனக்கு முன்பாக நாரினால் ஆன தொப்பியை அணிந்திருந்த ஒரு மனிதன் பரவசமடைந்தார், அவர் தன் தொப்பியை கையில் எடுத்துக் கொண்டு, தன் கழுத்துப் பட்டையை உயர்த்தி விட்டுக் கொண்டு, அவருக்கு மிகவும் குதூகலமான வேளை உண்டாயிருந்தது. அவர்தான் என்ன செய்கி றோம் என்பதையே அறியாமல், தன்னையே மறந்து பரவச நிலையை எய்தினார். தன் காலால் உதைத்துக் கொண்டு, வெற்றியைக் குறித்து ஆரவாரத்தைச் செய்து கொண்டு, கத்திக் கொண்டும் குதித்துக் கொண்டும் இருந்தார். அவர் அப்பந்து விளையாட்டை மிகவும் நேசித்தார் என்று நான் கருதினேன். அதனால்தான் அப்படி யெல்லாம் செய்தார். அவர் ஒரு பேஸ் பால் விளையாட்டு ரசிகர். எப்படி ஒரு சிகரெட் ரசிகர் அல்லது விஸ்கி ரசிகர் இருக்கிறாரோ, அதைப் போலத்தான். நான் இயேசுவின் மேல் மிகுந்த நேசம் கொண்டுள்ளவன். அவருடைய ரசிகன், நான் அதை நேசிக்கிறேன். இயேசுவின் மேல் பிரியங்கொண்டுள்ள ரசிகராக இருந்தால், நீங்கள் அதை அறிவீர்கள். எதன் பேரிலாவது ரசிகனாக இருப்பது. எனவே, அப்பொழுது அந்த ஆள் “நான் ஒரு பேஸ் பால் விளையாட்டு ரசிகன்'' என்று கூறுகிறதை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடியும். அவனது குழு தோற்கப் போகிற கட்டத்தில் மறுபடியும் தலை நிமிர்ந்து, அது ஆட்டத்தை ஜெயித்து விட்ட தென்றால், அந்த மனிதனுக்கு இருக்கிற பெருமிதம் மிக அதிகம். ''அவர் பேஸ்பால் விளையாட்டை நேசிக்கிறார். அவர் ஏதோ ஆகிவிட்டார்'' என்று கூறுவர். “நீங்கள் அதை விரும்பவில்லை? ஏன்? உங்களிடத்தில் ஏதோ கோளாறு உள்ளது. ஒவ்வொரு நல்ல பேஸ்பால் ....'' என்று நீங்கள் கூறுவீர்கள். 'அந்த ஆளுக்கு என்ன நேரிட்டு விட்டது? அவரிடத்தில் ஏதோ தவறு உள்ளது. பாருங்கள், அங்கேயே அந்த ஆள் உணர்ச்சி வசப்படாமல் உட்கார்ந்திருக்கிறார்'' என்று கூறுவீர்கள். 47இப்பொழுது இரண்டையும் இரண்டையும் ஒன்று சேருங் கள். இப்பொழுது பாருங்கள். ஓ, நீங்கள் இயேசுவின் மேல் பிரிக்க முடியாத அளவுக்கு நேசம் கொண்டுள்ளவராக இருப்பின், அப்பொழுது, தேவனுடைய வார்த்தைகளில் பரிசுத்த ஆவியானது தோய்ந்திருக்கிறது என்பதை நீங்கள் உணர்ந்து, அப்பொழுது, ஏதோ உள்ளிலிருந்து சத்தமிடுகிறது. ஓ, நீங்கள் மெய்மறந்த நிலையில் ஆகிவிடுகிறீர்கள். இதை கூறுவதனால் இங்கே அருகாமையில் அமர்ந்திருக்கிற இம்மனிதர் என்னை மன்னிப்பார் என்று நான் நம்புகிறேன். உயரமாக கட்டுமஸ்தான கறுப்பு நிற தலை முடியையுடைய அவர் இங்கே உட்கார்ந்து கொண்டிருக்கிறார். ஓர் இரவில் ஹாலில் நின்று கொண்டிருந்தார், ஒரு உதவியை நாடி, அவருக்கு ஆசீர்வாதம் வேண்டி. அந்த இளைஞர் நிலை பரிதாபமாக இருந்தது, அவருக்கு மோசமான வேளை உண்டாயிருந்தது. அவருடைய மனைவி அவரை விட்டு பிரிந்து சென்று விட்டாள். அவரோடு விவாகரத்து கோரி வழக்கும் தொடர்ந்திருக்கிறாள். ஏனெனில் அவர் கர்த்தராகிய இயேசுவை மிகவும் நேசித்தார். யாரோ அவரிடம் இயேசுவைப் பற்றி சில காரியங்கள் கூறியிருந்திருக்கிறார். அதினால் அவர் இயேசுவின் மேல் பிரியராகிவிட்டார். அவர் யுத்தத்தில் கலந்து கொண்டு, மேலெல்லாம் துப்பாக்கி சூடுபட்டவர்; திரும்பி வீட்டுக்கு வந்து மனைவி பிள்ளைகளோடு இருந்தார். அப்பொழுது, அவர் கர்த்தரிடம், தான் அவரை இனிமேல் சேவிப்பதாக வாக்குக் கொடுத்தார், அதிலிருந்து கர்த்தர் அவரை ஆசீர்வதிக்க ஆரம் பித்தார்; அவர் தேவனோடு தன் ஜீவியத்தை நேர்ப்படுத்திக் கொண்டார்; அதினால் அவரது மனைவி அவரை விட்டு விலகி, விவா கரத்து கோரி அவர் மேல் வழக்கு தொடர்ந்து, பெற்று, அவரை விட்டு விலகினாள். அவரை தனிமையாக விட்டுவிட்டு அவள் விலகிவிட்டாள். ஆனால் இத்தனைக்கும் பிறகு அவர் பிரியராகவே தான் இருந்தார். 48ஓர் இரவில் அவர் அங்கே நின்று கொண்டிருக்கும் பொழுது, யாரோ ஒருவர் இயேசுவைப் பற்றி சில காரியங்களை அவரிடம் கூறி, அவர் எவ்வளவு பெரியவர் என்று கூறியிருக்கிறார். அதற்கு அவர் 'ஓ மகிமை'' என்று கூறிக் கொண்டே தன் கரங்களை திடீ ரென்று உற்சாக மேலீட்டால் பெலத்தோடு சுவற்றைக் குத்தினார். அப்பொழுது அவரது கைமுஷ்டி சுவற்றில் பதிந்து கொண்டு விட்டது. தான் என்ன செய்தோம் என்பதையே அவர் அறிய வில்லை. அவரது கைமுஷ்டி சுவற்றில் பதிந்து கொண்டு விட்டது. ''சகோதரன் பில் அவர்களே, நான் இதற்கான கிரயத்தை செலுத்தி விடுகிறேன்'' என்று கூறினார். அந்நேரத்தில் சகோதரன் வுட்ஸ் அவர்கள் வந்து, உடைந்து போன சுவற்றை பழுது பார்த்தார். சகோதரன் பென் அவர்களே, நாங்கள் அதைப்பற்றி வருத்தப்பட வில்லை, நீங்கள் இயேசுவின்மேல் பிரியராயிருப்பதின் நிமித்தமாக நாங்கள் மகிழ்ச்சியாயிருக்கிறோம். பாருங்கள்? பரிசுத்த ஆவியானவர் உங்களுக்கு ஒரு காரியத்தைச் செய்யும் பொழுது, உங்களால் அமைதியாக உட்கார்ந்து இருக்க முடியாது, உங்களிலிருந்து ஏதோ பொங்கி பொங்கி வழிகிறது. ஆமென். வ்யூ! கிறிஸ்துவின் பிரியரை நிச்சயமாக ஒன்று பிடித்துக் கொள்கிறது. நீங்கள் கர்த்தரை நேசிக்கும் பொழுது, உங்களிலி ருந்து ஏதோ ஒன்று புறப்பட்டு பற்றிக்கொள்ளுகிறது, கர்த்தருக் கென பசிதாகமுள்ளவராக ஆகிறீர்கள். “நீதியின் மேல் பசி தாகமுள்ளவர்கள் பாக்கியவான்கள், அவர்கள் நிரப்பப்படு வார்கள்'' என்று இயேசு கூறினார். நீங்கள் அதைப் பெற்றிருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, நீங்கள் தாகமுடையவராக இருந்தால் கூட அதுவே போதுமானது. எத்தனை பேர் இன்னும் அதிகமாக தேவனுடைய காரியங்களைப் பெற்றுக்கொள்ள விரும்புகிறீர்களா? நல்லது, தேவனுடையவற்றிலிருந்து இன்னும் அதிகமாக நீங்கள் வேண்டுமென்று விரும்புவதின் காரணம் என்ன வெனில், அவ்வாறு இருப்பதற்காக நீங்கள் ஆசீர்வதிக்கப் பட்டிருக்கிறீர்கள். நீங்கள் இன்னும் அதைப் பெற்றிராத போதிலுங் கூட, நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டே இருக்கிறீர்கள். பசிதாகமுள்ள வர்கள் பாக்கியவான்கள். பசிதாகமுடையவராக இருப்பதற்கே நீங்கள் பாக்கியம் பெற்றிருக்கிறீர்கள். ஏனெனில் நீங்கள் அது வேண்டும் என்று விரும்புகிறீர்கள், அதினால் நீங்கள் பாக்கிய வான்கள். ஏனெனில், அநேகர் அந்தப் பரமகாரியம் வேண்டும் என்றே விரும்புவதில்லை. 49அன்று இரவிலே நான் கொடுத்த என்னுடைய பிரசங்கத்தை நீங்கள் ஞாபகத்தில் வைத்திருக்கிறீர்களா? மனவளர்ச்சி மூளை வளர்ச்சி குன்றி ஒரு மனிதன் பரிசுப் பொருளையுடைய பெட்டியை வைத்துக்கொண்டு, அதினுள் இருந்த பரிசுப்பொருளை வீசி எறிந் தானே! பார்த்தீர்களா? பரிசு வைக்கப்பட்ட பெட்டி வேண்டாம், பரிசை எடுத்துக்கொள்ளுங்கள். சரி. ''உடனே ஆவிக்குள்ளானேன்; அப்பொழுது இதோ, வானத்தில் ஒரு சிங்காசனம் வைக்கப்பட்டிருந்தது. அந்தச் சிங்காசனத்தின் மேல் ஒருவர் வீற்றிருந்தார்.'' வெளி. 4:2 நேற்று இரவில் நாம் பார்த்தோம் என்று நம்புகிறேன்; முதலில் சிங்காசனத்தின்மேல் ஒருவரும் இல்லை, இப்பொழுது ஒருவர் அந்த சிங்காசனத்தின் மேல் உட்கார்ந்திருக்கிறதானது, இயேசு வானவர் தனது சபையோடுகூட மகிமைக்குள் வந்துவிட்டார் என்பதைக் காண்பிக்கிறது. அவர் தன்னுடைய சொந்த சிங்காசனத் தின்மேல் உட்கார்ந்தார். ''ஒருவர் சிங்காசனத்தின்மேல் வீற்றிருந் தார்.'' அது சபைக்காலத்திற்கு பிறகு நடைபெறும் ஒரு காரிய மாகும். அதைப்பற்றி சற்று நேரம் கழித்துப்பார்ப்போம். “இன்றைக்கு அவரது சிங்காசனம் எங்கேயிருக்கிறது?'' என்று நீங்கள் கேட்கலாம். சகோதரர் நெவில் அவர்களே, நான் அதைக் கடந்து சென்றுவிட்டால்கூட, சற்று நேரம் கழித்து, இன்றைக்கு அவரது சிங்காசமானது எங்கேயிருக்கிறது என்கிற கேள்வியை என்னிடம் கேளுங்கள். அது வரையில் நான் எடுத்துக்கொள்வேன் என்று நான் நினைக்கிறேன். அவர் இப்பொழுது தன் சிங்காசனத்தில் வீற்றிருக்கவில்லையெனில், அவரது சிங்காசனமானது இப் பொழுது எங்கேயிருக்கிறது? அவர் இப்பொழுது தனது சிங்கா சனத்தின் மேல் வீற்றிருக்கவில்லை, இல்லை, ஐயா. 50சரி, இப்பொழுது : ''வீற்றிருந்தவர், பார்வைக்கு வச்சிக்கல்லுக்கும் பதுமராகத் துக்கும் ஒப்பாயிருந்தார்; அந்தச் சிங்காசனத்தைச் சுற்றி ஒரு வான வில்லிருந்தது; அது பார்வைக்கு மரகதம் போல் தோன்றிற்று.“ வெளி. 4:3 இப்பொழுது நாம் மூன்றாம் வசனத்தை எடுத்துக் கொள் வோம். சிங்காசனத்தின்மேல் வீற்றிருந்தவர் பார்வைக்கு வச்சிரக் கல்லுக்கு ஒப்பாயிருந்தார். அதாவது, அவரை நோக்கிப் பார்க்கும் பொழுது, அவர் அத்தகைய பிரகாசமாயும், சௌந்தர்யமாயும் இருந்தார் என்பதே. ஓ, நான் அவரைக் காண விரும்புகிறேன், நீங்கள் விரும்புகிறீர்களா? 51ஒரு நாளில் ... சகோதரி கேடில், சகோதரி ஹோவர்ட் கேடில் அவர்களை உங்களில் அநேகருக்கு ஞாபகமிருக்கும். அந்த தெருவுக்கப்பால் நான் வசித்து வந்தேன். என் மனைவி அங்கே ஒரு அறையில் உட்கார்ந்திருந்தாள். அவள் அப்பொழுது குளிரால் வாடினாள் என்பது எனக்கு ஞாபகத்திற்கு வருகிறது. நான் எழுந்தேன்; என்னிடம் மங்க்கீஸ்டவ் என்னப்படும் ஒருவகை அடுப்பு இருந்தது; அடுப்பில் ரொட்டி சுட்டுக்கொண்டிருந்தேன். அப்பொழுது மிகவும் அதிகமாகக் குளிர் அடித்துக்கொண்டி ருந்தது, காற்றும் வீசியது. அது குளிர் காலமாயிருந்தது. தரையின் மேல் பனி படிந்திருந்தது, புகைக்கூண்டையும் அந்த பனிக்காற்று விட்டுவைக்கவில்லை. எனவே, என் ஜீவனை காப்பாற்றிட என்னால் அவ்வடுப்பை எரிய வைக்க முடியவில்லை. நான் ஏறத்தாழ நிலைகுலைந்து போகும் நிலைக்கு ஆளாகிவிட்டேன். நான் பற்ற வைக்க முயன்றால், அது மீண்டும் காற்று வீசி அணைத்துவிடும். என் மகன் பில்லியும், என் மனைவியும் குளிரினால் வாடினார்கள். நான் ஒரு கணப்பை மூட்ட முயன்றுகொண்டிருந்தேன். அப் பொழுது நான் வானொலியைத் திருப்ப நேர்ந்தது, அப்பொழுது நான் சில நிமிடங்களில் உடல் உஷ்ணமடைந்தேன், சகோதரி கேடில் அவர்கள் வானொலியில் தூரத்தில் அத்தேசத்தை, அக்கரை யிலுள்ள அத்தேசத்தை, நான் அடையும் பொழுது, நான் இயேசுவைக் காண விரும்புகிறேன். நீங்கள் விரும்பவில்லையா?-'' என்ற பாட்டை பாடிக்கொண்டிருந்தார்கள். நான் தரையில் நடுவில் உட்கார்ந்து, அழ ஆரம்பித்தேன். அச்சகோதரி மிக இனிமையான குரலில், பாடும் பறவையின் இனிய குரலில் (Mocking bird என்னப்படும் அமெரிக்கப் பறவை மற்ற பறவைகளின் குரலைப் பாவனை செய்து பாடக் கூடியது- மொழிபெயர்ப்பாளர்) பாடிக்கொண்டிருந்தார்கள். நான் அக்கரைத் தேசத்தில் செல்லும்பொழுது, அச்சகோதரியின் இனிய பாடலைக் கேட்க விரும்புகிறேன். “நான் இயேசுவைக் காண விரும்புகிறேன், நீர் விரும்புகிறீரா?” என்பதே அப்பாடல். “ஓ தேவனே, நான் ஒரு நாளில் அவரைக்காண விரும்பு கிறேன், மலர்களெல்லாம் அருகில் மிதந்து வருகையில் நான் இயேசுவைக் காண விரும்புகிறேன்'' என்று நான் எண்ணினேன். அழகாக, பட்டொளி வீசிப்பறந்திடும் அவரை அவரது சிங்கா சனத்தின்மேல் பார்ப்பது எப்படியாயிருக்கும் யோவான் நின்ற அதே இடத்தில் நானும் நிற்க விரும்புகிறேன், எனவே, நானும் அவரை நின்று நோக்கிப் பார்த்திட முடியும். 52இக்காலையில் இங்கு இருக்கிற கறுப்பு நிறத்தவரான நண்பர்கள் சார்பில் நான் இதைச் சொல்லப்போகிறேன். சில காலத்திற்கு முன்பு, அடிமைப்படுத்தும் பழக்கம் இருந்த சமயமது; அங்கே ஒரு வயதான கறுப்பின மனிதர் இருந்தார், அவர்கள் வழக்கமாக போகக்கூடிய ஒரு சிறிய இடத்திற்கு அவர் சென்றார். கெண்டக்கியில், அவர்கள் வீடுகளுக்குப்போய், இளைஞர் உட்பட ஆர்கன் போன்ற கருவிகளை வாசித்து பாடல்கள் பாடுவ துண்டு. மம்மா காக்ஸ் மற்றும் உள்ளவர்களுக்கு இது ஞாபகமிருக்கும். அவ்வாறு போவது, அது அவர்களுக்கு ஞாபகமிருக்கும். யுடிக்காவிலும், மற்றும் சுற்றிலும் உள்ள கிராமப் புறங் களிலும் அவர்கள் அவ்வாறு செய்வதுண்டு. இப்பொழுதோ ஒரு க்வார்ட் (ஒரு க்வார்ட் என்றால் கால் காலன் - மொழிபெயர்ப் பாளர்) விஸ்கிக்காக ராக் அண்டு ரோல் பார்ட்டிகளுக்கு அவர்கள் சென்றுவிடுகிறார்கள். 53ஆனால் அக்காலத்திலோ அவர்கள் ஞானப்பாட்டுக்களை பாடினார்கள். இவ்வாறு, மிகப்பழைய ஞானப்பாட்டு அவர்கள் பாடிக்கொண்டிருக்கையில், வயதான கறுப்பு நிறத்தவர் ஒருவர் இரட்சிக்கப்பட்டார். கர்த்தர் அவரைப் பிரசங்கிக்க அழைத்தார். அடுத்த நாளே அவர் தோட்டப்பகுதிக்குச் சென்று, அங்கிருந்த அடிமைகளிடம், ''கர்த்தர் நேற்றிரவு என்னை இரட்சித்தார், என் சகோதரர்களுக்குப் பிரசங்கிக்க என்னை அழைத்துள்ளார்'' என்று சொல்லிக்கொண்டிருந்தார். இறுதியாக அந்த தோட்டப்பகுதிக்கு உரிமையாளரின் காதுக்கு இவ்விஷயம் எட்டியது. அவன் அவரை அழைத்து, ''சாம்போ , நீ என்னுடைய அலுவலகத்திற்கு இங்கே வா'' என்றான். “சரி, ஐயா'' என்று கூறி அவர் அலுவலகத்திற்கு நடந்து சென்றார். முதலாளியானவன், “என்ன இது நான் கேள்விப்படுகிற விஷயம்? நீ என்னுடைய அடிமைகளின் மத்தியில் போய் கர்த்தர் என்னை விடுவித்தார்' என்று பரப்புரை செய்துகொண்டிருக்கிறா யாமே, அது என்ன?” என்று வினவினான். “ஆம், ஐயா'' என்று கூறினார். ''முதலாளி, நான் உங் களுடைய அடிமைதான். உங்களுடைய பணத்தால் நான் கிரயத் திற்கு வாங்கப்பட்டவன். ஆனால் தேவன் என்னை நேற்றிரவில் விடுதலையாக்கிய விதம் எப்படியெனில், இயேசுவானவர் என்னை பாவம், நிந்தை, மரணம் ஆகியவற்றின் வாழ்க்கையிலிருந்து என்னை விடுதலையாக்கினார். அவர் என்னை விடுதலையாக்கினார்'' என்று கூறினார். ''சாம்போ, உண்மையாகவே நீ அந்தக் கருத்தில்தான் கூறுகிறாயா?'' என்று கேட்டான். “அப்படித்தான் கூறினேன்'' என்றார். 54“நீ தோட்டங்களிலுள்ள உமது ஜனங்களின் மத்தியில் இங்கே எங்கிலும் பிரசங்கிக்கப்போவதாக அவர்கள் கூறக் கேட்டேனே'' என்றான் முதலாளி. “ஆம், ஐயா. நான் என் ஜனங்களுக்கு சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கவேண்டும் என்பதுதான் என்னுடைய நோக்கம், அதைத்தான் செய்ய தீர்மானிக்கிறேன்'' என்றார். ''உண்மையாகவே, நீ அந்தக் கருத்தில்தான் கூறுகிறாயா?'' என்று முதலாளி கேட்டான். அப்படிச் செய்வதற்குத்தான் நான் கூறினேன்'' என்று பதிலளித்தார். 'என்னோடு நீ நீதிமன்றத்திற்கு வா, நான் உனக்கு உன்னுடைய விடுதலையையும் கொடுக்கப்போகிறேன்; நீ என்னிடத்திலிருந்து விடுதலையாகியிருக்கிறாய்; நீ இனிமேல் அடிமை என்பதிலிருந்தே விடுதலையாகி இருக்கிறாய். நான் உன்னை விலைக்கு வாங்கினேன். நீ என்னுடையவன், நீ உன்னுடைய ஜனங்களுக்கு சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கும்படி நான் உன்னை விடுதலையாக்குகிறேன்'' என்று முதலாளி கூறினான். அவன் நீதிமன்றம் சென்று, அடிமையை விடுதலையாக்கும் சாசனத்தில் கையொப்பம் செய்தான், அதினால் சாம்போ விடுதலையானார். இனிமேல் அவர் ஒரு அடிமையாக யாருக்கும் விற்கப்பட முடியாது. சுவிசேஷத்தைப் பிரசங்கிக்க வேண்டி அவர் சுதந்திர மனிதனாக ஆகிவிட்டார். 55அநேகமாண்டுகளாக அவர் தன் சகோதரர்கள் மத்தியில் பிரசங்கித்தார். அவருடைய ஊழியத்தில் அநேக வெள்ளையரும் கூட மனந்திரும்பினர். ஒருநாள் இந்த வயோதிப மனிதர் மரிக்கும் வேளை வந்தது. முப்பது அல்லது நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக அவர் பிரசங்கித்திருக்கிறார். அவர் மரிக்கவேண்டிய வேளை வந்தபோது, அவருடைய அநேகமான வெள்ளைச் சகோதரர்களும் அவருடைய அறையில் குழுமிவிட்டனர். இரண்டு அல்லது மூன்று மணி நேரத்திற்கு அவர் மரித்துப் போய்விட்டார் என்றே அவர்கள் நினைத்தனர். பிறகு கடைசியாக அவர் விழித்து அறையில் சுற்று முற்றும் பார்த்தார். அவர் கூறினார். “சாம்போ , எங்கே போயிருந்தீர்'' அவர் கூறினார்: “ஓ, நான் மீண்டும் இங்கே வந்துவிட்டேனா, நான் மீண்டும் இங்கே வந்து விட்டேனா” என்று. “என்ன விஷயம், சாம்போ ” என்று கேட்டனர். “அக்கரையிலுள்ள அத்தேசத்திற்கு நான் சென்றிருந்தேன்'' என்று கூறினார். ''அதைக் குறித்து எங்களுக்குச் சொல்லும்'' என்றார்கள். 'நான் அவருடைய பிரசன்னத்தில் இப்பொழுதுதான் இருந்தேன். நான் அங்கே நின்றிருந்தபோது, ஒரு தூதன் என்னிடம் நடந்துவந்து, ''உன்னுடைய பெயர்தான் சாம்போவா என்று கேட்டான். “ஆம், ஐயா. அதுதான் என்னுடைய பெயர்'' என்றேன். ”உள்ளே வா'' என்றான் தூதன். “நான் உள்ளே நுழைந்து, அங்கே அவர் வீற்றிருந்ததைக் கண்டேன்.'' தூதன் கூறினான், “சாம்போ , இப்பொழுது இங்கே வா, நீ அவரைப் பார்த்தபிறகு, நீ இங்கே வெளியே வரவேண்டும். நாங்கள் உனக்கு ஒரு வெண்ணங்கி கொடுக்க விரும்புகிறோம், நாங்கள் உனக்கு கின்னரம் கொடுக்கவிரும்புகிறோம், நாங்கள் உனக்கு ஒரு கிரீடம் கொடுக்க விரும்புகிறோம்'' என்றான். “என்னிடம் கின்னரங்களைப் பற்றியும், கிரீடங்களைப் பற்றியும், வெண்ணங்கிகளைப் பற்றியும் பேசவேண்டாம்' என்றார் சாம்போ . ''ஆனால் நீ ஒரு பரிசை வென்றிருக்கிறாய், நாங்கள் உனக்கு உன்னுடைய பரிசை கொடுக்க விரும்புகிறோம்'' என்று தூதன் கூறினானாம். “என்னிடம் வெகுமதிகளைக் குறித்துப் பேச வேண்டாம். நான் ஆயிரம் ஆண்டுகளாய் நின்று அவரை நோக்கிக் கொண்டே யிருக்கட்டும். அதுவே என்னுடைய பலனாக இருக்கும்'' என்று பதலளித்தார். நாம் யாவருமே அந்த விதமாகத்தான் கருதுவோம் என்று நான் நினைக்கிறேன். ''நான் நின்று அவரைப் பார்த்துக்கொண்டே யிருக்கட்டும்“ இப்பொழுது எனக்கு இருக்கிற சரீரத்திலிருந்து வித்தியாசமான சரீரம் இருக்க வேண்டும்; உங்கள் அங்கத்தின் சர்வ நாடி நரம்புகளும் அவரைப் பார்த்துக்கொண்டேயிருக்க வேண்டும். 56யோவான் அங்கே நின்றிருந்து, அவர் சிங்காசனத்தில் வீற்றிருந்ததைக் கண்டான். அவர் பார்வைக்கு வச்சிரக்கல்லுக்கும் பதுமராகத்துக்கும் ஒப்பாயிருந்தார். வேதாகமத்தில் எல்லாப் பொருட்களுக்கும், ஒவ்வொரு வார்த்தைக்கும் ஒரு அர்த்தம் உண்டு. இப்பொழுது, “வச்சிரக்கல், பதுமராகம்.' இப்பொழுது நீங்கள் கவனிப்பீர்களானால், அது வேத வாக்கியங்களின் ஏனைய பகுதிகளோடு ஒப்பிடுகிறது. வேத வாக்கியங்கள் முந்தின பகுதிகளில், அவர் அல்பாவும், ஓமெகாவு மாயிருக்கிறார். அவரே ஆதியும் அந்தமுமாயிருக்கிறார். அவரே முந்தினவரும் பிந்தினவருமாயிருக்கிறார். அவரே பிதா, அவரே குமாரன், அவரே பரிசுத்த ஆவியாயிருக்கிறார். அவரே சர்வமு மாயிருக்கிறார், சர்வமும் அவரில்தான் பொதிந்து கிடக்கிறது. மத்தேயு 17ம் அதிகாரத்தில் மறுரூப மலையில் மேல் யாவும் அவரில் தான் ஒரு சேர இருக்கிறது என்பதைக் காண்பிக்கிறது. 57''வச்சிரக்கல்'' என்பது ஒருகல்; பதுமராகமும் ஒரு கல்தான். அவற்றின் நிறங்களைப்பற்றி பின்னால் பார்ப்போம். கோத்திரப் பிதாக்கள், அவர்கள் ஒவ்வொருவரும் பிறந்தபொழுது, அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பிறப்புக்கல் உண்டாயிருந்தது. நான் ஏப்ரலில் பிறந்தேன்; என்னுடையது வைரக்கல் ஆகும். வெவ் வேறு மாதங்கள் வெவ்வேறு கற்களை உடையதாயிருக்கிறது. கோத்திரப் பிதாக்களும் இப்படித்தான். ஒவ்வொரு கோத்திரப் பிதாவும் பிறக்கையில், அவருக்கு ஒரு பிறப்புக்கல் இருந்திருக்கிறது. இந்த இடத்தில் ஒரு கணம் நாம் நிறுத்திடுவோம். அந்த எபிரெய தாய்மார்கள் ... நண்பரே, உங்களுடைய விசுவாசமானது தேவ வார்த்தையில் உறுதியாகக் கட்டப்படும்படி, நான் உங் களுக்கு தெய்வீக வார்த்தை ஒன்றைக் காண்பிக்கட்டும். எபிரெய தாய்மார்கள் தாங்கள் பிள்ளையைப் பெற்றெடுக்கும் ஒவ்வொரு சமயமும், அவர்கள் பிரசவ வேதனைப்படுகையில், பிரசவத்தின் போது, அவள் என்ன வார்த்தைகளை உதிர்த்தாளோ, அதுவே பிறக்கும் குழந்தையின் பெயராகியது. பாலஸ்தீனாவில் சரியாக அவனுக்குரிய இடத்தில் அவன் கர்த்தருடைய வருகைக்காக வைக்கப்பட்டான். அவனுடைய தாயில் உள்ள பிரசவவேதனை எப்பிராயீம் என்றால் “கடலின் அருகில்'' என்று அர்த்தமாம். பாருங்கள்? எப்பிராயீமுக்கு கடலுக்கருகில் உள்ள இடத்தில் சுதந்திரம் கொடுக்கப்பட்டது. யூதா என்றால் .... அவ்வார்த்தைக்கு என்ன அர்த்தம் என்று எனக்குத் தெரியாது. ஆனால் அதை என்னால் எடுத்துவிட முடியும். இந்த சிறு காரியங்களைப்பற்றி எடுப்பதற்கு எனக்கு நேரம் இல்லை. யூதா என்றால், அவனுடைய ஸ்தானம் அப்பொழுது இஸ்ரவேலர் மத்தியில் வைக்கப்பட்டிருந்தது. 58ஆதியாகமம் 48, 49 அதிகாரங்களை எடுத்துக்கொண்டால், அங்கே யாக்கோபு மரித்துக்கொண்டிருக்கையில், தன் கோலின் மேல் சாய்ந்து கொண்டு, உலகத்தின் கடைசி நாட்களில் அவனது புத்திரர் சரியாக எந்தெந்த இடத்தில் வைக்கப்பட்டிருப்பார்கள் என்பதைப் பற்றி முன்னுரைத்தான். இப்பொழுது அவர்கள் தங்கள் சொந்த தேசம் போனதிலிருந்து, அவர்கள் சரியாக அவரவர்களுக்குரிய இடத்தில் வைக்கப்பட்டுள்ளனர். யோசேப்பைக் குறித்து, “நீ பலன் தரும் திராட்சைச் செடி'' என்றான். நீரூற்றண்டையில் உள்ள கனி தரும் செடி, அதின் கொடிகள் சுவரின் மேல் படரும். அவன் மேலும் கூறினான்: ”நீ தேவனாகிய கர்த்தரில் நம்பிக்கை கொண்டிருந்தாய்; உன்னுடைய வில்லை நீ பெலப்படுத்தினாய். (அமெரிக்க ஐக்கிய நாடுகள் அது). ஆனால் ஒரு நாளில் அக்கொடி திரும்பி வந்து, சுவரில் படரும்'' என்று. சரியாக அவள் இப் பொழுது அங்கே இருக்கிறாள். மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக அவன் என்ன கூறினானோ, அது சரியாக அப்படியே நிகழ்ந்திருக்கிறது. எப்பிராயீம் தன் காலை எண்ணெயில் தோய்ப் பான் என்று சொல்லப்பட்டது. அப்படியே எப்பிராயீம் பெரிய எண்ணெய் வயல்கள் இருக்கிற இடத்தில்தான் குடியேறினான். அப்படியே நடந்தது. 59அந்த மக்கள் உரைத்தவை, அந்த சாவுக்கேதுவானவர்கள் மேல் என்ன இருந்தது. தேவன் அவர்களது திசுக்களை எடுத்து, அவைகளில் அசைவாடினார். ரோம சாம்ராஜ்யம் அவர்களை சிதறடித்தபொழுது, ஏனை யோர்கள் அவர்களை சிதறடித்தபொழுது, ஹிட்லரால் அவர்கள் வெறுக்கப்பட்டபொழுது, பத்தாயிரம் ஆயிரமான அவர்கள் இரத்த நாளங்கள் வெடித்து, இரத்தம் கொப்புளிக்க அவர்கள் மரித்தனர், அவர்களது சரீரங்கள் வேலிகளில் தங்கள் குழந்தை களோடு தொங்கிக்கொண்டு இருந்தன. எலும்புகளும்... அவைகளை எடுத்து, எலும்புகளிலிருந்து உரம் செய்தார்கள். அவர்களுக்கு ஒரு ஊசியைப் போட்டு, வண்டிகளில் அவர்களைப் போட்டு விட்டார்கள். பிறகு அவர்கள் வெளியேறி, அவர்கள் மரிப்பதற்கு கொஞ்சம் நேரம் இருக்கையில், அவர்கள் “மேசியா வருவார், நாங்கள் மீண்டும் திராட்சை இரசம் குடிப்போம்'' என்று பாடினார்கள். அவர்கள் அவ்வாறு மரித்துக்கொண்டிருக்கையில், அந்த யூதர்கள், அங்கே சுற்றிலும் நடந்து, இன்னும் இருதயத் துடிப்புகளுக்குப் பிறகு, தங்கள் இருதயம் மாண்டு போகும் என்றறிந்தபோதும், அவர்கள் அங்கே, ''நாங்கள் சீக்கிரம் மேசியாவைக் காண்போம்'' என்று பாடிக்கொண்டேயிருந்தார்கள். ஓ, அவர்களுடைய எலும்புகளிலிருந்து உரம் செய்வித்தார்கள். இங்கிருக்கிற அநேக இராணுவ வீரர்கள் அதை அறிவீர்கள், அதைக் கண்டும் இருக்கிறீர்கள். அவர்களை சுட்டெரித்த அந்த இடத்தில் நான் நின்றேன். ஹிட்லரும் மற்றோரும் அவர்களைக் கொன்ற இடத்தில். ஸ்டாலின் ருஷியாவில் அதே காரியத்தைத் தான் செய்தான் என்பதைப் பாருங்கள். ஆனால் அந்த யூதன், அவனைப் பற்றி என்ன? அவன் தன் சுய தேசத்திற்கு திரும்பிப்போக அவனுக்கு நிர்ப்பந்தம் ஏற்பட்டது. அங்கேதான் அவர்கள் நின்றுகொண்டிருக்கின்றனர். 'நள்ளிரவுக்கு முன்பு மூன்று நிமிடங்கள்'' என்ற அந்த பெரிய திரைப்படம் என்னிடம் உள்ளது. அந்த யூதர்கள் தேசத் தினுள் வந்தபோது, அவர்களிடம், 'நீங்கள் ஏன் இங்கே திரும்பி வருகிறீர்கள்? உங்கள் சுய தேசத்தில் மரிக்கவா?'' என்ற கேள்வி கேட்கப்பட்டது. “நாங்கள் மேசியாவைக் காணவே வந்திருக்கிறோம்' என்றார்கள். ஆமென். ஊ! நாம் முடிவுக்காலத்தில் உள்ளோம். 60அவர்கள் ஒவ்வொருவரும் பிறந்த போது, அவர்களுக்கு பிறப்பின் கல் ஒன்று உண்டாயிருந்தது. பிரதான ஆசாரியனாகிய ஆரோன், அவர்கள் ஒவ்வொருவருக்கும் உரிய கற்களை உடைய மார்ப்பதக்கத்தை, தன் மார்பில், தன் உடையின் மேல் அணிந்திருந்தான். எனவே நான் 6ம் வசனத்தைப் பார்ப்பதற்காகவே, இன்னும் கொஞ்சம் நேரம் இதில் கவனம் செலுத்திக்கொண்டிருக் கிறேன். பழைய ஏற்பாட்டின் ஒவ்வொரு அடையாள இலச் சினையையும் சரியாக அங்கே கொண்டு வந்து பொருத்துகிறது. பழைய ஏற்பாட்டு ஆசரிப்புக் கூடாரத்திலுள்ள ஒவ்வொரு பொருளும் பரலோகத்தில் காணப்பட்டவைகளுக்கு நிழலாக, மாதிரியாக உள்ளது. மானிட இனத்துக்கும் மாதிரியாக உள்ளது. இங்கே ஆரோனின் மார்ப்பதக்கம் உள்ளது. அவன் பிரதான ஆசாரியனாய் இருந்தான். ஒவ்வொரு கோத்திரத்தின் பிறப்பிற்குரிய ஆபரணக் கல்லும் அந்த மார்ப்பதக்கத்தில் அவர்களுக்கு எடுத் துக்காட்டாக பிரதிநிதித்துவமாக, அங்கே பதிக்கப்பட்டிருந்தது; எப்பீராயீம் கோத்திரம், மனாசே கோத்திரம், காத் கோத்திரம், பென்யமீன் கோத்திரம் மற்றும் கோத்திரங்களும் தங்கள் தங்களுக் குரிய கல்லை அதில் உடையவர்களாக இருந்தார்கள். எல்லாக் கோத் திரங்களும், அந்த மார்ப்பதக்கத்தில் உள்ள கற்களின் மூலம் பிரதி நிதித்துவப்படுத்தப்பட்டிருந்தார்கள். அவ்வாறுதான் .... பிறகு அவர்கள் அந்த பிறப்பின் கற்களை உடைய மார்ப்பதக்கத்தை எடுத்து, அந்த அழகான முத்துக்களையுடைய அதை எடுத்து, ஒரு கம்பத்தில் தொங்கவிடுவார்கள். ஒரு தீர்க்கதரிசி தீர்க்கதரிசனம் உரைக்கும் பொழுது, அவனை இந்த ஊரிம் தும்மீமிடம் அழைத்துச் செல்வார்கள், அதன் முன்னிலையில் அவன் தன் தீர்க்கதரிசனத்தைக் கூறச் செய்வார்கள், அப்பொழுது பரிசுத்த ஒளி அந்த மார்ப்பதக்கத் தின்மேல் பட்டு , ஒளிர்ந்து, பிரகாசமான எல்லா கற்களும் சேர்ந்தாற்போல் ஜொலித்து பிரதிபலிக்கும் என்றால், தேவன் அவன் பேசியதை உறுதிப்படுத்துகிறார் என்று அர்த்தமாகும். அது அந்த அனைத்து கோத்திரங்களுக்கும் உரியது. அவைகள் ஒவ்வொரு கோத்திரத்திற்கும் உரியது. 61இவைகளில், முதல் கல்லானது .... யார் முதல் பிள்ளை? அவனது பெயர் என்ன? ரூபன். சரி. கடைசி பிள்ளை யார்? பென்ய மீன், சரி. ரூபனின் பிறப்பின் கல் வச்சிரக்கல் ஆகும். பென்ய மீனின் பிறப்பின் கல் பதுமராகம் ஆகும். அவர் ''ரூபனைப் போலவும், பென்யமீனைப்போலவும்' காணப்பட்டார். முந்தின வரும், பிந்தினவரும், இருந்தவரும், இருப்பவரும் வருகிறவரு மானவர், அல்பா அவரே. கிரேக்க மொழி அகர வரிசையில் முதல் எழுத்து அவரே, ஓமெகா - இது கிரேக்க மொழி அகர வரிசையில் கடைசி எழுத்து. அவரே முதலாமவர், அவரே கடைசியுமானவர். அவர் பென்யமீன் முதல் ரூபன் முடிய; ரூபன் முதற்கொண்டு பென்யமீன் முடிய உள்ளவர். அங்கே அவர் வீற்றிருக்கிறார், அவர் பார்வைக்கு வச்சிரக்கல்லுக்கும், பதுமராகத்துக்கும் ஒப்பாயிருந் தார். அவர் இந்த சிங்காசனத்தின்மேல் வீற்றிருந்தார். 62அவர் தமது மகிமையில் வீற்றிருப்பதை நீங்கள் எல்லாம் காண விரும்புகிறீர்களா? நாம் விரைவாக வெளிப்படுத்தின விசேஷம் 21:10-ஐ எடுத்துக்கொள்வோம். இங்கே அவரை நோக்கிப் பாருங்கள்: வெளி. 21:10 முதல் 11 முடிய. “பெரிதும் உயரமுமான ஒரு பர்வதத்தின் மேல் என்னை ஆவியில் கொண்டுபோய், தேவனுடைய மகிமையை அடைந்த எருசலேமாகிய பரிசுத்த நகரம் பரலோகத்தை விட்டு தேவனிடத்திலிருந்து இறங்கி வருகிறதை எனக்குக் காண்பித்தான். அதின் பிரகாசம் மிகவும் விலையுயர்ந்த இரத்தினக் கல்லைப் போலவும் பளிங்கினொளியுள்ள வச்சிரக்கல்லைப் போலவும் இருந்தது.“ வெளி. 21:10-11 “அதன் ஒளி'' ''ஒளி'. யார் அந்த ஒளி? அந்நகரத்திற்கு சூரியனுடைய வெளிச்சம் தேவையில்லை. ஆட்டுக்குட்டியானவரே அதற்கு விளக்கு. 63''வச்சிரக்கல்லும், பதுமராகமும்' ஆகிய இரத்தினக் கற்கள். தேவனுடைய மகிமை இயேசு கிறிஸ்துவாகும். இயேசு கிறிஸ்து வினுடைய மகிமை அவருடைய சபையாகும். அவரே முதன்மை யானவராக இருக்கிறார். அவர் என்னவாயிருந்தார்? அவரே காலத் தின் துவக்கமும், முடிவுமாயிருக்கிறார். அவரே கோத்திரப் பிதாக் களில் முதலாமவராக இருக்கிறார். அவரே கடைசியான கோத்திரப் பிதாவாக இருக்கிறார். அவரே சபையாயிருக்கிறார். எபேசு சபையில் இருந்த ஆவியானவர் அவரே. அவரே லவோதிக்கேயா சபையிலும் இருக்கிற ஆவியானவராக இருக்கிறார். அவரே ஆதியும் அந்தமுமாயிருக்கிறார். எழுத்துக்களின் அகர வரிசையில் முதல் எழுத்து முதல் கடைசி எழுத்துவரை அவரே. முதலும், கடைசியும் அவரே. இருந்தவரும் இருப்பவரும் வருகிறவரு மாகியவர். தாவீதின் வேரும் சந்ததியுமானவர். விடிவெள்ளி நட்சத்திரம் அவரே, பள்ளத்தாக்கின் லீலி அவரே, சாரோனின் ரோஜா அவரே. அவருக்கே உரிய நானூறும் சொச்சமும் உள்ள பெயர்கள் அவருக்கு வேதத்தின் கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் பற்றி எண்ணிப்பாருங்கள். அவர் என்னவாயிருக்கிறார் என்று. இப்படியெல்லாம் இருந்தும் கூட, தாழ்மையுள்ள கர்த்தராகிய இயேசுவானவர், தேவனுக்கு துதிகள் உண்டாகும்படி, முன்னணை யில் பிறந்தார். தாழ்மையுள்ளதாயிருக்கும் எதையும் கவனியுங்கள். ஏனெனில் அதுதான் சரியானது. எதுவும் பெரிதாகத் தோன்றினால், அது பெருமையும் பகட்டுமானதாகவும் இருக்கும். எனவே அதின்மேல் எந்த கவனமும் செலுத்தவேண்டாம். அது காற்றடைத்ததாக இருக்கும், அதில் ஒன்றுமே இல்லை. 64'அவர் பார்வைக்கு வச்சிரக்கல்லுக்கும் பதுமராகத்துக்கும் ஒப்பாயிருந்தார்.'' நாம் திருப்பு வோம். பாருங்கள், நமக்கு சிறிதளவே நேரம் உள்ளது. அப்படித்தானே? நமக்கு இன்னும் நாற்பது நிமிடங்களே உள்ளன. நாம் கவனிக்கக்கடவோம். எசேக்கியேல் 1ம் அதிகாரத்திற்குத் திருப்புவோம். வேதாகமத்தில் பழைய ஏற்பாட்டில் எசேக்கியேலின் புத்தகத்திற்குத் திரும்பிப் போவோம். அவரை எசேக்கியேலும் கண்டதைக் குறித்து இங்கே படிப்போமாக. மேலும் இப்பொழுது இவ்வேத வாக்கியங்களைக் கொண்டு ஒப்பிட்டுப் பார்த்து நாம் எங்கே இருக்கிறோம் என்பதைப் பார்த்திடுவீர். எசேக்கியேல் முதலாம் அதிகாரம் - சற்று நேரம் வாசிப்போம். நான் முதல் ஐந்து வசனங்களை விவரிக்கப்போகிறேன், அதன்பிறகு நாம் வாசிப்போம். இங்கே நான் 26 முதல் 28 முடிய உள்ள வசனங்களை குறித்து வைத் திருக்கிறேன். எசேக்கியேல் தீர்க்கதரிசியின் புத்தகம் முதலாம் அதிகாரத்தின் முதல் வசனங்களைப் படிப்போமாக. “முப்பதாம் வருஷம் நாலாம் மாதம் ஐந்தாந் தேதியிலே, நான் கேபார் (கேபார், அது சரிதானே? கே-பா-ர்- கேபார்) நதியண்டையிலே சிறைப்பட்டவர்கள் நடுவில் இருக்கும் போது, சம்பவித்தது என்னவென்றால், வானங்கள் திறக்கப்பட நான் தேவதரிசனங்களைக் கண்டேன். அது யோயாக்கீன் (இப்பொழுது கவனியுங்கள்) ராஜாவுடைய சிறையிருப்பின் ஐந்தாம் வருஷமாயிருந்தது. அந்த ஐந்தாந் திேயிலே, கல்தேயர் தேசத்திலுள்ள கேபார் நதி யண்டையிலே பூசியென்னும் ஆசாரியனுடைய குமாரனாகிய எசேக்கியேலுக்குக் கர்த்தருடைய வார்த்தை உண்டாகி, அங்கே கர்த்தருடைய கரம் அவன்மேல் அமர்ந்தது. இதோ, வடக்கிலிருந்து புசல் காற்றும் பெரிய மேகமும், அத்தோடே கலந்த அக்கினியும் வரக்கண்டேன்; அதைச் சுற்றிலும் பிரகாசமும், அதின் நடுவில் அக்கினிக்குள்ளிருந்து விளங்கிய சொகுசாவின் நிறமும் உண்டாயிருந்தது.“ எசே. 1:1-4 65கிறிஸ்துவின் வருகைக்கு ஐநூற்று தொண்ணூற்று ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக இத்தீர்க்கதரிசி இங்கே கூறியுள்ளதைக் கவனியுங்கள். எவ்விதமாக அவனது தரிசனம் யோவானுடைய தோடே ஒப்பிடத்தக்கதாக உள்ளது என்பதை பாருங்கள். “இதோ, வடக்கேயிருந்து புசல்காற்றும் பெரிய மேகமும், அத்தோடே கலந்த அக்கினியும் வரக்கண்டேன்; அதைச் சுற்றிலும் பிரகாசமும் அதின் நடுவில் அக்கினிக்குள்ளிருந்து விளங்கிய சொகுசாவின் நிறமும் உண்டாயிருந்தது. அதின் நடுவிலிருந்து நாலு ஜீவன்கள் தோன்றின; அவைகளின் சாயல் மனுஷ சாயலாயிருந்தது.“ எசே. 1:4-5 இந்த நான்கு ஜீவன்களின் சாயலுக்கு மேலாக தேவ ஆவி யானவருக்குரிய நிறம் அக்கினிமயமான சொகுசாவின் நிறமா யிருந்தது. சொகுசாவின் நிறமென்றால் (amber) மஞ்சள் கலந்த பச்சையாகும் (yellowish green). இப்பொழுது கவனியுங்கள் (சகோ. பிரன்ஹாம் பேச்சின் இடையே சற்று நிறுத்தி, விளக்கு வதற்காக ஒன்றின் மேல் தட்டுகிறார் - ஆசி.). மஞ்சள் கலந்த பச்சை நிறமே சொகுசாவின் நிறமாகும். ஓ, அவர் நேற்றும் ... மாறாதவரா யிருக்கிறார். எசேக்கியேலின் தரிசனத்தின் நடுவிலே அவர் தன்னை எசேக்கியேலுக்கு வெளிப்படுத்தினார். நான்கு ஜீவன்களுக்கு மேலாக வருவதாக எசேக்கியேல் கண்ட இந்த ஒளி, மஞ்சள் கலந்த பச்சையாகும். அவர் யோவானிடத்தில் வந்தபோது, அவர் மரகத நிறத்தில் தோன்றினார். அதுவும், ''மஞ்சள் கலந்த பச்சையாகும். அவர் இப்பொழுது வெளிப்படுத்துகிறவனிடத்தில் மஞ்சள் கலந்த பச்சை நிறத்தில்தான் வருகிறார். ஒளியானவர் நம்மிடத்திலும் மஞ்சள் கலந்த பச்சை நிறத்தில் வருகிறார். ஒளியில் நடவுங்கள். அவரே அந்த ஒளி. 66இப்பொழுது நாம் 26ம் வசனத்தை எடுத்துக்கொண்டு , 28ம் வசனம் முடிய வாசிப்போம். 26ம் வசனம். அவைகளின் தலைகளுக்கு மேலுள்ள...'''. நீங்கள் இதைக் குறித்துக்கொண்டு, உங்கள் வீடுகளுக்குத் திரும்பும் போது, அவை முழுவதையும் வாசியுங்கள். நேரத்தை மிச்சப்படுத்திக்கொள்ளுங்கள். “அவைகளின் தலைகளுக்கு மேலுள்ள மண்டலத்தின் மீதில் நீலரத்தினம் போல விளங்கும் ஒரு சிங்காசனத்தின் சாயலும், அந்தச் சிங்காசனத்தின் சாயலின்மேல் மனுஷ சாயலுக்கு ஒத்த ஒரு சாயலும் இருந்தது. (அதுதான் மனுஷ குமாரனாகிய கிறிஸ்து என்பதைப் பாருங்கள்). எசே. 1:26 இப்பொழுது, அவர் எவ்வாறு இருந்தார், எவ்வாறு உடுத்தியிருந்தார் என்பதைப் பாருங்கள். “அவருடைய இடுப்பாகக் காணப்பட்டது முதல் மேலெல்லாம் உட்புறம் சுற்றிலும் (கவனியுங்கள், இந்த மனுஷகுமாரனைச் சுற்றிலும்) அக்கினிமயமான சொகு சாவின் நிறமாயிருக்கக் கண்டேன்; அவருடைய இடுப்பாகக் காணப்பட்டது முதல் கீழெல்லாம் அக்கினிமயமாகவும், அதைச் சுற்றிலும் பிரகாசமாகவும் இருக்கக்கண்டேன். (சொகுசாவின் நிறத்தைச் சுற்றிலும் அக்கினிமயமாயிருக் கிறது). எசே. 1:27. 67கவனியுங்கள்! உங்கள் இருதயங்களில் ஆவிக்குரியவர்களாக வும், புரிந்து கொள்ளுகிறவர்களாகவும் இருங்கள். இதை உங்களுக்குள் வைத்துக்கொள்ளுங்கள் என்று நான் உங்களுக்கு இயேசுவின் நாமத்திலே கட்டளையிடுகிறேன். ஆனால் எத்தனை பரம சந்தோஷமானதாய் இருக்கிறது என்பதை நினைவில் கொள் ளுங்கள். நாம் மீண்டும் 27ம் வசனத்தில் ஆரம்பிப்போம். ஒவ்வொரு வரும் கேளுங்கள். ஒவ்வொருவரும் புரிந்துகொள்வதற்கு புத்தி யுள்ளவர்களாயிருங்கள். “அவருடைய இடுப்பாகக் காணப்பட்டது முதல் மேலெல்லாம் உட்புறம் சுற்றிலும் அக்கினிமயமான சொகுசாவின் நிறமாயிருக்கக் கண்டேன்: (அது மஞ்சள் கலந்த பச்சையாகும்) அவருடயை இடுப்பாகக் காணப்பட்டது முதல் கீழெல்லாம் அக்கினிமயமாகவும், அதைச் சுற்றிலும் பிரகாசமாகவும் இருக்கக்கண்டேன். மழை பெய்யும் நாளில் மேகத்தில் வானவில் எப்படிக் காணப்படுகிறதோ, அப்படியே சுற்றிலுமுள்ள அந்தச் பிரகாசம் காணப்பட்டது; இதுவே கர்த்தருடைய மகிமையின் சாயலுக்குரிய தரிசனமாயிருந்தது; அதை நான் கண்டபோது முகங்குப்புற விழுந்தேன்; அப்பொழுது பேசுகிற ஒருவருடைய சத்தத்தைக் கேட்டேன். எசே. 1:27-28 68கவனியுங்கள்! நீங்கள் ஆயத்தமா? கவனியுங்கள். இப்பொழுது இதை நினைவில் காத்துக்கொள்ளுங்கள்; நீங்கள் அறிந் திருப்பதற்காக. (ஜீன் இவ்வொலி நாடாவை நிறுத்தி வைத்துக் கொள்ளலாம்) கவனியுங்கள்! (நான் ஒலி நாடாவை நிறுத்தி வைக்கத் தேவையில்லை, பரவாயில்லை) இவ்வொலி நாடாவை வைத்துக்கொண்டு, சபைக்கு மட்டும் இதை அனுமதியுங்கள். இதைக் கவனியுங்கள்! கர்த்தரோடு இருக்கிற ஒளியின் நிறமானது, கர்த்தரைப் பின்பற்றுகிற கர்த்தருடைய ஒளியானது, கர்த்தர் கூறுவதின்படி, அது சொகுசாவின் நிறமாயிருக்கிறது; அதாவது மஞ்சள் கலந்த பச்சையாகும். அதே நிறமுள்ள ஒளிதான் இன்றைக்கு நம்மோடு இருக்கிறது, அதன் படத்தை விஞ்ஞானிகள் எடுத்திருக்கின்றனர். அது சொகுசாவின் நிறம், அதாவது மஞ்சள் கலந்த பச்சை. நான் சிறுவனாயிருந்தபோது, என் வாழ்வில் முதல் தடவை யாக அதை நான் பார்த்தபோது, அவ்வாறே இருந்தது; இங்குள்ள அந்தக் காலத்தவர்களே, உங்களுக்கு ஞாபகமிருக்கும், நான் உங்களுக்கு எப்பொழுதும் அதைப்பற்றி கூறியிருக்கிறேன், ''அது மஞ்சள் கலந்த பச்சையாகிய சொகுசாவின் நிறம்'' என்று. அது அந்த நிழற்படம் எடுப்பதற்கு முன் கூறியதாகும். கர்த்தருடைய ஆவியானவர்.... என்பதை உங்களுக்குத் தெரியப்படுத்துவதற்காக இப்பொழுது... அவருடைய சமூகத்தில் நின்றுகொண்டிருந்த ஜீவசிருஷ்டி களின் இடுப்பாகக் காணப்பட்டது முதல்,.... ''அவருடைய இடுப்பாகக் காணப்பட்டது முதல் மேலெல்லாம் உட்புறம் சுற்றிலும் அக்கினிமயமாகவும், அவருடைய இடுப்பாகக் காணப்பட்டது முதல் கீழெல்லாம் ஒளியால் நிறைந்திருந்தது. சுற்றிலும் வானவில்லைப்போல் அநேக நிறங்களைக் கொண்டதாகக் காணப்பட்டது“. அது சரிதானே? 69தேவன் இன்னமும் அதே நிறங்களில்தான் நிலைத்திருக்கிறார் என்பதை நீங்கள் ஞாபகத்தில் வைத்திருக்க வேண்டுமென்று நான் விரும்புகிறேன். “இடுப்பாகக் காணப்பட்டது முதல் மேலெல் லாம் அக்கினிமயமாக சொகுசாவின் நிறம்.'' திரைப்பட காம ராவைக் கொண்டு அல்லது வண்ண காமராவைக் கொண்டோ படமெடுத்தபோது, ”இடுப்பிலிருந்து மேலே சொகுசாவின் நிறம், இடுப்பிலிருந்து கீழெல்லாம், சுற்றிலும், வானத்தின் மழை நாளில் காணப்படும் வானவில்லின் அநேக நிறங்கள் உண்டாயிருந்தது'' இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார். பரிசுத்த ஆவியானவர் இன்னும் தம்முடைய வல்லமையில் இருக்கிறார் இன்னமும் இக்கடைசி நாட்களில் தமது சபையில் இருக்கிறார். நான் அல்ல, நான் அங்கே நின்று கொண்டிருந்தேன். அவ்வளவுதான், ஆனால் அதைப்பற்றிய படம் எடுக்கப்பட்டது. எசேக்கியல் கண்ட வண்ணமாகவே அது இருப்பதை நீங்கள் நோக்கிப் பார்க்க நான் விரும்புகிறேன். அதே நிறங்கள், அதே விதம், அதேவிதமாக செயல்பட்டது. அந்த ஜீவன்களின் சாயலும் அதேவிதமாக இருந்தது. அது என்ன? அந்த ஜீவ சிருஷ்டிகள் ஜீவனுள்ள சபைக்கு எடுத்துக்காட்டாகத் திகழ்ந்தது. அச்சபை யானது கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலினாலும், வல்லமையினாலும் ஜீவிக்கிற ஒன்றாக இருக்கிறது. அதே அந்த சொகுசாவின் நிறங்கள், இடுப்பு முதல் மேலெல்லாம், இடுப்பு முதல் கீழெல்லாம் காணப்பட்டது. 70அதைப்பற்றி இனிமேலும் எந்த வித அனுமானமும் இல்லை. விஞ்ஞானமானது அவைகளுடைய படத்தை எடுத்திருக்கிறது. அவைகளின் நிறங்களைப் பாருங்கள், அக்கினியின் நிறங்களை அங்கே பாருங்கள். வானவில்லைப் பாருங்கள். மஞ்சள் நிற மரகதம் போன்ற நிறத்தைப் பாருங்கள். இப்பொழுது இந்த காமரா, வண்ணப்படம் எடுக்கக்கூடியது கோடாக்ரோம் பிலிமினால் வண்ணப்படம் விழக்கூடிய அங்கேயுள்ள மரகதம் போன்ற நிறத்தைப் பாருங்கள். ஒரு வெளிச்சத்தைக் கொண்டு அதை உங்களை நான் பார்க்கச் செய்தால், அதன் பின்னால் உள்ளதை நீங்கள் காணமுடியும். இப்பொழுது உங்களால் பார்க்க முடி கிறதா? “வானவில்லைப் போல்.'' வானவில்லைப் போல் அதி லிருந்து ஒளிக் கீற்றுகள் முன்னும் பின்னும் வருவதைப் பாருங்கள். ஒவ்வொன்றும் வெவ்வேறு நிறங்களாகும். இன்னும் சில நிமிடங்களுக்குள் நாம் அதற்குள் போகப் போகிறோம். அவைகள் என்ன நிறங்கள், அவைகள் எதைச் சுட்டிக்காட்டுகின்றன என்பதைப் பற்றியெல்லாம் அப்பொழுது பார்போம். ஓ அது எனது எளிய இருதயத்தை சந்தோஷத்தால் துள்ளிக் குதிக்கச் செய்கிறது. நாம் வாழ்க்கிற இந்த நாளில் கிறிஸ்து வானவர். அறிவதற்கு..... என்னை ஆதாரங்களெல்லாம் அமிழ்ந்து போகும் மணல் ஆக இருக்கும் பொழுது, மற்றெல்லா ஆதாரங்க ளெல்லாம் அவ்வாறு இருக்கும் பொது, 'இதை ஏன் நாம் சொல்லக் கூடாது“ என்று நான் எண்ணினேன். இவ்வவுலகம் அதைக் காண்பதற்காக வைக்கப்படவில்லை. உலகமானது அதைக் காணமாட்டாது. அவர்கள் ஒருபோழுதும் அதை காணமாட்டார் கள். ஆனால் சபையானது, தன் இதுவரை பெற்றிராத மிகுந்த வல்லமையான அசைவைப் பெற்றுக் கொண்டிருக்கிறது. 71அந்நாட்களில் அவர்களால் அதை ஒரு படம் எடுக்க இயவில்லை. இப்பொழுது அவர்களுக்கு இயலும், ஏனெனில் இப்பொழுது அவர்களுக்கு இயந்திர உபகரணங்கள், கருவிகள் உள்ளன. தேவன் ஒருவர் இல்லை என்று மறுதலிப்பதற்காக இயந்திர நுட்பவியலை எவர்கள் உபயோகிக்க முயற்சிக்கிறார்களோ, அவர்களே திரும்பி வந்து, தேவன் இருக்கிறார் என்பதை அதன் மூலமே நிரூபிக்கிறார்கள். அது சரிதான். ''மரகதம்'' நான் இதை உருவாக்கவில்லை. நான் வேதத்தில் இருந்தே உங்களுக்கு அதை வாசித்துக் காண்பிக்கிறேன். நான் வாசிக்கையில், கவனித் துப் பார்த்து, அது அதே தேவனாகிய கர்த்தர் தான் என்றும், எந்தவித வித்தியாசமும் இல்லை என்பதை கவனியுங்கள். 27ம் வசனத்தைக் கவனியுங்கள். “... அக்கினிமயமான சொகுசாவின் நிறமாயிருக்க கண்டேன்” (அக்கினி நாவுகள் போல்). பாருங்கள், அக்கினியிலிருந்து சொகுசாவின் நிறம் வெளிப் படுகிறது. அதை இப்பொழுது நீங்கள் காண்கிறீர்களா? சொகுசா வின் நிறம், அந்த சொகுசாவின் நிறங்கள் ஒரு அக்கினியிலிருந்து வெளிப்படுகிறது. கீழே இவ்வாறு அது கூறுகிறது: “மழை பெய்யும் நாளில் மேகத்தில் வானவில் எப்படிக் காணப்படுகிறதோ, அப்படியே..... 72அங்கே ஒரு ஜீவன் இருந்தது. யோவான் முழு சபைக்கும் முன்னடையாளமாயிருந்து, மேலே எடுக்கப்பட்டான் அதைப் பற்றி நான் உங்களுக்கு கூறினேன். ஒரு நபர், இங்கே ஒரு தரிசனத்தில் கிறிஸ்துவின் சரீரமாகிய முழு சபைக்கும் முன்னடை யாளமாக, எடுத்துக்காட்டாக இருக்க முடியும். இப்பொழுது கவனியுங்கள். “அவருடைய இடுப்பாகக் காணப்பட்டது முதல் மேலெல் லாம் உட்புறம் சுற்றிலும் அக்கினிமயமான சொகுசாவின் நிற மாயிருக்கக் கண்டேன். அவருடைய இடுப்பாகக் காணப் பட்டது முதல் கீழெல்லாம் அக்கினிமயமாகவும், அதைச் சுற்றிலும் பிரகாசமாகவும் இருக்கக் கண்டேன். எசே. 1:27 அக்கினி எங்கும் பரவியிருப்பதைப் பாருங்கள். கவனியுங் கள். எதிலிருந்து? வானவில்லிலிருந்து, அது ஏழு நிறங்களைக் கொண்டது. இப்பொழுது கவனியுங்கள். இங்கே சரியாக ஏழு நிறங்கள் உள்ளன: வானவில்லுக்கு ஏழு நிறங்கள் உண்டு. “... அக்கினிமயமாகவும், அதைச் சுற்றிலும் பிரகாசமாகவும் இருக்கக் கண்டேன்.” “மழை பெய்யும் நாளில் மேகத்தில் வானவில் எப்படிக் காணப்படுகிறதோ, அப்படியே (தேவனுடைய சிங்கா சனத்தை. பாருங்கள்? சுற்றிலுமுள்ள அந்த பிரகாசம் காணப்பட்டது. இதுவே கர்த்தருடைய மகிமையின் (கர்த்தருடைய அல்ல, இங்கே' கர்த்தருடைய மகிமை'') சாயலுக்குரிய தரிசனமயிருந்தது....” எசே.1:27-28 கர்த்தருடைய மகிமை அவருடைய சபைக்கு மேலே சூழ்ந்து கொண்டிருக்கிறதாய் காணப்படுகிறது; ஏனெனில் அவர் தமது சபையில் இருக்கிறார்! ஆமென் மதியீனருக்கு அது பைத்தியமாகக் காணப்படுகிறது. ஆனால் அதை விசுவாசிப்பவர்களுக்கு அது எவ்வளவு மகத்துவமுள்ளதாகக் காணப்படுகிறது! '.... இதுவே கர்த்தருடைய மகிமையின் சாயலுக்குரிய தரிசனமாயிருந்தது; அதை நான் கண்டபோது முகங்குப் விழுந்தேன்; அப்பொழுது பேசுகிற.. சத்தத்தைக் கேட்டேன். எசே.1:28 73இப்பொழுது அவன் மேற்கொண்டும் உரைத்து, அத்தரி சனத்திற்கு என்ன அர்த்தம் என்பதை கூறுகிறான், அதைப் பற்றிப் பார்ப்பதற்கு இக்காலையில் நமக்கு நேரமில்லை. இப்பொழுது, கர்த்தர் தமது மகத்தான இரக்கத்தினால் நமக்கு இக்காரியங்களைத் தருகிறார் என்பதைக் கவனியுங்கள். இப்பொழுது நாம் இன்னொன்றை எடுத்துக் கொள்வோம். எசேக்கியேல் யோவான் ஆகிய இருவருமே, அவரை அவருடைய நிறங்கள், ஒளி ஆகியவற்றின் இரகசியத்தில் கண்டார்கள். அதை சொகுசாவின் நிறம்'' என்று அழைத்தனர். யோவான் பின்னால்... வேத வாக்கியங்களை குறித்துக்கொள்ளுகிற நீங்கள் யோவான் 1:5 முதல் 7 வசனங்கள் யோவான் பத்மு தீவில் மூன்று ஆண்டுகள் இருந்தபொழுது இப்புத்தகத்தை எழுதினான். அத்தீவிலிருந்து அவன் திரும்பி வந்த பிறகு, தொண்ணூறு வயது நிரம்பியவனான அம்மனிதன், 1 யோவான்1:5-7 இல் தேவன் ஒளியயிருக்கிறார்'' என்று கூறுகிறான். யோவானுக்கு அவரைக் கண்டிருக்கிற ஒரு அனுபவம் உண்டு. அவர் ஒளியாயிருக்கிறார் என்பதை அவன் அறிவான். ஒளி, நித்திய ஒளி; பிரபஞ்ச ஒளியல்ல, விளக்கொளியல்ல, மின்சார ஒளியல்ல, சூரிய ஒளியல்ல, ஆனால் நித்திய ஒளி அவர். ஓ, நான் அவரை எவ்வளவாய் நேசிக்கிறேன். “தேவன் ஒளியாயிருக்கிறார்.'' 74கவனியுங்கள், நாம் எங்கேயிருந்தோமோ அதே அடத்திற்கு நாம் திரும்பிச் செல்லப்போகிறோம். இன்னும் நாம் வெளி.4:3இல் தானே இருக்கிறோம்? அதை நாம் பெற்றுக்கொள்ளப் போகி றோமா? நான் நம்புகிறேன். “வீற்றிருந்தவர், பார்வைக்கு வச்சிரக்கல்லுக்கும் பதுமராகத்துக்கும் ஒப்பாயிருந்தார்; அந்தச் சிங்காசனத்தைச் சுற்றி ஒரு வானவில்லிருந்தது; அது பார்வைக்கு மரகதம் போல் தோன்றிற்று.” (அது மஞ்சள் நிற பச்சையாகும்.) வெளி.4:3 இப்பொழுது “வானவில்.' அது ஒரு வானவில் என்பதைக் கவனியுங்கள். நாம் ஆதியாகமம் 9ம் அதிகாரத்திற்கு திரும்பிச் செல்லுவோம். ஆதியாகமம் 9:13 அங்கே நாம் எப்பொழுது முதன் முதலாக வானவில்லானது தோன்றியது என்பதை பற்றி பார்ப்போம். ஆதியாகமம் 9ம் அதிகாரம் 13ம் வசனத்தில் நாம் துவங்குவோம். ஆதியாகமம் 9:13. நீங்கள் யாவரும் இதை விரும்பு கிறீர்களா? ஓ, நான் அதை நேசிக்கிறேன். நான் வெறுமனே அதை விரும்பவில்லை. நான் அதை நேசிக்கிறேன். “நான் என் வில்லை மேகத்தில் வைத்தேன். அது எனக்கும் பூமிக்கும் உண்டான உடன்படிக்கைக்கு அடையாளமா யிருக்கும் ( எனக்கும் நோவாவுக்கும்” என்றா சொல்லப் பட்டிருக்கிறது? இல்லை. “எனக்கும் பூமிக்கும்' என்றே சொல்லப்பட்டிருக்கிறது). நான் பூமிக்கு மேலாய் மேகத்தை வருவிக்கும் போது, அந்த வில் மேகத்தில் தோன்றும். ''... எனக்கும் உங்களுக்கும் .... உண்டான என் உடன் படிக்கையை நினைவுகூருங்கள். ஆதி.9:13-15 பாருங்கள், அந்த உடன்படிக்கையானது நோவாவுக்கு ஜீவனாயிருந்தார். அவர் அவனை உயிரோடு காத்தார். ஆனால் தேவன் தன்னோடு தானே செய்து கொண்ட உடன்படிக்கையானது, ஒரு வானவில்லாக இருந்தது, அதினால் அவர், ... இப்பொழுது இன்னும் ஒரு நிமிடத்தில், நான் உங்களுக்கு, நோவா தேவனு டனே செய்த உடன்படிக்கையானது என்ன என்பதை காண்பிப் பேன். ஆனால் இதுவோ தேவன் தன்னோடுதானே செய்து கொண்ட உடன்படிக்கையாயிருக்கிறது. ஆமென் ஒரு வானவில். 75ஒரு உடன்படிக்கையானது ஒரு அடையாளமாயிருக்கிறது என்பதை நாம் இப்பொழுது காண்கிறோம். தேவன் அது ஒரு அடையாளம் என்று கூறினார் அல்லவா? ''நான் என்னுடைய..... வைப்பேன்....'' நான் என் வில்லை மேகத்தில் வைத்தேன் (இது உலகமானது தண்ணீரினால் அழிக்கப்பட்ட பிறகு உள்ளதாகும். மாம்சமான யாவும் ..... நோவாவைத் தவிர, யாவும் அழிக்கப்பட்டன) .... அது எனக்கும் பூமிக்கும் உண்டான உடன்படிக்கைக்கு அடையாளமாயிருக்கும். (“எனக்கும் உலகத்திற்கு'' என்றல்ல, உலகம் என்றால், பிரபஞ்சத்தைக் குறிக்கும். பாருங்கள்? ஆனால் அது ”எனக்கும் பூமிக்கும் நடுவே'' என்பதாகும்) ஆதி.9:13 “நான் அந்த பூமியை உண்டாக்கினேன்; நான் அதை மிகவும் அழிவுக்கேதுவாக நடத்தினேன். நான் அதை தலை கீழாக கவிழ்த்துப்போட்டு, அதைக் தூளாக ஆக்கினேன். ஒரு வேளை நான் இதற்கு இவ்வாறு செய்திருக்கக்கூடாது. நான் அதற்காக வருந்துகிறேன். அது எவ்வளவு பயங்கரமான காரியமாயிருக் கிறது'' என்று கூறினார். 76இப்பொழுது அவர் தமது கோபத்தில் வரும்பொழுது, அது எவ்வாறிருக்கும் என்று நினைக்கிறீர்கள் பாவியான நண்பரே, சீர் பொருந்துவீர். அவர் மீண்டும் வருகிறார் (நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா?) அவர் மீண்டும் வருகிறார் (நான் அதை நேசிக்கிறேன். நீங்கள் நேசிக்கிறீர்களா? எனவே அக்காட்சியைக் காண விழித்திரு . காத்திரு ஓ அவரது எதிரிகளில் ஒருவராக நீர் எண்ண ப்படுவீரா? ( நான் அவ்வாறிருக்க விரும்பவில்லை. நீங்கள் அப்படி செய்வீர்களா? இல்லை ஐயா, அவருக்கு சத்துருவாயிருக்க வேண்டாம், அவரோடு இருங்கள். ஆனால் அவருக்கு எதிராக இருப்பது...) அவர் மீண்டும் வருகிறார் (ஊ) அக்காட்சியைக் காண கறையின்றி விழித்து காத்திருப்பீர். 77இப்பொழுது ஒரு உடன்படிக்கையானது, எதற்கு அடை யாளமாயிருக்கிறது? எதற்கு அடையாளம்? ஒரு பலியானது ஏற்றுக்கொள்ளப்பட்டது என்பதற்கு. இப்பொழுது ஆதியாகமம் 8:20,22 ஆகிய வசனங்கள். இப்பக்கத்திற்கு எதிரில் ஆதியாகமம் 8:20,22 ஆகிய வசனங்கள். “அப்பொழுது நோவா கர்த்தருக்கு ஒரு பலிபீடம் கட்டி, சுத்தமான சகல மிருகங்களிலும், சுத்தமான சகல பறவைகளிலும் சிலவற்றைத் தெரிந்து கொண்டு, அவை களைப் பலிபீடத்தின் மேல் தகனபலியாகப் பலியிட்டான். சுகந்த வாசனையைக் கர்த்தர் முகர்ந்தார். அப்பொழுது கர்த்தர்: இனி நான் மனுஷன் நிமித்தம் பூமியைச் சபிப்பதில்லை (பூமியை சபிப்பது) மனுஷனுடைய இருதயத்தின் நினைவுகள் அவன் சிறுவயது தொடங்கிப் பொல்லாததா யிருக்கிறது; நான் இப்பொழுது போல இனி சகல ஜீவன்களையும் சங்கரிப்பதில்லை.“ கடைசி வசனத்தை படியுங்கள்: பூமியுள்ள நாளளவும் விதைப்பும் அறுப்பும் சீதளமும் உஷ்ணமும், கோடை காலமும் மாரிக்காலமும், பகலும் இரவும் ஒழிவதில்லை என்று தம்முடைய உள்ளத்தில் சொன்னார்.“ (ஒரு உடன்படிக்கை). ஆதி.8:22 யோவான் ஒன்றை கண்டான். தேவனால் ஏற்றுக் கொள்ளப் பட்ட உடன்படிக்கையாகிய இயேசுவானவர் வானங்களை சூழ்ந்து இருக்கிறார். அவரைச் சுற்றி ஒரு வானவில் இருந்தது. சிங்காசனத் தைச் சுற்றி .... அது பார்வைக்கு மரகதம் போல் இருந்தது, சொகுசா நிறமாயிருந்தது, சிங்காசனத்தைச் சுற்றி, பச்சை நிற ஒளியிருந்தது தேவனுடைய ஸ்தோத்திரம் உண்டாவதாக. 78கவனியுங்கள். நோவாவின் வானவில் பிரதானமாக ஏழு நிறங்கள் கொண்டதாக இருந்தது அந்நிறங்கள் எவை? சிவப்பு, செம்மஞ்சள் நிறம், பச்சை நீலம், செங்கருப்பு நீலமும், நீலமும் கலந்த நிறம் (இண்டிகோ), செங்கருப்பு நீலம் (வாயலட்) மஞ்சள் ஆகிய நிறங்கள் தான் வானவில்லின் நிறங்கள். இப்பொழுது இங்கே நமக்கு ஆழமான காரியம் இருக்கிறது; நான் இப்பொழுது அதிலுள்ள உச்சமான காரியங்களைத் தொடப்போகிறேன், ஏனெனில், நேரமாகிக் கொண்டிருக்கிறது; இப்பொழுது ஞாபகத் தில் கொள்ளுங்கள். சிவப்பு ஆரஞ்சு நிறம் (செம்மஞ்சள் நிறம்) மஞ்சள், பச்சை, நீலம் இண்டிகோ (செங்கருப்பு நீலமும், நீலமும் கலந்த நிறம் வயலட் (செங்கருப்பு நீல நிறம்).... 12. ஏழு என்ற எண், அதை நீங்கள் கவனித்தால்... வானவில்லின் ஏழு நிறங்கள். அதாவது ஏழு வில் உள்ள வானவில். ஏழு வில்கள், ஏழு சபைகள், ஏழு ஒளிகளை பிரதிபலிக்கின்றன. ஒவ்வொரு ஒளியும் அடுத்ததில் சேர்ந்து இருக்கிறது. அது சிவப்பு நிறத்தில் ஆரம்பிக்கிறது. சிவப்பு. சிவப்புக்குப் பிறகு செம்மஞ்சள் நிறம் (ஆரஞ்சு நிறம்) வருகிறது. அது சிவப்பின் பிரதிபலிப்பாக இருக் கிறது. ஆரஞ்சு நிறத்திற்குப் பிறகு, மஞ்சள் நிறம் வருகிறது, அது தானே சிவப்பும் ஆரஞ்சு நிறங்களும் கலந்ததினால் வருவதாகும். அதன் பிறகு பச்சை, பச்சையும், நீலமும் கலந்தால் கருப்பு நிறம் ஏற்படுகிறது. பிறகு இண்டிகோ நிறம் (செங்கருப்பு நீலமும், நீலமும் கலந்த நிறம்) அதற்கடுத்த நிறம் வயலட் ( செங்கருப்பு, நீல நிறம்), அதுவும் நீல நிறத்தின் பாகமாக இருக்கிறது. ஓ, ஓ, ஓ, ஓ! அல்லேலூயா! அதை நீங்கள் காணவில்லையா? தேவன் தமது ஏழு வண்ண வானவில்லில் இருக்கிறார். அவர் செய்த உடன்படிக்கையானது, ஏழு சபைக்காலங்களை நிரூபிக்கிற உடன் படிக்கையாக இருக்கிறது. அதில் ஏழு நிறங்கள்.... அவர் பூமியைக் காப்பதாக கூறுகிறது. 79அவர் என்ன செய்யப்போகிறார்? நினைவில் கொள்ளுங்கள். அவர்தன் உடன்படிக்கையை பூமியோடு செய்தார், அவருடைய வண்ணம். ஆனால் இப்பொழுது கவனியுங்கள். இந்த வான வில்லானது, அடிவானம் சார்ந்த நிலையாக கிடைக்கோட்டில் மட்டுமே இருக்கிறது: பூமியின் ஒரு பகுதியை மட்டுமே உள்ளடக் கியதாக இருக்கிறது. (ஒரு வில் வடிவத்தில் இருக்கிறது) அந்த மட்டில் மாத்திரமே நோவாவின் வானவில் வண்ணமிட்டது. பூமியின் பாதியளவு மட்டுமே அது நிறைந்து இருந்தது. ஒரு வளைவு எவ்வாறு ஒரு அரை வட்ட அளவே இருக்குமோ, அதே போல் தான் அது இருந்தது. ஆகவே பாதியளவு தான் நீங்கள் அதனைக் காணமுடியும். ஆனால் யோவான் அவரை அவரது மரகத வண்ணத் தில் கண்டபோது, அவர் தேவனுடைய முழு சிங்காசனத்தையும் முழுவட்டமாக சூழ்ந்து இருந்தார். பாதியளவு இன்னும் சொல்லப் படவில்லை. அவரது வண்ண வானவில், பூமியில் வட்டத்தின் ஒரு பாகமாக மட்டுமே, அதாவது ஒரு வில்லாக அமைந்தது. வட்டத் தின் ஒரு பாதிதான் அது; சபைக்காலங்களைக் குறிக்கிறது. 80ஆனால் யோவான் அவரை சொகுசாவின் நிறத்தில் கண்ட போது, அவர் ஒரு முழு வட்ட, வளையமான பிரபையாக (Halo) சுற்றி சூழ்ந்திருந்தார். ஒரு வளையமும்! (சகோ. பிரான்ஹாம் பேச்சை இடையில் நிறுத்தி, விளக்குவதற்காக ஏதோ ஒன்றைத் தட்டுகிறார் - ஆசி) அவரைச் சுற்றிலும் சொகுசாவின் நிறமான ஒரு வட்டவளையம் சூழ்ந்திருந்தது. பார்த்தீர்களா? ஒரே நிறம் எல்லோர் மேலும், எல்லோருக்குள்ளும், எல்லோர் மூலமும் ஒரே தேவன் தான் இருக்கிறார், ஆனால் ஏழு சபைக்காலங்கள் உள்ளன. ஒரு பெரிய வைரத்தைக் கவனியுங்கள். நீங்கள் அவைகளை ஆப்பிரிக்கா தேசத்தில் வீதிகளில் கிடக்கக் கணலாம். அதில் ஒன்றைக்கூட எடுத்து வைத்துக்கொள்ள நீங்கள் துணியமாட்டீர் கள்; ஏனெனில் அது பட்டை தீட்டப்படாத ஒன்றாகும். பட்டை தீட்டப்படாத வைரம் ஒன்றை நீங்கள் வைத்திருப்பீர்களானால், அதை வைத்திருந்ததற்காக, உங்களை சிறைப்படுத்தி உங்களுக்கு ஆயுட்காலம் சிறை வாசம் கொடுத்துவிடுவார்கள். அதைக் கண்ட வுடன் நீங்கள் அதை ஒப்படைத்துவிடவேண்டும். 81வைரமானது கடினமான ஒரு பொருளாகும். அவர்கள் அதை எடுத்து .... நான் நாற்பது டன் திறன் உள்ள, கற்களை அறைத்து பொடி செய்யும் இயந்திரத்தை உயரத்திலே நிறுத்தி வைக்கப்பட்டி ருப்பதைப் பார்த்துள்ளேன். அதில் நீல நிற கற்களைப் போட்டு விடுவார்கள். அது சாம்பலைப்போல் தூள்தூளாக அக்கற்களை அறைத்து தள்ளவிடும். ஆனால் அதினால் வைரக்கல்லை அறைத்து விட முடியாது. இந்த நாற்பதுடன் அறவை இயந்திரம் உயரே ஒரு சுழலச் செய்கிறதான பொறியில் இணைக்கப்பட்டு தொங்கிக் கொண்டு இருக்கும். அவ்வாறாக அது பெரிய தடைக்கட்டைகள் கட்டி தொங்க விடப்பட்டு, உருண்டு கொண்டே அப்பாறைகளை தூள் தூளாக ஆக்கிவிடும். ஆனால் அதில் அகப்படும் வைரக் கல்லோ நொறுங்காது, அறைபடாது, அப்படியே முழுமையாக மீண்டு செல்லும். அது அந்த நாற்பது டன் எடையுள்ள உடைக்கும் இயந்திரத்தை அசைத்திடும். ஓ! அவ்வாறு அந்த நொறுக்கும் இயந்திரத்தால் இடிக்கப்பட்டும், கொஞ்சமும் நொறுங்காமல் அது புடையல் இயந்திரத்தால் தனியே புடைத்து சலித்து எடுக்கப் பட்டு, கழுவப்பட்டு, தொழிற் சாலைகளில் பொருட்களை எடுத்துச் செல்லும் நீண்ட கன்வேயர் பெல்ட் வழியாக எடுத்துச் செல்லப் படும். அந்த பெரிய கிம்மர்லி வைரச் சுரங்கத்தின் மேலாளர் (Manager) என்னுடைய கூட்டங்களில் வரிசைகளை ஒழுங்க படுத்துபவராக இருந்தார். அவர் உண்மையான தாழ்மையுள்ளவர், இனிய சகோதரர் அவர். 82அதன்பிறகு, தண்ணீர் ஓடிக்கொண்டிருக்க அதற்கு சுமார் மூன்று அடிக்கு மேலாக தூள் தூளாக நொறுக்கப்பட்ட பாறைத் துகள்களும் அதனுள் கிடக்கும் வைரக் கற்களும் ஓடும். அதில் காஸ்மோலின் என்ற ஒரு பொருளை தடவியிருப்பார்கள். அது என்ன? மேடா! நமது கேபினெட்டில் அந்த ஜாடியில் நாம் வைத் திருக்கும் அந்தப் பொருள் என்ன? அது வாஸலைன். அங்கே பக்கத்தில் ஒரு அங்குல கனத்திற்கு அந்த வாஸலின் பூசப் பட்டிருக்கும். வைரச் சுரங்கத்தில் வெட்டியெடுக்கப்பட்டு இயந்திரத்தால் இடித்து நொறுக்கப்பட்ட பாறைகள் அந்த வாஸலின் மேல் ஓடி வரும் போது அது அதில் ஒட்டிக் கொள்ளாமல் நழுவிச் சென்று விடும். ஆனால் அப்பாறைத்துக்கள் வைரக்கற்கள் கடந்து வரும்போது அவை அந்த வாஸலின் மேல் ஒட்டிக்கொள்ளும். வைரக் கல்லானது ஈரப்பசையற்று இருக்கும், எனவே அது அப்படியே ஒட்டிக்கொள்ளும். நான் அந்த வைரக்கற்களை பொறுக்கியெடுப்பதைக் கண்டிருக்கிறேன்; மிகச் சிறிய வைரக்கற்களை கூட அவர்கள் லென்ஸ்கள் மூலம் கண்டுபிடித்து பிரித்தெடுப்பார்கள். அவர்கள் அவைகளை என்ன உபயோகத்திற்காக பயன்படுத்துகிறார்கள் என்று நான் அவர்களைக் கேட்டபொழுது, அவர்கள் அதை அமெரிக்கா வுக்கு விக்ட்ரோ லோ ஊசிகள் தயாரிப்பதற்கு அனுப்பி விடுகிறார்கள் என்று கூறினார்கள். அவைகள் தேய்ந்து போவதேயில்லை. ஆனால் இந்தப் பெரிய வைரக்கற்கள் பெரிய பந்து போல் ருக்கின்றன. அவர்கள் அவ்வைரக்கற்களை மின் இயந்திரங்களைக் கொண்டு பட்டை தீட்டி, பட்டை தீட்டப்பட்ட வைரமாக ஆக்கு கிறார்கள். அவர்கள் அவைகளை பட்டை தீட்டும் போது, அக்கினி மயமான நிறங்கள் அவைகளிலிருந்து பளிச்சிடும், அது ஏழு நிறங்களையும் கூட பிரதிபலிக்கும். ஓ, எவ்வாறு இயேசுவும்... உங்களிடத்தில் ஏராளமான பணம் இருக்கலாம். உங்களுக்கு நிறைய கடிலாக் மோட்டார் கார்கள் சொந்தமாக இருக்கலாம். நீங்கள் ஒரு பெரிய கதீட்ரலுக்கு மேய்ப்பராக இருக்கக்கூடும். நீங்கள் ஒரு பேராயராக, அல்ல ஒரு ஆர்ச்பிஷப்பாக இருக்கலாம். ஆனால் ஓ, சகோதரனே, நீங்கள் அந்த இரத்தினத்தை, அந்த மகத்தான வைரத்தை. ஒரு மனிதன் கண்டுகொள்ளும்போது, அப்பொழுது அவன் தன்னுடைய ஆஸ்தியையெல்லாம் விற்று அதைக்கொள்ளுகிறான். எல்லாவற்றையும் அதற்கென கொடுத்து விடுகிறான். 83உறங்கும் கன்னியரைப்பாருங்கள். ஓ, அவள் என்ன செய்தாள்? அவள் தனது எண்ணெயை வாங்குவதற்காக, ஒன்றை விற்க வேண்டியவளாய் இருந்தாள். அவள் எதை விற்க வேண்டி யிருந்தது? அவளது பழைய மதக்கோட்பாடுகளையும், ஸ்தாபனங் களையும் மற்றும் அவற்றின் காரியங்களையுமே. கிறிஸ்துவாகிய அந்த மகத்தான இரத்தினக் கல்லைக் கண்டு கொள்ள அவள் தனக்குள்ளதெல்லாவற்றையும் விற்றுவிட்டாள். இயேசுவாகிய அந்த சரீரம்... (ஒலிநாடாவில் காலியிடம் -ஆசி) இந்த இருண்ட விடியற்காலைகளில் ஒன்றில் பரலோகத்திற்குக் கொண்டு போவ தற்கான வண்டியானதும் வரும் வேளையில், பரலோகத்திற்குப் போவதற்காக டிக்கெட் என்னிடம் இருக்குமானால், ஓ, அது எத்தகைய ஒரு ஆசீர்வாதமாயிருக்கும். மெய்யாம் ஜீவ நதி பாவம் போக்கும் நதி, வேறேந்தியை அறியேன், இயேசுவின் இரத்தந்தானே. 84கீர்த்தியோ, அல்லது பெரிய பகட்டான காரியங்களோ அல்ல, ஐசுவரியங்கள் அல்ல, இல்லை, இல்லை, அவையொன்று மில்லை, அந்த விலையேறப்பெற்ற ஜீவ நதியை எனக்கு தாருங்கள். அவ்வளவுதான்! நான் ஒன்றும் கொண்டு வரவில்லை சிலுவையை மட்டும் பற்றிக் கொள்வேன். அந்த மகத்தான இரத்தினக்கல்! அது என்னவாயிருந்தது? அது பூரணமானதாக இருந்தது. அது முப்பத்து மூன்றரை வயது டையதாக இருந்தபோது, தேவன் அந்த விலையேறப்பெற்ற வைரக் கல்லை அந்த பெரிய நொறுக்கும் இயந்திரத்தில் வைத்தபோது, அது அங்கிருந்து எடுக்கப்பட்டபோது, அவர் அதை எடுத்து பட்டை தீட்டி நொறுக்கி, காயப்படுத்தி அதை உருவாக்கினார். “நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்; நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர் மேல் வந்தது; அவருடைய தழும்புகளால் குணமாகிறோம். ஏசா.53:5 அப்பரிபூரண மனிதனுக்கு தேவன் என்ன செய்தார்? அத்தகையதான மனிதர் ஓரேயொருவர்தான் இவ்வுலகில் இருந் திருக்கிறார். அது அவராகத்தான் இருந்தது. தேவன் அவரை இங்கே செதுக்கி, செம்மையான வடிவமைப்பை ஏற்படுத்தினார். ''நம் முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டார்.“ ஏனெனில் நான் ஒரு பாவியாக இருந்தபடியால், அவர் தமது ஏழு சபைக் காலங்களின் வானவில் ஒளியை என் மேல் பிரகாசிக்கச் செய்து, அவர் என்னுடைய மீறுதல்களினிமித்தம் காயப்பட்டார் என்பதை நான் அறியும்படி செய்தார். அங்கே உங்களுடைய ஏழு நிற வானவில்லானது இருக் கிறது. 'அவர் நமது மீறுதல்களினிமித்தம் காயப்பட்டார். நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர் மேல் வந்தது; அவருடைய தழும்புகளால் நாம் குணமானோம்.“ தேவன் அவரை நொறுக்கினார், அவரைக் காயபப்டுத்தினார், அவரை அடித்து நொறுக்கினார். அதின் மூலமாக, மரித்துக்கொண்டிருக்கும் அவரது காயங்களின் மூலமாக, பாவ மன்னிப்பு , சந்தோஷம், சாந்தம் தயவு ஆகியவைகள் நம்மேல் பிரகாசிக்கும்படி செய்தார். தேவனுடைய ஏழு ஆவிகளும், ஆவியின் ஏழு கனிகளைக் குறிக்கும், அவை அவருடைய ஜனங்கள் மேல் திரும்பி பிரதிபலிக்கும். அவர் காயப்பட்டு, உருவகப்படுத்தப்பட்டு, உருவாக்கப்பட்டார் அதினால் தேவனுடைய ஒளியானது அந்த மனிதனின் சரீரத்தின் மூலமாக பிரதிபலித்து, முழு உலகையும் மீட்கத்தக்கதாக ஆயிற்று. ''நான் பூமியிலிருந்து உயர்த்தப் பட்டருக்கும் போது, எல்லாரையும் என்னிடத்தில் இழுத்துக் கொள்வேன்''. அந்த வானவில்லானது தனது நிறங்களை பிரதிபலிக்கச் செய்திடுகையில், அதைக் கவனித்துப் பாருங்கள். 85ஆனால் யோவான் இங்கே அவரைக் காண்கையில், அது என்னவாயிருந்தது? மீட்பின் நாளானது முடிவடைந்திருந்தது. அது யாவும் முற்றுப்பெற்றுவிட்டது. எனவே யோவான் அவரை இங்கே அவரது மூலநிலையில், சொகுசாவின் நிறத்தில் காண் கிறான். உலகின் பாதி வரையில் மட்டுமல்ல... சூரியனானது சுற்றி வருகையில், ஒரு சமயத்தில் பூமியின் பாதியளவுக்கு மட்டுமே பிரகாசிக்கிறது என்பதைப் பாருங்கள். ஆனால் யோவான் அவரை அங்கே காண்கையில், அவர் அங்கே அச்சிங்காசனத்தின் மேல் அமர்ந்திருக்கையில் பார்வைக்கு பதுமராகத்துக்கும் வச்சிரக் கல்லுக்கும் ஒப்பாயிருப்பதைக் கண்டான். அது சொகுசாவின் நிறமாயிருந்தது. பதுமராகத்யுைம் வச்சிரக்கல்லையும், அதின் இரு நிறங்களையும் கலந்தால், உங்களுக்கு சொகுசாவின் நிறம் கிடைக் கும் சிங்காசனத்தைச் சுற்றிலும் சொகுசாவின் நிறம் உண்டா யிருந்தது. ஓ, என்னே ! நான் உங்களுக்குக் கூறுவேன். இதைப் பற்றி நாம் இன்னும் பார்த்துக் கொண்டே போகலாம். ஏழு ஆவிகளில், ஏழு நிறங்கள் ஏழு சபைக்காலங்கள், ஏழு தூதர்கள், ஏழு விளக்குகள், ஆக யாவும் ஏழில் உள்ளது. தேவன் 'ஏழு'' என்ற எண்ணில் நிறைவு அடைகிறவராக இருக்கிறார். தேவன் ஆறு நாட்கள் கிரியை செய்து, ஏழாம் நாளிலே ஓய்ந்திருந் தார். உலகமானது ஆயிரம் ஆண்டுகள் நிலைத்திருந்து, பிறகு , ஏழாவது ஆயிரத்தில் ஆயிர வருட அரசாட்சியாகும். 86அரை வட்டத்தில், “இன்னும் பாதியளவு கூறப்பட்ட வேயில்லை” என்பதைக் கவனியுங்கள். இப்பொழுது, இவைகள் நிச்சயமாகவே ஒன்றைக் குறித்து எடுத்துகாட்டாய் உள்ளன. யாத்திரகாமம் 23:13லும், எபிரெயர் 6:12லும் தேவன் தன் பேரில்தானே ஆணையிட்டு “ ஒரு உடன்படிக்கையை ஏற்படுத் தினார் என்று பார்க்கிறோம் எபிரெயர் 6:13-ல் தமது பேரிலே ஆணை யிட்டு என்று கூறப்பட்டுள்ளது. ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் அவர் சொன்னபோது, ஆபிரகாமோடு அவ்வுடன்படிக்கை அவர் செய்யப்போவதாக கூறிய போது - அது நித்திய உடன்படிக்கையை யாகும்? ஆணையிடுவிக்கும்படி அவரிலும் மேலாக ஒருவரும் இல்லை . ஒரு உடன்படிக்கையானது, எப்பொழுது ஒரு ஆணையால் உறுதிப்படுத்துப்படும் எனவே அங்கே அவரிலும் மேலானவர் ஒருவருமில்லை. உங்களிலும் மேலான ஒருவரின் பேரில் தான் நீங்கள் ஆணையிடுதலையும் செய்வீர்கள். ஒரு வேளை உங்கள் தாயின் பேரில் செய்வீர்கள், அல்லது உங்கள் தேசத்தின் பேரில் ஆணை யிட்டுக்கொடுக்கலாம். ஏதோ ஒன்றின் பேரில் ஆணையிட்டுக் கொடுப்பீர்கள், தேவனின் பேரில் ஆணையிட்டு கொடுப்பீர்கள். உங்களிலும் மேலாக ஒருவர் உங்களுக்கு இல்லாவிடில் நீங்கள் ஆணையிட்டுக் கொடுக்க முடியாது. அங்கே தேவனிலும் மேலானவர் ஒருவர் இல்லை, ஆகவே அவர் தமது பேரிலே தானே ஆணையிட்டு கொடுத்தார். ஆமென் அவர் தன்னைக்கொண்டே தன் பேரிலேதானே ஆணையிட்டு, தாம் இந்த உடன்படிக்கையை உறுதிப்படுத்துவதாகக் கூறினார். ஆமென் ஓவ்யூ! 'ஆபிரகாமின் வித்தைக் காப்பதாக'' தன் பேரிலேயே ஆணையிட்டுக் கொடுத்தார். புறஜாதிகளுக்கு ஆபிரகாமின் சந்ததி எவ்வாறு உள்ளது? பரிசுத்த ஆவியின் அபிஷேகம் ஆபிரகாமின் சந்ததியாயிருக்கிறது. தமது பேரிலேதானே ஆணையிட்டு, “நான் அவர்களை எழுப்பி, அவர்கள் ஒவ்வொருவருக்கும் நித்திய ஜீவனைக் கொடுத்து, அவர்களை இப்பூமியில் மீண்டும் நிலைக்கப் பண்ணு வேன்” என்றார். அதை பார்க்கயிைல், நமக்கு வருத்தப்படுவதற்கு என்ன இருக்கிறது? 87எனவே நாம் அவரை இந்த பச்சை, சொகுசாவின் நிறமுள்ள வட்டவடிமான வில்லில் பார்க்கிறோம். பச்சை நிறமாயுள்ள இது, எதை எடுத்துக் காட்டுகிறது? ஜீவனை எடுத்துக் காட்டுகிறது. பச்சை நிறம் சதா பசுமையாகவே இருக்கிறது. எப்பொழுதும் பச்சையாகவே இருக்கிறது. அது ஜீவனாயிருக்கிறது. அதன் அர்த்தம் என்ன? ஆதியாகமத்தில் அவர் ஆணையிட்டுக்கொடுத்து, வாக்குத் தத்தம் செய்திட்டார். எப்படியெனில், ஆகாயத்தில் வானவில்லைப் போட்டு, இனி இவ்வுலகை ஜலத்தினால், அழிக்கப்போவதில்லை என்று ஆணையிட்டு கொடுத்தார். அவர் மேலும் ஆணையிட்டு, தமது பேரிலேதானே ஆணையிட்டுக் கொடுத்ததென்னவெனில், ஆபிர காமின் சந்ததி அனைத்தையும் எழுப்புவேன் என்றார். மேலும் இவ்வுலகமானது, அசையச் செய்யும் நியாயத்தீர்ப்புகள் அனைத் திலும் நிலைத்திருக்கும் என்றார். வரப்போகும் பாடங்களில் நியாயத்தீர்ப்புகளைப் பற்றி நாம் பார்க்கிப்போகிறோம். அப்பாடம் உங்களுக்கு இவ்வுலகமானது எப்படி வெந்து எரிமலைப் போல் உருக்கிப்போகும் என்பதையும், வெடித்துச் சிதறும் என்பதையும் தலைகீழக புரட்டிப்போடப்படும் என்பதையும் பற்றியும் உங்களு களுக்கு காண்பிக்கும் ஆனால் அவரோ தம் பேரிலே தானே ஆணையிட்டு, தான் அழிப்பதில்லை என்றும், தாம் அதை நேர்சீர் செய்து தமது பிள்ளைகளை ஆயிரமாண்டு அரசாட்சிக்காக அங்கே வைக்கப்போவதாகவும் உறுதியிட்டு வாக்குரைத்தார். ஓ, என்னே! ஆயிரமாண்டு அரசாட்சியின் நாளுக்காக நான் ஆவலுடன் காத்திருக்கிறேன்; அப்போது நமது துதிக்கப்பட்ட கர்த்தர் வந்து, காத்துநிற்கும் தம் மாணவாட்டியை எடுத்துக்கொள்வார். ஓ எனது இதயம் அவ்வினிய விடுதலைக்காக ஏங்குகிறது, கதறுகிறது, அப்போது நமது இரட்சகர் பூமிக்கு மீண்டும் வந்திடுவாரே. ஓ! ஆயிரமாண்டு அரசாட்சி வந்திடும் என அவர் வாக் குரைத்த அந்த மகத்தான நாளுக்காக நாம் எவ்வளவாய் ஏங்கித் தவித்துக் கொண்டிருக்கிறோம்! மற்றுமொரு காரியம், வானவில் அவரைச் சூழ்ந்திருந்தது என்பதற்குக் காரணம் என்னவெனில், அவர் உடன்படிக்கையைக் காத்துக் கொள்கிற தேவனவர். அவர் தமது உடன்படிக்கையைக் காத்துக் கொள்வார். 88இப்பொழுது, நாம் எப்படியாவது அடுத்த வசனத்தை எடுத்துக்கொள்வோம். நாம் இன்னும் ஒரு வசனத்தை எடுத்துக்கொள்வோம், அதைப் பார்ப்பதற்கு நமக்கு பத்து பதினைந்து நிமிடங்களே உள்ளன. நீங்கள் மிகவும் களைப்பாய் இருக்கிறீர் களா? தொடர்ந்து நாம் செல்லலாமா? (சபையோர் 'ஆமென்'' என்கின்றனர்-ஆசி). நல்லது நாம் நான்காம் வசனத்தை எடுத்துக் கொள்வோம். “அந்தச் சிங்காசனத்தைச் சூழ இருபத்து நான்கு சிங்காசனங் களிருந்தன; இருபத்து நான்கு மூப்பர்கள் வெண் வஸ்திரந் தரித்து, தங்கள் சிரசுகளில் பொன்முடி சூடி, அந்தச் சிங்காசனங்களின் மேல் உட்கார்ந்திருக்கக் கண்டேன்.'' வெளி. 4:4) அந்த வசனத்தை முழுமையாக நாம் பார்க்க முடியாது போகக்கூடும். ஆனால் நாம் நான்காம் வசனத்தை ஆரம்பித்து விடுவோம். இப்பொழுது பாருங்கள், யோவான் அவரைக் கண்ட போது, அவரைச் சுற்றிலும் மரகத நிறம் போல் இருந்தது. நாம் எல்லா நிறங்களையும் பார்த்தோம், வானவில்லையும் மற்றும் இன்ன பிற காரியங்களையும் பார்த்தோம், அவைகள் எதைக் குறிக்கின்றன என்பதையும் பார்த்தோம். நான்காம் வசனத்தில், இப்பொழுது, இங்கே அவர் முதலாவதாக கூறும் காரியம் என்னவெனில், நான்காம் வசனத்தில் : “அந்தச் சிங்காசனத்தைச் சூழ...” கவனிக்கவும் இங்கே அது அத்தகையதொரு அழகான காட்சியாக இருக்கிறது, அதைக் கவனிக்கத் தவறவேண்டாம். ''சிங்காசனம்.'' 89நாம் மோசேக்கு திரும்பிப் போவோம். அதையெல்லாம் நாம் எடுத்துப் பார்ப்பதற்கு நமக்கு நேரம் இல்லை. நான் சொல் வதை மட்டும் நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள். சீனாய் மலையின் மேல் மோசேக்கு தரிசனம் அளிக்கப்பட்ட போது...... இங்கே காணப்பட்ட சிங்காசனமானது இனி முதற் கொண்டு கிருபையின் சிங்காசனம் அல்லவே அல்ல என்பதை நீங்கள் கவனிக்க வேண்டுமென நான் விரும்புகிறேன். அங்கே இரத்தமானது நீங்கிவிட்டது, பலியானது திரும்பிவிட்டது, அவர்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டு விட்டார்கள். எனவே இப்பொழுது கிருபாசனத்தின் மீது இரத்தமானது இருக்கவில்லை. ஆகவே அது இப்பொழுது ஒரு நியாயாசனமாக ஆகிவிட்டது. ஏனெனில், அங்கே இடிமுழக்கங்களும், மின்னல்களும் அதிலிருந்து புறப்பட்டது. அது சரிதானே? அது சீனாய் மலையைப் போல் இருந்தது என்பதை நினைவில் கொள்ளுங்கள். மோசேசீனாய் மலையின் மேல் சென்றபோது என்ன நேரிட்டது? இடி முழக்கமும், மின்னலும் உண்டாகியது. ஒரு மாடோ, அல்லது ஒரு கன்றுக்குட்டியோ, அல்லது ஆடோ அல்லது வேறு எதுவுமோ அந்த மலையைத் தொட்டால் கூட அது சாக வேண்டும். 'மோசேயும் பயந்து நடுங்கத்தக்கதாக அந்தக் காட்சி அவ்வளவு பயங்கரமாயிருந்தது'' என்று வேதம் கூறுகிறது. மோசேக்கு கூறப்பட்ட பொழுது.... “உன் பாதரட்சையைக் கழற்று, நீ நிற்கிற இடம் பரிசுத்த பூமி'' என்னப்பட்டது. மகத்தான போர் வீரனான யோசுவா இஸ்ரவேல் புத்திரரை அழைத்துச் சென்று அவர்களது சுதந்திர வீதத்தை அவர்களுக்குப் பிரித்துக் கொடுக்க ஏற்படுத்தப்பட்டான், அவனுங்கூட மலையில் பாதியளவே வர முடிந்தது. இங்கே மோசே, தேவன் தன்னுடைய நிறங்களோடு நின்று கொண்டிருக்க, மின்னல்களும், வெளிச்சங்களும், அவரைச் சுற்றி மரககதம் போல் காணப்பட்டிருக்க, கட்டளைகள் எழுதப்படு வதைக் கவனித்துக் கொண்டிருந்தான். அவன் தேவ சமூகத்தில் நின்று கொண்டிருக்கையில், அந்த சத்தமானது அவனிடம் பேசி, “மோசே, நீ எங்கு நின்று கொண்டிருக்கிறாய்? நீ நிற்கிற இடம் பரிசுத்த பூமி, உன் பாரதட்சைகளைக் கழற்று” என்று கூறியது. 90அது இப்பொழுது நியாயாசனமாக ஆகியிருக்கிறது, மீட்கப் பட்டவரைத் தவிர வேறு எவரும் அதற்கு முன்பாக நிற்க இய லாது. பாவி அதை அணுக முடியாது, முடிந்துவிட்டது, அது நியாயாசனம் இப்பொழுது. மோசே பரலோகத்தில் கண்ணுற்றவைகளுக்கொப்பான வைகளை பூமியில் உண்டாக்கினான், ஆசரிப்புக் கூடாரத்தை உண் டாக்கினான். நாம் அதை அறிவோம் அல்லவா? பவுலும் அதையே தான் செய்தான் என்பதை நாம் காண்கிறோம். எபிரெயர் 9:23ல் மோசே தான் கண்டபிரகாரமாகவே அதற்கு சாயலானவைகளை உண்டாக்கினான். பவுலுங்கூட தன் தரிசனத்தில் பரலோகத்திற்கு மேலே ஏறிச்சென்றபொழுது, மோசே பார்த்த அதே காரியங்களை அவனுங் கண்டான். ஏனெனில் அவன் அதைப் பற்றி எபிரெயர் நிரூபத்தில் போதிக்கிறான். அவன் கிறிஸ்தவமானது எவ்வாறு பழைய ஏற்பாடாகிய நிழலுக்கு உரிய பொருளாக இருக்கிறது, அந்நிகழலுக்குரிய உண்மை பொருளாக இருக்கிறது என்பதை எபிரெயர் புத்தகத்தின் மூலம் போதித்தான். பவுல் ஒரு பெரிய போதகனாக இருந்தான். அப்பொழுது அதுவே அவருடைய சிங்காசனமாயிருந்தது. பிறகு... 91நாம் இதை முடிப்போமாக. நான் இதைக் கடந்து சென்று விட இருந்தேன். ஆனால் என்னால் அவ்வாறு செய்ய இயலவில்லை. அந்த கறுப்பு.... எங்கே? பின்னால் இருக்கும் டாக் அவர்களே, நீங்கள் அதை பின்னால் எடுத்துக் கொண்டுபோய் விட்டீர்களா? இங்கிருந்து அதை நான் உங்களுக்குக் காணும்படி செய்ய இயலும். நான் ஒரு காரியத்தைக் கூறப் போகிறபடியால், உங்களுடைய பேப்பரையும், எழுதுகோலையும் எடுத்துக் கொள்ளுங்கள். நான் இன்று காலையில் உட்கார்ந்து கொண்டிருக்கையில், ஒரு காரியம் என்னிடத்திற்கு வந்தது. நான் என்ன செய்தேன் என்பதை உங்களுக்கு கூறுவேன்; இதற்குப் பின்னால் நான் அதை வரைந் திருக்கிறேன், அதை நீங்கள் கவனித்தால் காணலாம். ஆவியானவர் எனக்குத் தந்த வண்ணமாகவே, அப்படியே நான் அதை இங்கே வரைந்திருக்கிறேன். அது எவ்வாறிருக்கும் என்று காட்டப் பட்டதோ அதை வரைந்திருக்கிறேன். ஆனால் நான் இங்கே ஒரு விஷயத்தைக் கூற விரும்புகிறேன். தேவன் சிங்காசனத்தில் வீற்றிருக்கையில், அப்பொழுது அவர் நியாயாதிபதியாக இருக்கிறார். அப்படித்தானே? எப்பொழுது ஒரு நியாயாதிபதி நியாயந்தீர்க்கிறார்? அவர் தன்னுடைய நியாயசனத்திற்கு வரும் பொழுது; அது ஒரு சிங்காசனமாக இருக்கிறது. பழைய ஏற்பாட்டில் எவ்வாறு அவரது சிங்காசனத்தினை அணுகும் பிரகாரங்கள் உண்டாக்கப்பட்டன என்பதை நீங்கள் இப்பொழுது கவனிக்க வேண்டுமென்று நான் விரும்புகிறேன். அதை யோவான் இங்கே எவ்விதமாக இருக்கக் கண்டான் என்பதை கவனியுங்கள். நாம் இன்று காலையில் இதில் முழு வதையும் பார்க்கப் போகிறதில்லை. ஆனால் யோவான், அவரை அணுகுவதற்கான பிரகாரங்களை எவ்வாறு கண்டான், அவரது பிரகாரங்களை அணுகுவதற்கான விதம் எவ்வாறு என்பதைப் பார்க்கலாம். ஓ, நான் இதை நேசிக்கிறேன். 92இப்பொழுது, பழைய ஏற்பாட்டில் மக்கள் கூடி வருதலான சபை அங்கே இருந்தது. முதலாவதான காரியம் என்னவெனில், அவர்கள் சபையாக கூடி வந்தார்கள். அங்கே அவர்கள் உள்ளே வருவதற்கு, அவர்கள் சிந்தப்பட்ட இரத்தத்தின் கீழாக வெளிப் பிரகாரத்தில் வரவேண்டும். முதலாவதாக அவர்கள் வேறு பாட்டின் தண்ணீர்களுக்குக் கீழாக வருகிறார்கள். அங்கே சிவப்பான கிடாரி கொல்லப்பட்டு, வேறுபாட்டின் தண்ணீர் களண்டைக்கு வருகிறார்கள். அதில் தான் பாவி வந்து, வார்த் தைக்கு செவிகொடுக்கிறான். டுல்ஸா என்ற இடத்தில் அந்த பெரிய யூத ரபீ (போதகர்) நான் அவைகளைக் குறித்துப் பேசியதைக் கேட்டபொழுது தான், கர்த்தரிடம் வந்தார். அது டுல்ஸா என்ற இடத்தில் நடைபெற்றது. டுல்ஸா, ஓக்லஹோமா என்ற இடத்தில் நாங்கள் இருந்தோம். அவர் அங்கே வந்து அக்கூட்டத்தை வேடிக்கை பார்க்கிறவராக நின்று கொண்டிருந்தார். ஆராதனை முடிந்தபிறகு, அவர், “நான் அறிவேன்'' என்று கூறிவிட்டுச் சென்றார். உலகத்தில் தலைசிறந்த ஏழு ரபீமார்களில் அவரும் ஒருவர், 'அந்த கிறிஸ்தவ வியாபாரி கள் என்ன கூறுகிறார்கள் என்று, நான் அங்கே போய் உட்கார்ந்து கேட்க விருப்பமாயுள்ளேன்'' என்று அவர் கூறினார். அவர் அவர்களை ”பெந்தெகொஸ்தேயினர்'' என்று அழைத்தார். 93கர்த்தர் என்னை அந்த சிவப்பான கிடாரியை பலியிடுதலைக் குறித்து பேச நடத்திய போது, ஆராதனைக்குப்பிறகு, அந்த யூத ரபீ பின்னால் இருந்த சில சகோதரர்களை சந்தித்து, “நான் இந்த மனிதனை சந்திக்க விரும்புகிறேன், அவருக்கு சரியான கல்வியறிவு கூட கிடையாது என்பதை நான் அறிகிறேன்; நான் ஒரு யூத போதகர் ஆவேன், தேவனை அணுகுவதற்கான அந்த பல்வேறு வகையான அணுகுதல்களையும் பற்றி அறிவேன். நான் என் வாழ்நாளிலேயீயே இந்தவிதமாக காரியத்தை பார்த்ததில்லை. ஒருபோதும் இதுபோல் நான் கேட்டதில்லை'' என்று கூறினாராம். இப்பொழுது அவர் ஒரு பெந்தெகொஸ்தே போதகர் ஆவார், அவர் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டு, சுவிசேஷத்தைப் பிரசங்கித்துக் கொண்டிருக்கிறார். அவர் தன்னை பெந்தெகொஸ்தே ரபீ என்றே அழைத்துக் கொள்கிறார். அன்றொரு நாளில் சகோதரன் ஜாக் அவர்கள் இடத்தில் கூட்டத்திற்காக நாங்கள் அங்கே கூடியிருந்தபோது, அவர் தங்குவதற்காக கயூரி ஹோட்டலுக்குச் சென்றார். அந்த ஹோட்டலில் இருந்த அப்பெண்மணிக்கு அவரைத் தெரியும். அவள் கூறினாள்: “ரபீ, உங்களுக்கென அருமை யான ஒரு அறை உள்ளது, ஆனால் எங்களிடம் டெலிவிஷன் இல்லை'' என்று. அதற்கு அவர், 'அவைகளெல்லாம் 'ஹெலிவிஷன்கள்'' (Hellevisions), அவைகளை தூக்கியெறியுங்கள். அங்கே அது எனக்குத் தேவையில்லை. அப்படி டெலிவிஷன் அங்கே இருக்கு மானால், அதை அங்கிருந்து வெளியே எறிந்துவிடும்படி உங்களை நான் செய்துவிடுவேன்'' என்று கூறினார். (ஹெலிவிஷன் என்றால் நரகக் காட்சி என்று பொருள்படும் - மொழிபெயர்ப்பாளர்). அப்பெண்மணி, 'ரபீ'' என்று அழைத்தாள். அவர் கூறினார், “நான் ஒருபெந்தெகொஸ்தே ரபீ'' என்றார். அல்லேலூயா! அவர் என்னிடம், ''சகோதரன் பிரன்ஹாம் அவர்களே, தாங்கள் இஸ்ரேலுக்குப் போகும் போது நானும் உங்களுடன் வர விரும்புகிறேன். நான் சுவிசேஷத்தை எங்களுடைய ஜனங்களிடத் தில் எடுத்துச் செல்லலாம்'' என்று கூறினார். அதற்கு நான், “இப்பொழுது அல்ல, ரபீ அவர்களே, இப்பொழுது அல்ல. இப்பொழுது அல்ல, இன்னும் அதற்கான வேளை வரவில்லை. இன்னும் சிறிது காலம் பொறுத்திருங்கள்'' என்று கூறினேன். 94இந்த பரிசுத்த ஸ்தலங்களை இப்பொழுது கவனியுங்கள். நீங்கள் இப்பொழுது இந்தப் பிரகாரங்களில் வரும்பொழுது, முதலில் இப்பிரகாரங்கள், அதாவது வெளிப்பிரகாரம் உள்ளது. அடுத்தது பலிபீடமாகும், அங்கே பலிகள் செலுத்தப்பட்டன. அது வெண்கல பலிபீடமாகும். வெண்கல பலிபீடமானது வெளியே இருந்தது; மகா பரிசுத்த ஸ்தலத்திற்கு பிரவேசிக்கும் முன்னதாக ஒரு திரையானது அங்கே தொங்கிக்கொண்டிருந்தது. அதினுள் கிருபாசனமும், அதன் மேல் கேருபீன்களும் இருந்தன. அதைப் பற்றித்தான் நமது அடுத்த பாடத்தில் நாம் படிக்க வேண்டுமென நான் விரும்பினேன். அக்கேருபீன்கள் கிருபாசனத்தை நிழலிட்டு மூடிக் கொண்டிருந்தன. அக்கேருபீன்களைப் பற்றி நாம் மாதம் முழுவதும் படித்துக் கொண்டேயிருக்கலாம். 95அவர்கள் அங்கே பிரவேசித்தபொழுது, கவனியுங்கள். சபையார் பிரகாரத்தில் வந்து நிற்பார்கள்; பிரதான ஆசாரியன் இங்கே நிற்பான்; ஆனால் பிரதான ஆசாரியன் ஆண்டுக்கு ஒரு முறை தன்னோடு பலியாட்டுக்குட்டியின் இரத்தத்தை எடுத்துக் கொண்டு உள்ளே பிரவேசிக்க முடியும். அவன் ஒரு குறிப்பிட்ட விதத்தில் உடை உடுத்தியிருக்க வேண்டும், ஒரு குறிப்பிட்ட ஆடையை அணிந்திருக்க வேண்டும். அதில் கீழே வரிசையாக ஒரு மணியும், ஒரு மாதுளையும் ஆக மாறி பொருத்தப்பட்டிருக்கும். அவன் நடந்து செல்லுகையில் ஒரு குறிப்பிட்ட விதமாகத்தான் நடந்து செல்லவேண்டும். “பரிசுத்தர், பரிசுத்தர், கர்த்தர் பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர், கர்த்தர் பரிசுத்தர்'' என்று இசைத்துக் கொண்டேதான் அவன் செல்லவேண்டும். அவனது ஆடைகளின் கீழ்ப்பாகத்தில் பொருத்தப்பட்டிருக்கும் பொன்மணிகளும், மாதுளைகளும், பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர்'' என்று ஒன்று சேர்ந்து இசைத்துக் கொண்டேயிருக்கும். ஏன்? அவன் தேவனை, தன் கைகளில் உடன்படிக்கையின் இரத் தத்தை வைத்திருக்கிறவனாக, அதை ஏந்திக் கொண்டே, அவருக்கு முன்பாக அணுகிக் கொண்டேயிருக்கிறான். அவருக்கு முன்பாக போய்க் கொண்டேயிருக்கிறான். அவன் குறிப்பிட்ட பரிமளதைலத்தினால் அபிஷேகிக்கப் பட்டு இருந்தான். (ஓ, என்னே !) அவனது ஆடைகள் பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்ட கரங்களால் தான் உண்டாக்கப்பட வேண்டும். அவனது ஆடைகளைத் தைப்பதற்காகவே பதிவு செய்யப்பட்ட கரங்கள் அவைகள் சாரோனின் ரோஜாவாகிய அபிஷேகத்தைலமானது அவனது சிரசின்மேல் ஊற்றி அபிஷேகம் பண்ணப்பட்டிருக்கிறது, அது அவனது தாடியில் வடிந்து கீழாக அவனது ஆடையிலும் அது பரவுகிறது. ஒரு மாதுளை, பிறகு ஒருமணி இவ்வாறாக அவனது ஆடையில் தைக்கப்படிருக்கும் அவைகள் அங்கே உள்ளன, ராஜரீக பரிமள தைலம் அவன் பூசி யிருந்தான். பாவமில்லாத ஆட்டுக்குட்டியின் இரத்தத்தை எடுத்துக் கொண்டு போகிறான். இவ்விதமான முறையில் அல்லாமல் அவன் அத்திரையை அணுகவே துணியமாட்டான், இப்படித் துணிந்தால், 'நிற்கிற இடத்திலேயே, அவன் அங்கேயே மரித்து விடுவான். எனவே அவன் ஒரு குறிப்பிட்டவிதமாகத்தான் அங்கே நடந்து செல்ல வேண்டும்; “பரிசுத்தர், பரிசுத்தர், கர்த்தருக்கு பரிசுத்தம்” என்று கூறிக் கொண்டே தேவனை அணுகிக் கொண்டிருந்தான். “கர்த்தர் பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர்' என்று கூறிக் கொண்டே செல்லவேண்டும். 96அவன் அங்கே ஆண்டுக்கு ஒருமுறை உள்ளே சென்று, கிருபாசனத்தின்மீது இரத்தத்ததை தெளித்தான். அவன் அங்கே உள்ளேயிருக்கையில், ஷெகினா மகிமையை காண்பதற்கான சிலாக்கியம் பெற்றிருந்தான்; அப்பொழுது அங்கே அக்கினி ஸ்தம்பம், மரகதம் போல் தோன்றுகிற ஒளியானது இறங்கி வந்தது, அதுவே இஸ்ரவேலரை வழி நடத்திச் சென்றது. அவர் ஆலயத்தை புகையைப் போல் தமது மகிமையால் நிரப்பினார், அதினால் ஒருவரும் அதைக் காண இயலவில்லை. அது ஒரு புகையைப் போல் அங்கே நிரம்பியிருந்தது. அங்கே அது ஒரு புகையைப் போல் மண்டிக்கிடக்குமளவுக்கு, கர்த்தருடைய மகிமையானது அங்கே நிறைந்தது. அவர்தாமே உள்ளே வந்து, திரைக்குப் பின்னால் போய், அங்கே மகாபரிசுத்த ஸ்தலத்தில் கிருபாசனத்தின்மீது அமர்ந்தார். 'அதி பரிசுத்த ஸ்தலம்'' அது மகா பரிசுத்த ஸ்தலம் என்று அழைக்கப்பட்டது. அவன் விசேஷித்த விதமாக உடை உடுத்தியிருக்கவும், விசேஷித்த விதமான நடக்க வும், விசேஷித்தவிதமாக அபிஷேகம் பண்ணப் பட்டவனாக, ஒரு விசேஷித்த நபராக உள்ளே சென்றான். அவனைப் பற்றி சபையோர் எந்த அளவுக்கு அவன் பேரில் பொறாமைப் பட்டிருக்க வேண்டும்! ஆனால் இயேசு மரித்தபொழுது, ஆலயத்தின் திரைச்சீலை கிழிந்தது. இப்பொழுது, ஒரு பிரதான ஆசாரியன் மாத்திரமல்ல விருப்பமுள்ளவன் எவனோ, அவன் அதேவிதமான ஷெகினா மகிமையின் அபிஷேக்தைப் பெற்றுக்கொண்டவனாய், “பரிசுத்தர், பரிசுத்தர், கர்த்தருக்கு பரிசுத்தம்” என்று கூறிக்கொண்டே, பரிசுத்த ஜீவியத்துடன் நடந்து கொண்டு, இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தின் மூலமாக தேவனுடைய பிரசன்னத்திற்குள், அவருக்கு முன்பாக செல்ல முடியும் கர்த்தராகிய இயேசுவே, இங்கே ஒரு வியாதிப் பட்ட மனிதன் கிடக்கிறான், அவன் என் சகோதரன், அவன் மரணப்படுக்கையில் இப்பொழுது கிடக்கிறான், நான் உம்மை அணுகுகிறேன், பரிசுத்தர், பரிசுத்தர், கர்த்தருக்கு பரிசுத்தம்' என்று கூறிக்கொண்டே நீங்கள் அங்கே உள்ளே போய் ஜெபிக்கலாம். 'எதினிமித்தம்? ஒரு பிரதான ஆசாரியன் என்ற ரீதியில்.'' ''யாருக்காக''? “எனது சகோதரனின் சார்பில், 'பரிசுத்தர், பரிசுத்தர், கர்த்தருக்கு பரிசுத்தம்'' என்று கூறிக்கொண்டே.'' 97உங்களது அன்றாட நடத்தை, உங்களது அன்றாடக பேச்சு, உங்களது அன்றாடக நடக்கை, உங்கள் இருதயம், உங்களது ஆத்துமா மற்றும் யாவும் “கர்த்தருக்கு பரிசுத்தம், பரிசுத்தம் பரிசுத்தம்'' என்று கூறிக் கொண்டேயிருக்கும். கசப்பான வேர் ஏதும் இல்லை. ”கர்த்தருக்கு பரிசுத்தம், பரிசுத்தம், பரிசுத்தம், பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர், கர்த்தர் பரிசுத்தர்'' என்று, நமது சகோதரன் சார்பாக நாம் தேவனை அணுகுகையில் அவ்வாறு கூறுகிறோம். எவன் வர விருப்பமாய் உள்ளானோ அவன் வரலாம். அபிஷேகிக்கப்பட்டு, இரத்தமானது அவனுக்கு முன்னாக போய், ''பரிசுத்தர், பரிசுத்தர், கர்த்தர் பரிசுத்தர்'' என்று முழங்கிக் கொண்டே இருக்கிறது. அதுதானே வெளிப்பிரகாரம், பரிசுத்த ஸ்தலம் முதலியவை யாகும். மகா பரிசுத்த ஸ்தலமோ, அது பூமியிலே உள்ள தேவனுடைய வாசஸ்தலமாக இருந்தது. பரலோக்திலுள்ளதற்கு சாயலாக அது பூமியில் உள்ளதாக இருந்தது. இப்பொழுது நான் மீண்டும் நாம் ஏற்கனவே பரிசுத்த அதே வேதவசனத்திற்கு வரப்போகிறோம். வெளிப்படுத்தின விசேஷத்தை நாம் படித்துக்கொண்டேயிருக்கிற வரையிலும் நாம் இதற்கு மீண்டும் திரும்பி வந்திடுவோம். 98இப்பொழுது யோவான் எங்கே நின்று கொண்டிருக்கிறான்? பிரகாரங்களில் நின்று கொண்டிருக்கிறான். இங்கே நாம் இன்னும் சற்று தள்ளி வாசிப்போம். அப்பொழுது நீங்கள் அந்தக் காட்சியைப் புரிந்து கொள்வீர்கள். “அந்தச் சிங்காசனத்திலிருந்து மின்னல்களும் இடிமுழக்கங் களும் சத்தங்களும் புறப்பட்டன; தேவனுடைய ஏழு ஆவிகளாகிய ஏழு அக்கினி தீபங்கள் (அதைப்பற்றி நாம் ஆராயப்போகிற வரையிலும் காத்திருங்கள்) சிங்காசனத் திற்கு முன்பாக எரிந்து கொண்டிருந்தன. அவை தேவனு டைய சிங்காசனத்திலிருந்து புறப்பட்டு வந்து, தேவனு டைய ஒளியை சபைக்கும் பிரதிபலித்துக் கொண்டு இருக்கின்றன. வெளி. 4:5 ஒரு வேதக்கல்லூரியின் மூலமாக அல்ல, ஒரு பேராயர் மூலமாக அல்ல; ஆனால் தேவனுடைய சிங்காசத்திலிருந்து, அவருடைய உயிர்த்தெழுதலின் வல்லமையினால் உள்ள வெளிப் படுத்துதலின் மூலமாக அது உண்டாயிருக்கிறது; அது அவரை நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராகக் காண்பித்துக் கொண் டிருக்கிறது. அந்த ஏழு நட்சத்திரங்களும் அங்கே நின்று கொண்டு, மகா பரிசுத்த ஸ்தலத்தில் உள்ள ஷெகினா மகிமையிலிருந்து, ஷெகினா ஒளியை அங்கே பிரதிபலித்துக்கொண்டு இருக்கிறது. அவ்வொளிதான் அவ்வேழு விளக்குகளின்மேல் பிரகாசித்துக் கொண்டு, அவருடைய ஒளியை, அவரது நிறங்களை, அவரது உயிர்த்தெழுதலின் வல்லமையை நேராக சபைக்குள் பிரதி பலித்துக் கொண்டிருக்கச் செய்கிறது. ஆமென்! “அந்தச் சிங்காசனத்திற்கு முன்பாகப் பளிங்குக் கொப்பான கண்ணாடிக் கடலிருந்தது; அந்தச் சிங்காசனத்தைச் சுற்றிலும் நான்கு ஜீவன்களிருந்தன. அவைகள் முன்புறத்திலும் பின்புறத்திலும் கண்களால் நிறைந்திருந்தன.” வெளி. 4:6 அவன் தொடர்ந்து கூறிக்கொண்டே வந்து, இங்கே எசேக்கியேல் பார்த்த அதே ஜீவன்களைப்பற்றிக் குறிப்பிடுகிறான். அவைகள் காவல் செய்பவையாகும். ஒன்று மனுஷ சாயலானது, இன்னொன்று சிங்க முகமாகவும், அடுத்தது கழுகு முகமாகவும் இருந்தது. அது என்னவாக இருந்தது? இப்பொழுது கவனியுங்கள், நாம் யூதா கோத்திரத்து சிங்கம் முதற்கொண்டு மற்றும் உள்ள ஜீவன்களைப் பற்றி உங்களுக்கு காண்பிக்கப்போகும் பொழுது, ஓ அது என்னே ஒரு காட்சியாக இருக்கிறது! அவைகள் கிருபாசனம் வைக்கப்பட்டிருந்த அந்த ஆசரிப்புக் கூடாரத்தின் நான்கு பக்கங்களிலும் நான்கு சுவர்களாக நின்று கிருபாசனத்தை காவல் காத்துக்கொண்டிருந்தன. ஓ, நான் ..... மகத்தான நாட்கள் நமக்கு முன்னால் உள்ளன. 99நாம் இப்பொழுது கண்ட வண்ணமாக, அது பரலோகத்தில் உள்ள தேவனுடைய சிங்காசனமாக இருக்கிறது. மோசே அதை இப்பூமியில் நிழலாட்டமாக உண்டாக்கினான், அது பரலோகத்தில் உள்ள தேவனுடைய சிங்காசனத்திற்கு மாதிரியாக இருந்தது; ஏனெனில் அவரது நியாயசனம் பூமியில் காணப்பட்ட ஆசரிப்புக் கூடாரத்தின் மகாபரிசுத்த ஸ்தலத்தில் மாதிரியாக வைக்கப் பட்டிருந்தது. இஸ்ரவேலர் அனைவரும் அந்த ஒரு ஸ்தலத்திற்கு இரக்கத்தைக் கண்டடையும்படி வந்தனர். ஏனெனில் தேவன் சிந்தப்பட்ட இரத்தத்தின் கீழாகத்தான் பாவியை சந்திக்கிறார். இப்பொழுது கவனமாகக் கேளுங்கள். ஒருநாளிலே, கிருபா சனத்தின் மீதிருந்த ஷெகினா மகிமையானது இன்னொரு கூடாரத்தின் மேல் போய் தங்கினது. (ஆமென்!) இந்த ஒருவர், “பிதாவான வர்தாமே ஒருவருக்கும் நியாயத்தீர்ப்புச் செய்யாமல், நியாயத்தீர்ப்பு செய்யும் அதிகாரம் முழுதையும் குமாரனுக்கு ஒப்புக்கொடுத்திருக்கிறார்'' (யோவான் 5:22). இந்த ஒருவர்தான் தேவனுடைய நியாயசனமாக இருக்கிறார். ”நீங்கள் எனக்கு விரோத மாகப் பேசினார் அது உங்களுக்கு மன்னிக்கப்படும், ஆனால் இன்ருெவர், இன்னொரு கிருபாசனம் வருகிறார். பாருங்கள். நீங்கள் மனுஷகுமாரனுக்கு விரோதமாகப் பேசலாம். அதை நான் உங்களுக்கு மன்னிப்பேன், ஆனால் ஒருநாளிலே, பரிசுத்த ஆவி யானவர் வந்து ஜனங்களின் இருதயங்களில் வாசம் பண்ணுவார். அவருக்கெதிராக பேசப்படும் ஒரு வார்த்தையும் மன்னிக்கப் படுவது இல்லை.'' 100நியாயத் தீர்ப்பானது காலங்கள் தோறும் இன்னும் அதிக மதிகமாக கடுமையாகிக் கொண்டே போகிறது. தேவன் தன்னோடு ஒப்புரவாகிட , பாவிகள் தன்னிடம் வரவேண்டுமென்பதற்காக முயற்சித்துக் கொண்டேயிருக்கிறார்; ஆனால் அவரது பொறுமை யானது தொடர்ந்து நீடித்துக் கொண்டேயிருக்க முடியாது, தேவனுடைய பொறுமை முடியப் போகிறது. முதலாவதாக அவர் உயர வானங்களில் இருந்து நட்சத்திரங்களில் பிரகாசித்துக் கொண்டேயிருந்தார். இரண்டாவதாக அவர் பூமியிலிருந்து கொண்டு ஷெகினா மகிமையின் மூலமாக பிரகாசித்துக் கொண்டே யிருந்தார். அடுத்ததாக, அவர் மாம்சமாகி, நம் மத்தியில் வாசம் பண்ணினார், இன்னமும் அவர் பொறுமையை உடையவராக இருந்து கொண்டேயிருக்கிறார். பிறகு, அவர் மனிதனை தமது இரத்தத்தால் மீட்டுக் கொண்டு, தமது சபைக்குள் பரிசுத்த ஆவியின் ரூபத்தில் வந்திட்டார். அதற்கெதிராக பேசினால் இனி மேல் மன்னிப்பே இல்லை என்ற அளவுக்கு அது முடிவடைந்து விட்ட விஷயமாக இருக்கிறது. இப்பொழுது எங்கே அசைவானது வருகிறது என்பதை நீங்கள் காண முடியும். மக்கள் இன்ன நேரம் இது என்பதை உணர மாட்டாத வேளையில் நாம் இருந்து கொண்டிருக்கிறாம். அது என்ன வாயிருக்கிறது என்பதை மக்கள் கிரகித்துக்கொள்ள முடியாததாக இருக்கிறது. 101இப்பொழுது முதலாவதாக சிங்காசனம் பரலோகத்தில் இருந்தது, அது நியாயாசனமாக இருந்தது. இரண்டாவதாக சிங்கா சனமானது கிறிஸ்துவிலே இருந்தது. மூன்றாவது சிங்காசனமானது மனிதனில் இருக்கிறது. இங்கே நான் வரைந்திருக்கிற காரியத்தை இப்பொழுது எடுத்துக்கொள்ளட்டும். எனக்கு கரும்பலகை இருந்தால் நல்லது என்று நான் நினைக்கிறேன். ஆனால் நான் இவ்விஷயத்தை இன்னும் கூடுதலாக புரிய வைக்க முடியும். நாம் அதை எடுத்துக் கொண்டு, அப்பிரகாரங்களை ஒரு வட்ட வளைத்தில் வரைந்து கொள்ளலாம். இவ்விதமாக நாம் எடுத்து பிரகாரங்களை வரைந்து கொள்வது மிகவும் நல்லது என்று நான் நம்புகிறேன். மனிதன் என்னவாயிருக்கிறான்? அவன் சரீரம், ஆத்துமா, ஆவி ஆகிய மூன்றும் அடங்கிய ஒருவனாயிருக்கிறான். அதை எத்தனை பேர்கள் அறிவீர்கள்? தேவனுடைய அணுகுமுறையை கவனியுங்கள். அவனுடய இருதயமானது எப்படியிருக்கிறது? “தேவன் மனிதனின் இருதயத்தை, தனது கட்டுப்பாட்டு அறை யாக இருக்கும்படி அதைத் தெரிந்துகொண்டார்'' என்ற எனது செய்தியை நீங்கள் நினைவில் வைத்திருக்கிறீர்களா? பிசாசான வனோ மனிதனின் தலையை, தனது கட்டுப்பாட்டு அறையாக இருக்கும்படி தெரிந்து கொள்கிறான். பிசாசு மனிதனை, அவனது கண்களைக் கொண்டு காணும்படி செய்து, அதன் மூலம் காரியங்களை அறிந்து கொள்ளச் செய்கிறான். ஆனால் தேவனோ, மனிதன்தான் கண்களால் காண முடியாதவைகளை இருதயத்தால் விசுவாசிக்கும் படி செய்கிறார். தேவன் மனிதனின் இருதயத்தில் வாசம் பண்ணு கிறார்; மனிதனின் இருதயமே தேவனுடைய சிங்காசமான இருக் கிறது. அதை நீங்கள் புரிந்து கொண்டீர்களா? மனிதன்! தேவன் மனிதனின் இருதயத்தில் தனது சிங்காசனத்தை உண்டாக்கினார். இப்பொழுது கவனியுங்கள், மனிதனில் முதலாவதான பாகமானது என்ன? மனிதனில் முதலாவதான பாகம் சரீரமாகும். அடுத்த பாகம் ஆத்துமாவாகும். அதுவே அவனது ஆவியின் சுபாவ மாக இருக்கிறது : அவன் அப்படிப்பட்டவனாயிருக்கிறானோ, அவ்வாறாக அவனை உருவாக்குகிறது. இப்பொழுது அவர் அணுகு கிறார். மனிதனின் மூன்றாவதான பாகமானது அவனது ஆவி யாகும். அவனது ஆவியானது அவனது இருதயத்தின் மத்தியில் உள்ளது. இருதயத்தின் மத்தியில்தான் தேவன் தனது சிங் காசனத்தை ஸ்தாபித்து அமர வருகிறார். 102நான்கு ஆண்டுகளுக்கு முன்பாக சிக்காகோவிலுள்ள ஒரு வயோதிப அவிசுவாசியான ஒருவர் கூறியது பத்திரிக்கையில் வந்தது, அவர் கூறுவதுண்டு இவ்வாறாக: “தேவன் சாலொமோன் மூலம், 'அவன் இருதயத்தின் நினைவு எப்படியோ' என்று கூறியதின் மூலம் ஒரு தவறு செய்து விட்டார். ஏனெனில், இருதயத்தில் நினைவு கொள்வதற்கு அங்கே எந்தவித சிந்திக்கத்தக்கதான வினைத்திறமும் கிடையாது. எனவே மனிதன் எங்ஙனம் தன் இருதயத்தின் வாயிலாக சிந்திக்க முடியும்? அவர் மூளையைப் பற்றித்தான் கூறியிருக்க வேண்டும்'' என்று அம்மனிதன் கூறினார். தேவன் இருதயம் என்பதற்குப் பதிலாக அவனது மண் டையிலே சிந்தித்தான் என்ற அர்த்தப்படுத்தியிருப்பாரெனில், அவர் ''அவனது தலை'' என்று கூறியிருப்பார். மோசேயிடம் தேவன் சொன்னதைப் போல்... “உன் பாதரட் சையைக் கழற்று, நீ நிற்கிற இடம் பரிசுத்த பூமி'' என்று தேவன் மோசேயிடம் கூறினார். அப்படியிருக்க, மோசே, ”நல்லது, நான் என் தொப்பியை கழற்றிவிடுகிறேன், அதுவும் நல்லதுதான்'' என்று அவன் கூறினார் எப்படி? அவர் தொப்பி' என்று கூறவில்லை. 'பாதரட்சை ' என்றுதான் கூறினார். 103“நீங்கள் மனந்திரும்பி, இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ளுங்கள்'' என்று அவர் கூறிய போது, அவர், 'பிதா குமாரன் பரிசுத்த ஆவி' என்ற அர்த்தத்தில் கூறவில்லை. அவர் என்ன கூறினாரோ அதுவேதான் அதன் பொருளாகும். “நீ மறுபடியும் பிறக்க வேண்டும்'' என்று அவர் கூறிய பொழுது, ”நீ அவ்வாறு விரும்பினால் செய்யலாம்' என்ற அர்த்தத் தில் கூறவில்லை. “விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்களாவன'' என்று அவர் கூறினாரேயல்லாமல், ஒரு வேளை அவ்வாறு நடக்க லாம்'' என்று கூறவேயில்லை. அவர் என்ன கூறுகிறாரோ அதுவே தான் அவர் கூறியதன் பொருளாகும். அவர் தேவனாயிருக்கிறார். அவர்தாம் கூறியதை திரும்பப் பெற்றுக்கொள்ள மாட்டார். அவருக்கு எது நிறைவானது என்று தெரியும். எனவே அவர் அந்த விதமாக அதைச் செய்கிறார். அவ்விதமாகவே அது இருக்கும்படி அவர் விரும்புகிறார். நீங்கள் அந்த அளவுக்கு உயர்ந்துவர வேண்டும். உங்களது எண்ணத் திற்கேற்ப அவர் இறங்கி வர முடியாது, நீங்கள்தான் அவரது கருத்திற்கேற்ப உயர்ந்து போக வேண்டும். அதுதான் அங்கிருக்கிற வேறுபாடு. 104இப்பொழுது இந்த சரீரம், ஆத்துமா என்ற அமைப்பில் .. ஆத்துமா' என்ற வார்த்தையை வேதாகம அகராதியிலோ, அல்லது வெப்ஸ்டர் ஆங்கில மொழி அகராதியிலோ பார்த்தால், அது “ஆவியின் சுபாவம்'' என்ற அர்த்தத்தை உங்களுக்குக் கொடுக்கும். இப்பொழுது, இங்கே ஜான் டோ என்ற ஒரு மனிதன் இருக் கிறான் என்று வைத்துக்கொள்வோம். அங்கே சாம்டோ என்று இன்னொரு மனிதனும் இருக்கிறான் என்று வைத்துக் கொள்வோம். ஜான் டோ என்பவர் ஒரு மனிதன், சரீரம்.... இவர், சாம்டோவுக்கு சகோதரனாவார். ஜான் என்பவர் ஆவி, ஆத்துமா சரீரம் என்ப வைகளை உடையவர். அதே விதமாகத்தான் சாம்டோவும் இருக்கிறார். இவருக்கும் ஆவி ஆத்துமா சரீரம் உள்ளது. இம்மனிதன் பொல்லாதவனும், கீழ்த்தரமானவனும், ஏமாற்று கிறவனும், திருடுகிறவனும், பொய் சொல்லுகிறவனும், விபச்சாரம் செய்கிற வனும், மற்றும் அவனால் செய்ய முடியும் அளவுக்கு எல்லாப் பொல்லாங்கும் உடையவனாய் இருக்கிறான். ஆனால் மற்ற மனிதனோ தன்னில் முழுவதும் அன்பு, சமாதானம், சந்தோஷம் இவற்றால் நிறைந்தவனாய் இருக்கிறான். இவர்கள் இருவருமே ஆவி, ஆத்துமா, சரீரம் ஆகியவைகளை உடைய வர்களாக இருக்கிறார்கள். சரி, அப்படியானால் இவர்களுக் கிடையே அப்படி என்ன தான் வேறுபாடு உள்ளது? இவர்களில் ஒரு மனிதன் தன் கடந்த காலத்தைக் குறித்து சிந்தித்துப் பார்த்து, “என் தாயாரைப் பற்றி எனக்கு ஞாபகத்திற்கு வருகிறது, நாங்கள் சிறுவர்களாக இருந்த போது செய்தது எனக்கு ஞாபகத்திற்கு வருகிறது'' என்று கூற முடியும். இருவருமே அவ்வாறு நினைவு கூர முடியும். இவர்கள் இருவருக்குமே ஆவிகள் உண்டு, இவர்கள் இருவருமே ஆத்து மாக்களை உடையவர்கள், இவர்கள் இருவருமே சரீரங்களை உடையவர்கள்தான். ஆனால் இவ்விருவரில் ஒரு மனிதனுடைய ஆவியின் சுபாவ மானது பொல்லாததாயும், இன்னொரு மனிதனுடைய ஆவியின் சுபாவமோ நல்லதாக இருக்கிறது. ஆகவே ஆவியின் சுபாவம்தான் ஒரு மனிதனின் ஆத்துமாவாகும். பாருங்கள்? ஆகவே, இப் பொழுது, தேவன் எதனுள் பிரவேசிக்க முயன்று கொண்டிருக் கிறார்? ஆவிக்குள், மனிதனின் இருதயத்திற்குள் தான். ஆவி யானது மனிதனின் இருதயத்திற்குள்தான் இருக்கிறது. 105நான் இன்னும் இதைப் பற்றி கூறி முடிக்கவில்லை. விஞ்ஞானம் அதைப் பற்றி என்ன கூறியது என்பது உங்களுக்குத் தெரியும். “மனிதன் தன் இருதயத்தைக் கொண்டு சிந்தனை செய்ய முடியாது' என்று கூறினார்கள். ஆனால் விஞ்ஞானமானது ஒரு விஷயத்தை கண்டுபிடிக்க ஆரம்பித்திருக்கிறது, அதென்ன வெனில், மானிட இருதயத்தினுள் ஒரு சிறு அறை உள்ள தென்றும், அங்கே ஒரு இரத்த உயிரணுகூட கிடையாது என்றும், அங்கே ஒன்றுமே இல்லை என்றும் கூறுகிறார்கள். இது மனித இருதயத்தில்தான், மிருகத்தின் இருதயத்தில் அல்ல. ''அந்த இடம்தான், ஆத்துமா அல்லது ஆவி என்பது குடிகொண்டிருக்கும் இடமாகும்'' என்று கூறுகிறார்கள். அவர்களை விட்டுவிடுங்கள். அவர்கள் தங்களுடைய அற்பமான கரியங்களை எடுத்து ஆராய்ந்து அதிலிருந்து தேவன் உண்டென்பதை நிரூபிப்பார்கள் மதியீன மானவைகளைக் கொண்டு தன்னைக் குறித்து சாட்சிகொடுக்க தேவன் செய்கிறார். இப்பொழுது அந்த விஷயம் பத்திரிக்கையில் பெரிய தலைப்புச் செய்தியாக இருக்கிறது. சகோதரன் போஸேயின் சிறிய மகள் என்னிடம் வந்து, 'சகோதரன் பிரன்ஹாமே, அன்றொரு நாளிலே நீங்கள் சொல்லிக் கொண்டிருந்தீர்களே பாருங்கள், பாருங்கள், விஞ்ஞானம் அதைக் கண்டு பிடித்துவிட்டது'' என்று கூறினாள். ''நல்லது, தேவனுக்கு துதி உண்டாவதாக! அதை நான் விரும்புகிறேன். சகோதரி, அதை நான் விரும்புகிறேன்'' என்று நான் கூறினேன். மனிதனின் ஆத்துமாவானது ஆவியின் தன்மையாக இருக் கிறது, அந்த ஆவியானது மனிதன் இருதயத்தில் வாசம் பண்ணு கிறது. 106வெளிப்பிரகாரங்கள் என்பது என்ன? அதுவே மாம்சமா யிருக்கிறது. பார்த்தீர்களா? மாம்சம்தான் நீங்கள் முதலில் வருவ தாக இருக்கிறது. முதலில் நீங்கள் அதை அக்கினியால் பட்சித்தாக வேண்டும். நீங்கள் மாசம்தைக் கடந்து செல்ல வேண்டும். “நான் எழுந்து ஆலயத்திற்குச் செல்ல எனக்கு மனதில்லை, சாலைகள் மிகவும் வழுக்கலாயிருக்கின்றன; மிகவும் உஷ்ணமாயிருக்கிறது, ஓ சபைக்குப் போவதா, எனக்கு தெரியவில்லை'' என்று கூறு கிறீர்கள். அதுதான் மாம்சத்தின் சிந்தை. நீங்கள் அதை பட்சித்து விட்டு, அதைக் கடந்து செல்லவேண்டும். தேவன் அதைக் கடந்து செல்லவேண்டியதிருக்கிறது. தேவன் பிரவேசிக்க வேண்டிய அடுத்த பாகமானது, அவர் ஆத்துமாவுக்குள் வர வேண்டியதிருக்கிறது. அதுதான் சுபாவமா யிருக்கிறது. ''ஓ, ஜோன்ஸ் குடும்பத்தினர் என்னைப் பற்றி என்ன சொல்வார்களளோ? ஓ, என்னே! அவ்விதமான ஒரு காரியத்தை நான் செய்தால், என் சபை என்னை வெளியே தள்ளிவிடுமே என்று கூறலாம். பாருங்கள்? ஆனால் நீங்கள் அதன் வழியாகவும் கடந்து செல்லவேண்டும். 107நீங்கள் அதன் வழியாக கடந்து சென்று விட்டால், அவர் அப்பொழுது, இருதயத்தினுள்ளே சென்று, அங்கேதான் அவர் அரியாசனம் ஏறுகிறார். அவ்வனுபவம்தான் உங்களில் பரிசுத்த ஆவியானவர் இருப்பதாகும். இயேசு கூறினார், 'அவன் இந்தச் சிறுவரில் ஒருவனுக்கு இடறலுண்டாக்குகிறதைப் பார்க்கிலும் அவனுடைய கழுத்தில் ஏந்திரக்கல் கட்டப்பட்டு, அவன் சமுத் திரத்தில் தள்ளுண்டு போவது அவனுக்கு நலமாயிருக்கும்'' அவர்களுக்கு எந்தத் தீங்கும் செய்யப்படக் கூடாது. அவர்களுக்கு இடறல் உண்டாக்குவது, அவர்களை ஏதாவது விஷயத்தில் நிலை தடுமாற வைப்பது உங்களுக்கு ஆகாது. இந்தச் சிறியரில் ஒருவனுக்கு ஒரு இடறல் உண்டாக்குவதைவிட, நீங்களே உங்களை சமுத்திரத்தில் மூழ்கடித்துக் கொள்வதோ, அல்லது இப்பூமியில் பிறவாமல் இருந்திருந்தாலோ நல்ல தாயிருக்கும். அந்தக் கருத்தில்தான் அவர் கூறினாரோ? அவர் பொய் உரைக்க முடியுமா? அப்போஸ்தலர்கள் அதைக் கூறினரா? இல்லை. இயேசுவே அதைக் கூறினார். என்னை விசுவாசிக்கிற இந்தச் சிறி யரில் ஒருவனுக்கு நீங்கள் ஒரு இடறலைக் கூடக் கொண்டு வந்தால் என்று கூறினார். 'விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடை யாளங்களாவன' 108ஒரு பெரிய மனிதர் கூறினார், “ஓ, நான் அவரில் விசுவாசம் வைத்துள்ளேன். அல்லேலூயா!'' 'அவர் வாக்குரைத்தப்படி நீங்கள் அந்நிய பாஷைகளில் பேசியிருக்கிறீர்களா, பாஷைகளை வியாக்கியானம் செய்திருக்கிறீர்களா, பிசாசுகளை துரத்துகிறீர்களா? தரிசனங்கள் உண்டா ? என்று அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர், “இல்லை. அந்நாட்கள் கடந்து போய் விட்டன'' என்றார்கள். இந்த மனிதர் விசுவாசியல்ல, இவர் ஒரு பாவனை விசுவாசி. இயேசு தாமே இறுதியாகக் கூறிய அவரது கடைசி வார்த் தைகள் என்னவெனில், 'விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்களாவன' என்று. “உலகம் முழுவதும் போய் சர்வ சிருஷ் டிக்கும் அதைக் கூறுங்கள். செய்யுங்கள்'' என்று கூறினார். அது தான் சரியானது. ''நான் திரும்பி வருகிற வரையிலும் இவ்வடை யாளங்கள் விசுவாசியைப் பின் செல்லும்'' என்று கூறினார். இவ்வுலகில் அவர் கூறிய கடைசியான வார்த்தைகள் இவைகள் தான். அதை எத்தனை பேர்கள் அறிவீர்கள்? வேதாகமத்தில் இது மாற்கு 16 அதிகாரத்தில் உள்ளது. இப்பொழுது பாருங்கள், அந்த மனிதர் ஒரு பாவனை விசுவாசி. ஆனால் நீங்கள் உண்மையாகவே விசுவாசியை, தன்னுடன் அடையாளங்கள் பின்பற்றுவதாக அமைந்திருக்கக் காண்பீர் களாயின், அவர்களது ஜீவியத்தில் தாழ்மையை நீங்கள் கண்டால், அப்படிப்பட்டவர்கள் பாசாங்கு செய்பவர் அல்ல, அவர்கள் மெய்க் கிறிஸ்தவர்கள் என்று அறிந்துகொள்ளுங்கள்; ஒரு உண்மை யான அசலான ஒன்று என்று அறிந்துகொண்டு, அதைப் பற்றி ஒன்றும் பேசாதிருங்கள். நீங்கள் செய்ய வேண்டிய தெல்லாம், அவர்களோடு ஒன்று சேர்ந்து கொண்டு, தொடர்ந்து முன்னே செல்லுங்கள், ஏனெனில் நீங்கள் அவ்வாறு செய்கையில், இராஜா வின் பெரும்பாதையில் நீங்கள் முன்னேறிச் சென்று கொண்டிருக் கிறீர்கள். 109இப்பொழுது, என்ன நடக்கிறது? இதைக் கவனியுங்கள். வெளிப்பிரகாரங்கள், லூத்தரின் காலம் அது, புறஜாதி சபையாகிய சரீரத்தில் நாம் துவக்குகையில் இது ஏற்படுகிறது. சுமார் கி.பி.606 வரையிலும், தியத்தீரா சபை காலம் வரையிலும், இரட்சிக்கப்பட்டவர்களில் அநேகர் யூதராயிருந்தனர். பிறகு இரட்சிக்கப்படும் யூதர்கள் எண்ணிக்கை குறைந்து கொண்டே வந்து, யூதர்களும் புறஜாதிகளும் சம அளவில் கர்த்தரை ஏற்றுக் கொள்ளுகிற அளவுக்கு வந்தது. ஆயினும் அநேகர் யூத ராகவே இருந்தனர். ஆனால் முழுவதும் புறஜாதிகளின் காலத் திற்குள் சபைக்காலமானது வந்தபொழுது, மார்ட்டின் லூத்தர், ஜான் வெஸ்லி ஆகியோரின் காலம் வந்தது. பாருங்கள்? இருண்ட காலத்திற்குப் பிறகு வந்த கடைசியான மூன்று சபைக்காலங்களையும் கவனியுங்கள். இருண்ட காலமானது சபைக் காலங்களின் மத்தியப் பகுதிவரையிலும் நீடித்து, அதைக் கடந்தும் சென்றது. கடைசி மூன்று சபைக்காலங்கள் வருகையில், இந்த வெளிப்பிரகாரங்களைக் கவனியுங்கள். பாருங்கள் : மாம்சம், ஆத்துமா, ஆவி, வெளிப்பிரகாரமானது மாம்சமாயிருக்கிறது. பரிசுத்த ஸ்தலம்: நசரேய சபை, யாத்திரை பரிசுத்த சபை, சுதந்திர மெதோடிஸ்டுகள், பார்த்தீர்களா? அதன்பிறகு, மகா பரிசுத்த ஸ்தலம் வருகிறது: பெந்தெகொஸ்தேக்குள் திரும்பி வருகிறது. ஆதியில் அவ்வாறு தான் ஆரம்பித்தது. ஆதிக்குத் திரும்பினால் அப்படியே இருந்தது. 110நீங்கள் இவ்வரைப்படத்தை வரைந்து கொள்கிறீர்க ளென்றால், நான் அங்கே, மாம்சத்தை கட்டுப்படுத்துகிற, மாம்சத் திற்குள் வழிநடத்துகிற அதன் ஐந்து வாசல்களைப் பற்றி இங்கே குறிப்பிட விரும்புகிறேன். இங்கே இருக்கிற இவ்வைந்து வாசல் களும் தான் ஐம்புலன்களாகும் என்பதை நீங்கள் அறிவிறீர்கள். எத்தனை புலன்கள் சரீரத்தை கட்டுப்படுத்துக்கின்றன? ஐந்து, அவை யாவன: காணுதல், ருசித்தல், உணருதல், முகருதல், கேட்டல். அது சரிதானே? அதுவே மாம்சமாயிருக்கிறது, வெளிப் பிரகாரம்: அது மாம்சமாயிருக்கிறபடியால், நீங்கள் சார்ந்து கொள்ளவே முடியாது. அதன்பிறகு, உள்பிரகாரங்கள்; நமக்கு உள்பிரகாரம் உண்டு. அதுதானே அடுத்ததாயுள்ள பலிபீடமாயுள்ளது. அடுத்ததாயுள்ள பலிபீடம் வருகிறது. அதனோடு, மனச்சாட்சி, கற்பனைகள், நினைவு கள், உணர்ச்சிகள், பாசம் முதலியவையும் வருகின்றன. இவைகள் தான் உள்ள பிரகாரத்தை கட்டுப்படுத்தும் அதனுடைய ஐம்புலன்களாகும். அதுவே ஆத்துமாவாகும். அதன்பிறகு அடுத்து உணர்வைக் காட்டும் உணர்வு உள்ளது. அங்கேயும், நினைவுகள், மனச்சாட்சி, இரக்கம் மற்றும் இன்னபிறவும் உள்ளன. கற்பனையும் கூட உண்டு. நீங்கள் உட்கார்ந்து கற்பனை செய்கிறீர்களல்லவா? நீங்கள் உங்களது மாம்சத்தைக்கொண்டு அதைச் செய்வதில்லை, உங்களது புலன்கள் கற்பனை செய்வதில்லை. உங்களுக்குள்ளாக இருக்கும் உள் பிரகாரம்தான் அதைச் செய்கிறது. 111அதற்கு மூன்று வாசல்கள் உள்ளன. நாம் என்ன செய்கி றோம்? நாம் இதோ அதை விவரித்துக் கொண்டிருக்கிறோம். புலன்கள் கவனிக்கத் தவறவேண்டாம். மாமிசத்திலிருந்து ஐம்புலன்கள் வருகின்றன; அதற்கடுத்து, உள்பிரகாரமாகிய ஆத்துமா வருகிறது. ஆனால் இப்பொழுது நீங்கள் இருதயத் தினிடத்திற்கு வருகிறீர்கள். பாருங்கள்? வெளியே பலிபீடத்தோடு நல்லவர்களாகிய யாத்திரை பரிசுத்த சபையினர், மெதோடிஸ்டுகள் ஆகியோராகிய நீங்கள் நின்று விட்டீர்கள். நீங்களும் , லூத்தரன்களும் மற்றும் இன்னபிற சபையினரும் ஐம்புலன்களோடு, கண்காண்கிறதைக் கொண்டு அறிந்து கொள்கிற அனுபவத்தோடு மட்டும், உங்கள் மாம்சத்தில் வெளியே பிரகாரத்திலேயே நின்ற விட்டீர்கள். இங்கே தான் யாத்திரைப் பரிசுத்த சபையினர் ஆகிய சுயாதீன மெதோடிஸ்ட்டுகள் (Free methodists) வருகின்றனர். அவர்கள் அடுத்துள்ள பிரகாரங்களுக்கு வருகிறார்கள். வந்து பரிசுத்தத்தில் விசுவாசம் கொண்டிருந்தனர். ஏனெனில் அந்த ஸ்தலம் என்று அழைக்கப் பட்டது. அங்கே பலிகள் வைக்கப்படுகின்றன. 112ஆனால் ஆண்டுக்கொருமுறைதான் மகா பரிசுத்த ஸ்தலத் திற்குள் பிரதான ஆசாரியன் பிரவேசிக்கிறான். அங்கே ஆக்கினைத் தீர்ப்பு உண்டு. அதற்கு முன் லூத்தரன் காலம் இருந்தது. அதன் பிறகு மெதோடிஸ்ட் காலமானது வந்தது. பின்பு, இந்தக் காலம்; சபை வெளிச்சங்கள் வந்தன, அது அப்படியே மானிடப் பிறவியில் காணப்படுவதற்கு ஒத்து காணப்படுகிறது. பிறகு இந்த மகா பரிசுத்த ஸ்தலத்திற்குள் நாம் எவ்வாறு பிரவேசிக்கிறோம்? பரிசுத்த ஸ்தலத்திற்குள் இடையில் ஒரு திரையானது தொங்கிக்கொண்டிருக்கிறது என்பதை ஞாபகத்தில் கொள்ளுங்கள். மகா பரிசுத்த ஸ்தலத்தில்தான் கிறிஸ்து வந்து உங் களுடைய இருதய சிம்மாசனத்தில் வீற்றிருக்கிறார். கிறிஸ்து அங்கே அரியாசனம் ஏற்றப்படுகிறார். அவர் “நீதிமானாகுதல்'' பரிசுத்தமாகுதல் வழியாகத்தான் வருகிறார். அது சரிதானே?” நாம் எல்லாரும் ஒரே தண்ணீரிலா? ஒரே சபையினாலா? ஒரே மதக் கோட்பாட்டினாலா?) ஒரே ஆவியினாலே... இங்கிருக்கிற நாம் யாவரும் கிறிஸ்துவின் சரீரத்திற்குள்ளாக ஞானஸ்நானம் பண்ண பட்டோம். எதனால்? பரிசுத்த ஆவியினாலே. யார் உள்ளே வருகிறார்? மெதோடிஸ்ட், பாப்டிஸ்டோ ப்ரெஸ்பிடேரியனோ, பெந்தெகொஸ்தேகாரரோ, எவர் வர விரும்பு கிறாரோ அவரெல்லாம் உள்ளே வரலாம். அந்தத் திரை ? அந்த திரையானது எதை உங்கள் இருதயத்தினிடமிருந்து திரையிட்டு மறைக்கிறது? நீங்கள் ஆயத்தம்தானா, அத்திரையானது 'சுய விருப்பம்'' என அழைக்கப்படுகிறது. இப்பொழுது இதன் கருத்தை நீங்கள் அறிந்து கொண்டீர்களா? வெளியே உள்ள புலன்கள் - சரீரத்தில் உள்ள புலன்கள், ஆத்துமாவுக்கென உள்ள புலன்கள் - பரிசுத்த ஸ்தலத்திற்கும் மகா பரிசுத்த ஸ்தலத்திற்கும் இடையே உள்ள அந்த திரை. திரையை தாண்டி நீங்கள் உங்கள் பிரவேசிப்பதற்குரிய மார்க்கம் என்னவெனில், உங்களுக்கென அதற்காக இருக்கவேண்டியது “சுய விருப்பம்'' தான். ''விருப்ப முள்ளவன் எவனோ” என்ன? கைகளைக் குலுக்கிக் கொள்ளகிறவன் எவனோ என்றா? முழுக்கு ஞானஸ்நானம் எடுத்துக் கொள்கிறவன் எவனோ என்பதாக உள்ளதா? சபையில் சேர்ந்து கொள்கிறவன் எவனோ என்பதாக உள்ளதா? தன் கடிதத்தை கொடுத்து அனுப்பு கிறவன் எவனோ என்பதாக அது உள்ளதா? கிரியை செய்கிறவன் எவனோ என்பதாக உள்ளதா? இல்லை. “திரைக்கு அப்பால் வர விருப்பமுள்ளவன் எவனோ' என்பதாகவே அது உள்ளது. 113புலன்களுக்குள்ளே கிறிஸ்துவானவர் வரட்டும். “நான் நல்லது செய்யக் கடமைப்பட்டுள்ளேன். நான் நரகத்திற்குப் போக விரும்பவில்லை. ஒரு காரியம் செய்வேன். நான் சபையில் சேர்ந்து கொள்வேன்'' என்று கூறலாம். லூத்தரன்களைத் தான் அது குறிக்கிறது. ''நல்லது, என்ன செய்ய வேண்டும் என்பதை நான் உங்களுக் குக் கூறுவேன். நான் ஒரு வித்தியாசமான வாழ்க்கையை வாழ வேண்டும் என்பதை நான் விசுவாசிக்கிறேன்'' என்று ஒருவர் கூறலாம். அதுதானே பலிபீடத்தண்டையில் உள்ள பரிசுத்தமாகு தல் என்பதாகும். அது மொதோடிஸ்டுகளைப் பற்றிய காரியம். அதற்குப் பிறகு, விருப்பமுள்ளவன் எவனோ, அவன் கிழிக்கப்பட்ட திரைவழியாக உள்ளே கடந்து செல்வானாக. ஓ, தேவனுக்கு மகிமை! நான் அக்கரையில் உள்ளேன். இப்பொழுது, அவர் நாமத்திற்கே அல்லேலூயா! ஓ, விருப்பமுள்ளவன் எவனோ, அவன் தனது சொந்த சித்தமாகிய திரையைக் கிழித்துக் கொள்ளட்டும். அப்பொழுது தேவன் அவனது இருதயத்தினுள் பிரவேசிப்பாராக. மானிட இருயதத்தினுள், கிறிஸ்து தமது நியாயசனத்தில் வீற்றிருக்கிறார். என்ன சம்பவிக்கவேண்டும்? 114“நான் இங்கே வந்தது சரிதான், இங்கே நான் அசுத்தமான நகைச்சுவையை பேசலாம். அது என்னை கண்டனம் பண்ண வில்லை'' என்று நீங்கள் கூறுகிறீர்கள். ஏன்? உன்னைக் கடிந்து கொள்ள, அக்கினைக்குட்படுத்த நீ இருக்கிற இடத்தில் அங்கே ஒன்றும் இல்லை. பெண்கள் கூறுகிறார்கள்: ”நல்லது, நான் உங்களுக்குக் கூறுகிறேன். நான் தலைமயிரைக் கத்தரித்து குட்டை முடியை உடையவளாய் இருக்கலாம். குட்டையான பாவா டைகளை நான் அணியலாம். அதனால் எனக்கு ஒரு கண்டனமும் இருக்கவில்லை' என்று. இது ஒன்றும் ஆச்சரியமல்ல. “நான் சுருட் டுப் புகைத்தாலும் அதனால் ஒரு விபரீதமும் எனக்கு ஏற்பட வில்லை; கொஞ்சம் சீட்டாட்டம் நான் விலையாடலாம். அதுவும் என்னை ஒன்றும் செய்துவிடாது. சூதாட்ட பகடைப் பெட்டியில் நான் அம்பு செய்யலாம். அதனால் ஒரு கெடுதலும் ஏற்பட்டு விடாது'' என்று மனிதன் கூறுகிறான். அவர்கள் என்னவெல் லாமோ செய்து விட்டு 'அது எனக்கு ஒரு கெடுதலும் ஏற்படுத் தாது” என்று கூறுகிறார்கள். இப்படியெல்லாம் செய்து கொண்டே, அவர்கள் இன்னமும் சபையைச் சார்ந்தவர்களாகத்தான் இருந்து கொண்டு இருக்கிறார்கள். “இதைச் செய்வதினால் எல்லாம் ஒரு கெடுதியும் விளையப் போவதில்லை'' என்கிறார்கள். ஏன? ஏன்? அவர்கள் இருக்கிற ஸ்தலத்தில் அவர்களை நியாயந்தீர்க்க அங்கே ஒன்றுமில்லை. 115ஆனால் கிறிஸ்து உள்ளே பிரவேசிக்கையில், நீங்கள் உங்கள் இருதயத்தினுள் ஒரு பலிபீடத்தை உருவாக்கியிருக்கிறீர்கள், எனவே உங்கள் பாவங்கள் தினந்தோறும் எடுத்துக் கொள்ளப்படு கிறது. மகத்தான பரிசுத்த பவுலுங்கூட, 'நான் அனுதினமும் சாகி றேன்'' என்று கூறினான். ஓ, சகோதரனே, சகோதரியே! அதோ அங்கேதான் அந்த உள் திரையானது இருக்கிறது. விரைந்திட வேண்டும் நான் அறிவேன். ஓ இல்லை என்னால் முடிக்க இயலவில்லை. நான் நேரங் கடந்து விட்டேன். நாம் பார்க்கலாம். இல்லை, நான் அப்படி செய்யவேண்டாம். நான் இருபத்து நான்கு மூப்பர்களைப் பற்றி எடுத்துக் கொள்ள வேண்டுமென விரும்புகிறேன். உங்கள் பகலுணவுக்கு நீங்கள் செல்ல முடியாத படி நான் உங்களை இங்கே வைத்துக் கொண்டிருக்கிறேன். நாம் அதை.... பார்க்கலாம். எத்தனை பேர்கள் “இருபத்து நான்கு மூப்பர்களைப் பற்றி எடுத்துக்கொள்ளுங்கள்'' என்று கூறுகிறீர்கள்? (சபையோர் ஆமென்'' என்று கூறுகிறார்கள் - ஆசி.) நல்லது, ஒரு நிமிடம். நல்லது ஒரே நிமிடம்தான். ”இருபத்து நான்கு மூப்பர்கள்'' ''சிங்காசனத்தை சூழ இருபத்து நான்கு மூப்பர்களைப் பற்றி நாம் விரைவாக எடுத்துக்கொண்டு பார்ப்போம். இப்பொழுது சிங்கானமானது எங்கேயிருக்கிறது என்று நீங்கள் பாருங்கள். அது இருதயத்தினுள் இருக்கிறது. யாருடைய இருதயத்திலே? ஏழு சபை காலங்களில் உள்ள அங்கத்தினர்களுக் குள்ளே அது கிறிஸ்துவாயிருக்கிறது! அதற்கெதிராக பேசப்படும் ஒரு வார்த்தையோ, அல்லது செயலோ, நீங்கள் செய்தால், நீங்கள் ஆக்கினைத் தீர்ப்புக்குட்பட்டாயிற்று. நியாயத்தீர்ப்பின் நாளில் நீங்கள் அதற்காக பதில் அளிக்க வேண்டியவர்களாய் இருக்கிறீர் கள். யார் பூமியை நியாயந்தீர்ப்பார்கள்? பரிசுத்தவான்கள் பூமியை நியாயந்தீர்ப்பார்கள். 116தானியேல் ஆயிரமாயிரம் பேர்கள் வருகிறார்கள் என்று பார்த்தனே. அது யாரைக் குறித்து அவன் கண்டான்? அவர்கள் பரிசுத்தவான்கள். புத்தகங்கள் திறக்கப்பட்டன, பாவிகளுக்குரி யவை. வேறொரு புத்தகமும் திறக்கப்பட்டது, அதுதான் ஜீவ புத்த கம். நித்திரை செய்யும் கன்னியர். ஓ, உங்களால் அதைக்காண முடியவில்லையா? நித்திரை செய்யும் புத்தியில்லாத கன்னியர் ஆகிய சபையானது, மாணவாளனைச் சந்திக்க புறப்பட்டுச் சென்றது, ஆனால் அவர்கள் தங்கள் விளக்குளிலிருந்த எண்ணெயானது தீர்ந்து போகும்படி செய்துவிட்டார்கள். இந்த ஸ்தலத்தினுள் அவர்கள் பிரவேசிக்கவேயில்லை. கிறிஸ்து ஒரு போதும் அதை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ள அவர்கள் அனுமதிக்கவேயில்லை. அவ்வாறு விட்டிருந்தால் அவர் அற்புதங்களைப் புரிந்து, அந்நிய பாஷைகளில் பேசி, அவர் தம்முடைய சபையில் ஜீவிக்கிறார் என்பதை நிரூபிக்கும்படி அற்புதங்கள் செய்திருக்க முடியும். இயேசுவானவர் இவ்வுலகுக்கு வந்து, “நான் இயேசு, நான்தான் தேவகுமாரன்'' என்று கூறிவிட்டு, ஒன்றுமே செய்யா மல், ''நான் போய் இந்த சபையில் சேரப்போகிறேன்'' என்று அவர் கூறினால் எப்படியிருக்கும்? தேவகுமாரன் செய்யும் செயலா அது? அவர் என்ன சொன்னார்? ''என் பிதாவின் கிரியைகளை நான் செய்யாதிருந்தால் நீங்கள் என்னை விசுவாசிக்க வேண்டியதில்லை'' என்று கூறினார். என்னே! நீங்கள் காண்கிறீர்களா? தேவன் தன்னைக் குறித்து பிரகடனம் செய்கிறார். அவ்வாறு செய்ய அவர் விரும்புகிறார். அவர் யேகோவா, அவர் தம்மை அறியப்படுத்தவே விரும்புகிறார். ஓ , நான் அதைக்குறித்து மகிழ்ச்சியாயிருக்கிறேன். ஆம், ஐயா. அவர் தன்னை எனக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறார். அவர் தன்னை உங்களுக்கும் அறியப்படுத்தியிருக்கிறார் என்பதை நான் அறிவேன். சமீபத்தில் இரட்சிக்கப்பட்ட உங்களில் சிலராகிய இளம்பிராயத் திலுள்ளவர்களே, இன்னும் நீங்கள் அவரை அவரது வல்லமை யிலும், அவரது மகத்தான காரியங்களிலும் வளர்ந்த கிறிஸ்த வர்கள் அறிந்திருக்கிறது போல அறிந்திருக்கவில்லை; ஆனால் நீங்கள் அந்த அனுபவத்திற்கு நேராக சரியானபடி வந்து கொண் டிருக்கிறீர்கள். இராஜாவின் பெரும்பாதையில் சரியாக நீங்கள் வந்து கொண்டு இருக்கிறீர்கள். நோக்கிப் பார்த்து கொண்டே உங்களால் முடிந்த அளவுவலுவாக தொடருங்கள். ஓடுங்கள், ஓடுங்கள், உங்களால் முடிந்த அளவு கடினமாக ஓடுங்கள். எதினி மித்தமுமாக ஓடுவதை நிறுத்தாமால், விடாது ஓடிக்கொண்டே யிருங்கள். 117எளிய வயோதிப சகோதரி ஸ்நெல்லிங் கூறுவது போல் : நான் ஓடிக்கொண்டே, ஓடிக்கொண்டே ஓடிக்கொண்டே யிருந்து, சரியாகக் கடந்துவிட்டேன். ஓடி, ஓடி, ஓடி, சரியாகக் கடந்துவிட்டேன். ஓடி, ஓடி, ஓடிக்கொண்டேயிருந்திடுங்கள், உட்கார உங்களால் இயலாது. (அவ்வெளிய வயோதிப ஆத்துமா அக்கரையில் இன்று இருக்கிறாள்). அங்கே சிங்காசனங்கள் இருந்தன. இருபத்து நான்கு இருக் கைகள் உண்டாயிருந்தன. அவைகள் எத்தனை? இருபத்து நான்கு. ''... இருபத்து நான்கு சிங்காசனங்களிருந்தன; இருபத்து நான்கு மூப்பர்கள் வெண் வஸ்திரந்தரித்து, தங்கள் சிரசுகளில் பொன்முடி சூடி (ஆளுக்கொரு இருக்கையில்) அந்தச் சிங்காசனங்களின் மேல் உட்கார்ந்திருக்கக் கண்டேன்.'' வெளி.4:4 இப்பொழுது இருபத்து நான்கு மூப்பர்கள் - அவர்கள் தூதர் கூட்டமல்ல என்பதை நீங்கள் கவனிக்க வேண்டும் என்ற நான் விரும்புகிறேன். பரலோகவாசிகளாகிய தூதர்கள் கிரீடங்க ளோடும், சிங்காசனங்களோடும் சம்மந்தப்பட்டிருக்கமாட்டார் கள். அவர்கள் இவ்விதமான காரியங்களோடு தொடர்புடையவர் களல்ல, அவர்கள் தூதர்கள், அவர்கள் ஒருபோதும் ஜெயங் கொள்ளவில்லை. சிறிது நேரம் கழித்து நீங்கள் கவனித்துப் பார்த் தால், அவர்கள் பாடிய பாடல்கள் மற்றும் காரியங்களை பார்க்கை யில், அவர்கள் தூதர்கள் அல்ல என்று அவை நிரூபிக்கின்றன. பாருங்கள்? அவர்கள் மீட்பின் பாடல்களை பாடினார்கள் எனவே, தூதர்கள் மீட்கப்பட்ட வேண்டிய அவசியமேயில்லை. பார்த்தீர் களா? ஆனால் அம்மூப்பர்களோ மீட்கப்பட்ட மானிடர்கள். 118இதை மேற்கொண்டு பார்க்க எனக்கு நேரமில்லை; ஆனால் இதை எழுதிக் கொண்டிருக்கிறவர்களே, அவர்கள் மீட்கப்பட்ட மனிதர்கள்தான், தூதர்களல்ல என்பதை நீங்கள் அறிந்துகொள்ள விரும்பினால், மத்தேயு 19:28ஐ எடுத்துக் கொள்ளுங்கள். மத்தேயு 19:28. வெளிப்படுத்தின விசேஷம் 3:21- அப்படியெனில் அவர்கள் யார் என்பதை அவற்றின் மூலம் அறிந்து கொள்ளுங்கள். வெளி. 20:4; வெளி.2:10;1 பேதுரு. 5:2-4,2 தீமோத்தேயு .4:8 ஆகிய வசனங்கள் அம்மூப்பர்கள் மீட்கப்பட்ட மானிடர்கள் என்பதை உங்களுக்குத் தெரியப்படுத்தும். அவைகளையெல்லாம் இன்னு காலையில் ஆராய வேண்டும் என்றுதான் நான் விரும்பினேன். நீங்கள் அதன் பேரில் வாரங்கள் கணக்கில் அலசி ஆராயலாம். அவர்கள் தூதர்களல்ல, அவர்கள் பரலோகவாசிகளல்ல, அவர்கள் மீட்கப்பட்ட மனிதர்கள்தான். பாருங்கள்? அவர்களுடைய ஆடை யைக் குறித்தும், அவர்கள் எவ்விதமாக உடையுடுத்தியிருந்தார்கள் என்பதையும், அவர்களுடைய நிலையையும் அவர்களுக்கு என்ன இருந்தது என்பதையும், அவர்கள் பாடிய பாடலையும் நீங்கள் பரிசீலனை செய்தால், அப்பொழுது, அவர்கள் பரலோகவாசி களாகிய தூதர் கூட்டமல்ல என்பதை அறிந்துகொள்ளலாம். 119இன்னும் ஒரு வேதவாக்கியத்தைக் கூட நாம் வாசித்து விடுவோம். அவ்வாறு செய்ய நான் விரும்பவில்லை. நீங்கள் வாசிப்பீர்களா? நல்லது. நாம் தானியேல் 7-ம் அதிகாரத்திற்கு திரும்பிப் போவாம். இங்கே ஒரு வேதவாக்கியத்தை நாம் வாசிப் போம். இன்று காலையிலுள்ள இச்செய்தியின் மீதிப்பகுதி முழு வதுக்கும் இவ்வதே வாக்கியமானது உங்களுக்கு பெரிதான அளவில் உதவிகரமாக இருக்கும். இவ்வேத வாக்கியத்தை நீங்கள் வாசித்த பிறகு, தானியேல் 7-ம் அதிகாரத்தில் கூறப்பட்டுள்ள வற்றைப் பார்த்து, அதனால் அதிகமான அளவுக்கு நீங்கள் நன்றாக உணருவீர்கள். தானியேல் 7-ம் அதிகாரம் 9-ம் வசனத்தை எடுத்துக்கொள்வோம். இந்தக் காரியங்களின் பேரில் மிகுந்த கவனம் செலுத்துங்கள். “நான் பார்த்துக் கொண்டிருக்கையில், சிங்காசனங்கள் வைக்கப்பட்டது; நீண்ட ஆயுசுள்ளவர் வீற்றிருந்தார்; அவருடைய வஸ்திரம் உறைந்த மழையைப்போலவும், அவருடைய சிரசின் மயிர் வெண்மையாகவும் பஞ்சைப் போலத் துப்புரவாகவும் இருந்தது; அவருடைய சிங்காசனம் அக்கினி ஜுவாலையும் (மீண்டும் அது மரகதம் போன்ற அக்கினிமயமான நிறத்தில் காணப்படுகிறது என்பதைப் பாருங்கள்) அதின் சக்கரங்கள் எரிகிற நெருப்புமாயிருந்தது. அக்கினி நதி அவர் சந்நிதியிலிருந்து புறப்பட்டு ஓடினது; ஆயிரமாயிரம் பேர் அவரைச் சேவிக்க வந்தார்கள்; கோடாகோடி பேர் (அங்கே தான் உங்களுடைய மீட்கப்பட்ட மக்கள் வருகிறார்கள்) அவருக்கு முன்பாக நின்றார்கள்; நியாயசங்கம் உட்கார்ந்தது; புஸ்தகங்கள் (புஸ்தகங்கள் என்று பன்மையில் கூறப்பட்டுள்ளது) திறக்கப்பட்டது. தானி.7:9-10 இப்பொழுது கவனியுங்கள்; நியாய சங்கமானது உட் கார்ந்தது. பார்த்தீர்களா? இப்பொழுது கவனியுங்கள். தானியேல் நியாயத்தீர்ப்பிலே சிங்காசனங்களைக் கண்டபோது அவைகள் கலியாக இருந்தன. அவன் சிங்காசனங்கள் வைக்கப்பட்டதையும், நீண்ட ஆயுசுள்ளவர் பரலோகத்திலிருந்து இறங்கி வருவதையும் கண்டான். ஆனால் யோவான் அக்காட்சியைக் கண்டபோது சிங்காசனத்தில் ஏற்கனவே இயேசுவானவர் அமர்ந்துவிட்டார்; சீஷர்கள், கோத்திரப்பிதாக்கள், ஆகியோராகிய மீட்கப்பட்டவர் களுக்கான சிங்காசனங்களில் ஏற்கனவே அவர்கள் அமர்ந்து விட்டார்கள். பார்த்தீர்களா? கிறிஸ்துவின் காலத்திற்கு ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்னர் தானியேல் அக்காட்சியைக் கண்டான். பிறகு, கிறிஸ்துவுக்குப் பிறகு, 25 நூற்றாண்டுகள் கடந்துவிட்ட, வரப்போகிற அந்தக் காலத்திற்குள் யோவான் வாழ்ந்து இவை யெல்லாம் சம்பவிப்பதைக் காண்கிறான். ஆனால் தானியேலோ அதைக் காணவில்லை. அவன் நீண்ட ஆயுசுள்ளவர் வருவதை மட்டுமே காண்கிறான். அவர் வருவதை அவன் காண்கிறான். ஆனால் யோவான் அவரைக் கண்டபோது, சிங்காசனத்தில் அவர் வீற்றிருந்தார், நீண்ட ஆயுசுள்ளவரோடு, சிங்காசனங்கள் வைக்கப் பட்டதை அவன் கண்டான்; நியாயா சங்கமானது உட்கார்ந் திருந்தது. ஆனால் யோவான் அவரைக் கண்டபோது, மூப்பர்கள் இன்னும் யோவானின் காலத்தில் தெரிந்து கொள்ளப்பட வேயில்லை. அல்லது தானியேலின் காலத்தில் தெரிந்து கொள்ளப் படவேயில்லை. ஆனால் அவர்கள் ஏற்கெனவே கடைசி காலத்தில் மீட்கப்பட்டுவிட்டார்கள். கர்த்தருக்கு ஸ்தோத்திரம் ஓ, ஓ அவர் அற்புதமானவராக இருக்கவில்லையா? எனவே தானியேல் 7ம் அதிகாரம் .... அங்கே தானியேல் என்ன செய்கிறான்? அவன் நியாயத்தீர்ப்பை முன்கூட்டியே காண்கிறான். சிங்காசனங்கள் காலியாக இருக்கக் காண்கிறான். அவைகள் காலியாக இருக்கவேண்டுமென்று தான் அப்பொழுது இருந்தது. சபையானது எடுத்துக்கொள்ளப்பட்ட பிறகு, மீட்கப் பட்ட மூப்பர்களால் அச்சிங்காசனங்கள் நிரப்பப்பட்டதை யோவான் தன்னுடைய காலத்தில் காண்கிறான். 120மூப்பர் என்பதன் பொருள் என்ன? மூப்பர் என்ற வார்த்தையை நீங்கள் எடுத்துக்கொண்டால்..... அதைப் பற்றி எல்லாவிதமான விளக்கங்களும் நான் இங்கே எழுதி வைத்திருக் கிறேன். ஆயினும் நான் அதை எடுத்துக் கொள்ளப்போகிறதில்லை. மூப்பர் என்றால், “ஒரு நகரத்தின் தலைவன்'' அல்லது 'ஒரு கோத்திரத்தின் தலைவன்'' என்று பொருள். ”ஏதோ ஒன்றின் தலைவன்'' என்ற பொருள். நான் இருப்பதைப் போல்... சகோதரன் நெவில் இப்பொழுது இந்த சபைக்கு மூப்பராக இருக்கிறார். அவர் என்னவாக இருக்கிறார்? அவர் இந்த உள்ளூர் சபைக்குத் தலைவராக இருக்கிறார். பாருங்கள்? இந்த நகரத்தின் மேயர், இந்நகரத்தின் தலைவனாக இருக்கிறார். நகரங்களின் தலைவன். வேதாகம நாட்களில் நகரத்தின் மூப்பர்களைப் பற்றி உங்களுக்கு ஞாபகமிருக்கும். ஆகவே மூப்பர் என்றால், 'நகரத்தின் தலைவன்'' அல்லது 'ஒரு கோத்திரத்தின் தலைவன்'' என்று பொருளாகும். 121அம்மூப்பர்கள் எத்தனை பேர்கள் அங்கே வீற்றிருந்தார்கள்? அவர்கள் இருபத்து நான்கு பேர்கள் இருந்தார்கள். அது சரிதானே? ஓ, என்னே! அவர்கள் யார்? அவர்கள் பன்னிரண்டு அப்போஸ் தலர்களும், இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரப் பிதாக்களும் ஆவர். நாம் இதைக் தொடர்ந்து ஆராய்ந்து, மற்ற பாடங்களையும் பார்க்கிற வரையிலும் இருந்து, அங்கே அது சரிதான் என்பதை நிரூபிக்கப் போகிறோம். நீங்கள் இப்பொழுது இவற்றை யெல்லாம் எழுதிக் கொண்டிருக்கிறதைக் குறித்து நான் மகிழ்ச்சி யடைகிறேன். பன்னிரண்டு கோத்திரப்பிதாக்களும், இஸ்ர வேலின் பன்னிரண்டு கோத்திரங்களும். இப்பொழுது கவனியுங் கள். இயேசு அதைக்குறித்து கூறினார். ஒரு நாள் பேதுரு, ''நாங்கள் தகப்பனையும், தாயையும், கணவனையும், மனைவியையும், பிள்ளைகளையும் மற்றும் யாவற்றையும் விட்டுவிட்டு உம்மைப் பின்பற்றினோமே, எங்களுக்கு என்ன கிடைக்கும்?'' என்று கேட்டான். ''உம்மைப் பின்பற்றுவதற்காக நாங்கள் எங்கள் மனைவியையும், எங்கள் பிள்ளைகளையும், எங்கள் தகப்பனையையும், தாயையும், எங்கள் வீடுகளையும் நிலங்களையும் கூட விட்டு வந்தோமே'' என்றான். அதற்கு அவர் “இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரங் களையும் நியாயந்தீர்க்கிறவர்களாகப் பன்னிரண்டு சிங்காசனங் களின் மேல் வீற்றிருப்பீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்'' என்று கூறினார். பார்த்தீர்களா? அவர்கள்தான் மீட்கப்பட்ட மூப்பர்கள். 122கிறிஸ்துவுக்கு முன் அடையாளமாகத் திகழ்ந்த தாவீதைப் பாருங்கள். தாவீது அதிகாரத்திற்கு வருவதற்கு முன்னர் அவனுக்கு மிகவும் மோசமான வேளை உண்டாயிருந்தது. அவன் அதிகாரத் திற்கு வரும்பொழுது, செய்த முதல் காரியம் என்னவெனில்; அவன் அதிகாரத்திற்கு வருவதற்கு முன்னர் அவன் மேல் அபிஷே கமானது இன்னமும் இருந்து கொண்டிருந்தது. அவன் மேல் அபிஷேகமானது இருந்து கொண்டுதான் இருந்தது. அநேகர் அவனைப் பற்றி, 'அவன் ஒரு துரோகி, வித்தியாசமான ஒரு சின்ன ஆள், அமைதியைக் குலைக்க முயல்பவன்'' என்று எண்ணினர். ஆனால் அவன்தான் அரசனாகப் போகிறவன் என்று சிலர் அறிந்திருந்தனர். அவர்களெல்லாம் அவனோடு நிலைத்திருந்தனர். தாவீதை விட்டு அவர்களையெல்லாம் உங்களால் பிரிக்கவே முடியாது. சகோதரனே, அந்த அளவுக்கு அவனோடு நடந்தார்கள். ஒரு நாள், அவன் அங்கே அம்மலையின் மேல் நின்று கொண்டு, கீழே உள்ள அவனுக்குப் பிரியமான, அவனது சொந்த, அச்சிறிய பட்டணமானது பகைஞரால் முற்றுகையிடப்பட்டிருப் பதைக் கண்ணோக்கினான். அவன் சிறுவனாய் இருந்தபோது அங்கே ஆடுகளை மேய்த்து நடத்திச் சென்று, அங்கேயிருந்த கிணற்றின் அருமையான தண்ணீரைக் குடிப்பதை வழக்கமாகக் கொண்டிருந் ததைப் பற்றியெல்லாம் நினைவு கூர்ந்தான். நாம் சமீபத்தில் தான் ஜீவதண்ணீர்கள் என்ற தலைப்பில் அதைப் பற்றிப் பிரசங்கித்தோம். “நான் அத்தண்ணீரைக் குடித்ததை எண்ணிப் பார்க்கிறேன்'' என்று கூறினான். அவனுக்கு இருந்த மிகச்சிறிய விருப்பமும் கூட, அவனுடன் இருந்த ஆட்களுக்கு கட்டளையாக இருந்தது. சகோதரரே, அவனிடம் இருந்த அம்மனிதர்களில் இருவர் தங்களது கரங்களில் பட்டங்களைப் பிடித்துக் கொண்டு, பெலிஸ்தரின் பாளயத்திற்குள், பதினைந்து மைல்கள் தூரம் அவர்களை வலப்பக்கமும் இடப்பக்க முமாக, வெட்டிக்கொண்டே சென்று, அக்கிணற்றின் தண்ணீரை தாவீதுக்காக கொண்டு வந்தார்கள். தாவீது அதிகாரத்திற்கு வரப் போகிறான் என்பதை அவர்கள் அறிந்திருந்தார்கள். ஆம் ஐயா. இன்னொரு சமயம் அவர்களில் ஒருவன், அவனைக் காப்பாற்று வதற்காக, ஒரு பள்ளத்தில் குதித்து, அங்கிருந்த ஒரு சிங்கத்தை ஒற்றைக் கையாலேயே கொன்று போட்டான். அவர்கள் போர் வீரர்களாக இருந்தார்கள். தாவீது அதிகாரத்திற்கு வந்தபொழுது என்ன செய்தான் என்பதை நீங்கள் அறிவீர்களா? அவன் தன்னோ டிருந்த அவர்கள் ஒவ்வொருவரையும் ஒவ்வொரு குறிப்பிட்ட நகரத்தின் மேலும் அதிபதியாக ஆக்கினான். 123அங்கே கிறிஸ்துவை காண்கிறீர்களா? “ஜெயங்கொள்ளுகிற வன் எவனோ, அவன் ஒரு நகரத்தின் மேல் ஆளுகை செய்வான்.'' ஜெயங்கொள்ளுகிறவர்கள்! இன்று நாம் அதிகாரத்தோடு அவர் வருவார் என்பதைக் காண்கையில், கிறிஸ்துவனாவர் இவ்வுலகில் ஆளுகை செய்வார். ஜெர்மனி, அமெரிக்கா ஆகிய அனைத்து நாடுகளும் வீழ்ச்சியடையும் ஒவ்வொரு தேசமும் வீழ்ச்சியடைய வேண்டும். இவ்வுலகின் இராஜ்யங்கள், நம்முடைய தேவனுக் கும் அவரது கிறிஸ்துவுக்குமுரிய இராஜ்யங்களாக ஆயின, அவர் அவர்கள் மேல் அதிகாரம் செலுத்தி ஆளுகை செய்வார். அப்படித் தான் நடக்கப்போகிறது! அவர் வல்லமையோடு வரப்போகிறார் என்பதை நாம் அறி வோம். எனவே அவருடைய மிகச் சிறிய விருப்பமும் கூட அவரு டைய கட்டளையாகவே நமக்கு இருக்கிறது. ''ஐம்பது காசுகளுக்கு கூட வழியில்லாத, ஒன்றுக்கும் வழியில்லாத, தரித்திரரான ஒரு கூட்டம் மக்கள் நிறைந்த ஒரு சிறிய எளிய , டிம்பக்டூ போன்ற ஊருக்கு அவர் என்னை தன்னுடைய பிரதிநிதியாக இருக்கும்படி விரும்புகிறாரெனில், அதுவே அவருடைய விருப்பம் ஆகும்.'' ஆமென்! “நீங்கள் எனக்கு இவ்வளவு பணம் கொடுக்கத் தேவை யில்லை, நீங்கள் இன்னின்னதை எனக்கு செய்ய தேவையில்லை, அவர் நான் எங்கு போக வேண்டுமென்று விரும்புகிறாரோ அதை, தெரிவித்தால் போதுமானது.'' ஆமென். அதுவே போதும். 124“நான் வேறுபட்ட விதமாக செயல்பட வேண்டுமென்று அவர் விரும்பினால், இந்த சகோதரிகளைப் போல் வேறுபட்ட விதமாக நடக்க வேண்டுமென்று அவர் விரும்பினால், ஒரு குறிப் பிட்ட காரியத்தை நான் செய்ய வேண்டுமென அவர் விரும்பினால், தேவனுக்கு ஸ்தோத்திரம், அதைச் செய்வது எனக்கு சிலாக்கிய மாயிருக்கிறது.'' அதுதான் சரி. உலகம் என்ன வேண்டுமானாலும் சொல்லிகொள்ளட்டும், அதைப்பற்றி எனக்கு அக்கறையில்லை; அவர் வல்லமையோடு வருகிறார் என்பதை நாம் அறிவோம். ”பாரமான யாவற்றையும் நம்மைச் சுற்றி நெருங்கி நிற்கிற பாவத்தையும் தள்ளிவிட்டு, எனக்கு முன்பாக வைக்கப்பட்டிருக்கிற பந்தய ஒட்டத்தில் நான் பொறுமையோடே ஓடக்கடவன். அதி காரத்தோடு வருகிற, விசுவாசத்தை துவக்குகிறவரும் முடிக்கிற வருமாகிய இயேசு கிறிஸ்துவை நான் நோக்கிப் பார்க்கட்டும்.'' அம் மூப்பர்கள் இருபத்து நான்கு முப்பர்கள் வெளிப் படுத்தின விசேஷத்தை நாம் திருப்பினால் அங்கே இதைக் காண் கிறோம். வெளிப்படுத்தின விசேஷம் 21ம் அதிகாரத்தில் எருசலேம் நகருக்கு பன்னிரண்டு அஸ்திபாரங்கள் இருந்தன. அப்படித் தானே? பக்கத்திற்கு மூன்று வீதம் நான்கு பக்களிலும் மொத்தம் பன்னிரண்டு வாசல்கள் இருந்தன. வனாந்திரத்தில் வைக்கப் பட்டிருந்த ஆசரிப்புக் கூடாரத்தைப் போலவே சரியாக அப்படியே அது இருக்கிறது. மோசே மலையின் மேல் கண்டதைப் போலவே. அதே காரியத்தை யோவனும் கூறினான். கண்டான். அதைத்தான் பவுலும் கண்டான். 125பன்னிரண்டு அஸ்திபாரங்களிலும் அப்போஸ்தலர்களின் நாமங்கள் எழுதப்பட்டிருந்தன என்றும், பன்னிரண்டு வாசல் களிலும் ஒவ்வொரு வாசலிலும் ஒவ்வொரு கோத்திரத்தின் பெயரானது எழுதப்பட்டிருந்தது என்றும் காண்கிறோம். எவ்வாறு நாம் அதைக் காண்கிறோம். அங்கே நாம் பண்ணிரண்டு மூப்பர்கள், பன்னிரண்டு கோத்திரங்கள், பன்னிரண்டு அப்போஸ்தலர்கள், பன்னிரண்டு அஸ்திபாரங்கள், பன்னிரண்டு வாசல்கள் என்பதாகப் பார்க்கிறோம். ஓ, என்னே! ஒவ்வொரு காலத்திலும், ஒவ்வொரு இடத்திலும் தேவனுடைய எண்கள் பிழையின்றி சரியாக ஓடிக் கொண்டேயிருக்கும். நீங்கள் அதைக் காணாமல் இருக்க முடியாது. அக்காரணத்தினால் தான், நமக்கு அந்த ஆறு நாட்கள் உள்ளன. இந்த ஆறு நாட்களில் உலகமானது கிரியை செய்தது, நாம் இப்பொழுது ஏாழவது நாளுக்கு சமீபமாயிருக்கிறோம். முதல் இரண்டாயிரவமாவது ஆண்டில் தேவன் உலகை தண்ணீரினால் அழித்தார். இரண்டாவதாக இரண்டாயிரமாவது ஆண்டில் கிறிஸ்து வந்தார். இந்த ஆண்டு 1961 ஆகும். நாம் வாசலண்டையில் வந்திருக்கிறோம். இன்னும் சிறிது காலம் தான் உள்ளது. இது இன்னும் ரொம்ப காலத்திற்கு போய்கொண்டே யிருக்காது. ஏனெனில் நான் என்னுடைய கிரியையை சீக்கிர மாகவே முடிப்பேன். அவ்வாறு நான் செய்யாவிடில், சகல மாம்சமும் அணு குண்டினால் அழிக்கப்பட்டுவிடும். தெரிந்து கொள்ளப் பட்டவர்கள் நிமித்தமாக, என் நீதியின் கிரியையை சீக்கிரமாகவே முடிப்பேன். உரிய வேளைக்கு முன்னதாக முடிப் பேன்'' என்று கூறுகிறார். அதன்பிறகு மகத்தான நாளாகிய ஆயிரமாண்டு அரசாட்சி நடக்கும். சபையானது ஆறாயிரம் ஆண்டுகள் பாவத்திற்கெதிராக பாடுபட்டது. அதன்பிறகு ஏழாயிரமாண்டிலிருந்து ஆயிர வருட ஆரசாட்சி நடைபெறும். தேவன் இவ்வுலகை உண்டாக்க ஆறாயி ரம் ஆண்டுகள் எடுத்துக் கொண்டார்; அதன்பிறகு ஏழாயிரமாவது ஆண்டில் அவர் தன் கிரியைகளை விட்டு ஓய்ந்திருந்தார். சபை யானது ஆறாயிரம் ஆண்டுகள் பாவத்திற்கெதிராக பாடுபட்டு, பின்பு ஏழாயிரமாவது ஆண்டில் இளைப்பாறுகிறது. 126மூப்பர்கள் அணிந்திருந்த வெண்ணங்கிகள் எதைக் குறிக்கிற தென்றால், பரிசுத்தவான்களுடைய நீதியைத்தான். வெண்மை என்பது ''நீதியைக் குறிக்கும். அவர்கள் அங்கி அணிந்திருந்தது எதைக் காட்டுகிறதென்றால், அவர்கள் ஆசாரியர்களும் நியாயாதி பதிகளுமாயிருக்கிறார்கள் என்பதைத் தான். வெண்ணங்கி அணிந் திருந்த ஆசாரியர்கள், நியாயதிபதிகள், தீர்க்கதரிசிகள் அவர்கள் யார் என்று கண்டு கொண்டீர்களா? வெண்ணங்கி அணிந்திருந்த இருபத்து நான்கு மூப்பர்கள் அவர்கள். அவர்கள் பன்னிரண்டு பேர்கள் இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரங்களுக்காகவும், பன்னிரண்டு அப்போஸ்தலர்கள் சபைக்காகவும் உள்ளார்கள். அவர்கள் மகத்தான் இராஜவின் சமூகத்தில் வீற்றிருக் கிறார்கள். அவர்கள் அங்கே வீற்றிருக்கிறார்கள். என்பதை ஞாபகத் தில் வைத்துக்கொள்ளுங்கள். இங்கே மணவாட்டியும் கிறிஸ்துவும் அவருடைய சிங்காசனத்தில் வீற்றிருக்கிறார்கள். அவருடைய மனைவியாகிய சபையானது அவரருகில் அமர்ந்திருக்கிறாள். இருப் பத்து நான்கு மூப்பர்களும்.... இலட்சத்து நாற்பத்து நாலாயிரம் பேர்களாகிய அண்ணகர்களும் தேவலாயத்தில் அவரை சேவித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர் எழும்பும் பொழுது, அவருடைய மனைவியும் அவரோடு செல்கிறாள், ஓ, எதிர்வரும் அம்மகத்தான காலத்தில், பாவம் அனைத்தும் பாவத்தின் சாயல் யாவும் தொலைக் கப்பட்டிருக்கும் பொழுது.... இன்று மக்கள் மிகவும் போற்றி பேணிக்கொள்கிற பெரிய அருமையான கட்டிடங்களும், பணம் அனைத்தும், பாவமும், அழகுமான ஆண்களும், பெண்களும் அவர்கள் எப்படியெல் லாமோ தங்கள் சரீரத்தை அரங்கரித்துக் கொண்டாலும், அதின் மூலம் ஆத்துமாக்களை நரகத்திற்கு அனுப்புவதற்குரிய பிசாசின் கண்ணியாக அவர்கள் இருந்தாலும், எல்லாம் அழிந்து கெட்டுப் போகும் தோல் புழுக்கள் அவர்களை தின்றுபோடும். முதலாவதாக தோல் புழுக்கள்.... அவர்கள் யாவரும் எரிமலை நெருப்பினுள் போய், எரிமலை சாம்பலாக எரிந்து அழிந்து ஒன்றுமில்லாமற் போவார்கள். 127ஆனால் வரப்போகும் காலைகளில் ஒன்றில், நண்பரே, வரவிருக்கும் காலைகளில் ஒன்றில், எல்லாம் முடிந்த பிறகு, பூமியானது மீண்டும் செழிக்கும். வெளிகளில் பசும்புல் முளைத்து, ரோஜாவின் நற்கந்தம் ஜீவ விருட்சத்தின் பூத்துக் குலுங்குவதோடு இணைந்து மணம் வீசும், ஒரு காலையில் கிறிஸ்து திரும்பி வருவார். பெரிய பறவைகளும், புறாக்களும் மரங்களில் உட்கார்ந்து, கூவென்று அப்போழுது கத்தும், அதன்பிறகு இனிமேல் மரணமும் அலறுதலும் இருக்காது. கிறிஸ்துவும் அவரால் மீட்கப்பட்டவர் களும் பூமிக்குத் திரும்பி வருவார்கள். வயது சென்றவர்களாக அல்ல, என்றென்றும் இளவயதினராக, சாவாமை உள்ளவராக. அவருடைய சாயலைத்தரித்து நிற்போம். சூரிய சந்திர ரைக் காட்டி லும் மிஞ்சி நாம் பிரகாசித்துக் கொண்டிருப்போம். அவ்வழகான நகருக்கு போக நான் ஆயத்தமாயுள்ளேன் அதை எனதாண்டவர் தமக்குரியவர்க்காக ஆயத்தம் செய்துள்ளார் அங்கே சதா காலங்களும் மீட்கப்பட்ட அனைவரும் வெள்ளை சிங்காசனத்தை சுற்றி நின்று மகிமை எனப்பாடுவர் சில வேளைகளில் நான் பரலோக வீட்டை பற்றியும் காணப்போகும் மகிமையைப்பற்றியும் உள்ள நினைவால் வாடுகிறேன், என் இரட்சகரை அப்பொன்னான நகரத்தில் நான் காணப் போகையில் என்னே ஒரு மகிழ்ச்சியாக அது இருக்கும் ஓ, நான் அவரைக் காண எவ்வளவாய் ஏங்குகிறேன் நான் அவரைக் காண விரும்புகிறேன். நான் அந்த அழகிய நகருக்குப் போக ஆயத்தமாயுள்ளேன். யோவான் அந்நகரத்தை பத்மூ தீவில் இருக்கும்போது கண்டான்; அவன் காண்கையில் அந்நகரம் தன் கணவனுக்காக அலங்கரிக்கப்பட்ட ஒரு மணவாட்டியைப்போல் இறங்கி வந்தது. அதன் மகிமையை ஒரு நாளில் நான் விரும்பு கிறேன். நான் அவரைக் கண்டு அவர் முகத்தை ஏறெடுத்துப் பார்க்க விரும்புகிறேன். அங்கே அவரும் இரட்சிப்பின் காருண்யத்தைக் குறித்து என்றென்றும் பாடுவேன் மகிமையின் தெருக்களில் என்னுடைய சத்தத்தை நான் உயர்த்திப் பாடுவேன் கவலைகள் யாவும் ஒழிந்தது, இறுதியில் என்றென்றும் மகிழ்ந்திருக்க வீடு வந்து சேர்ந்தேன். 128வழுக்குகிற, சறுக்குகிற நிலைமை இருக்கிறது, பகலின் வெப்பமும், பாடுகளும் நிறைந்து இருக்கிறது; என் மனைவியும் மேலும் பாதையின் முடிவுக்கு நான் வரும்போது, நடந்து வந்ததின் சிரமங்கள் யாவும் ஒன்று மற்றதாகத் தோன்றும்'' என்ற பாடலை எனக்காக பாட முன் வரவேண்டும் என்று நான் வாஞ்சிக்கிறேன். சுவிசேஷ காரியத்தை துவக்குவதற்காக நான் சபையை விட்டு புறப்பட்ட இரவில் நீங்கள் அழுது கதறியதை நான் நினைவுகூருகிறேன். இங்கே இருக்கிற உங்களில் சிலரைத் தவிர ஏனையோரெல்லாம் உலகைவிட்டு கடந்து சென்றவிட்டனர். சகோதரி, சகோதரன் ஸ்பென்சர், மற்றும் இன்னும் ஒரு சில பழைய காலத்தவர்கள் மட்டும் உயிரோடிருக்கிறீர்கள். அவர்கள் யாவரும் கதறி அழுதபொழுது, பரிசுத்த ஆவியானவரோ, “நீ போகத்தான் வேண்டும்'' என்று கூறினார். 129எனது முதல் கூட்டத்தை நான் நினைவுக்கு கூருகிறேன். சில மாதங்கள் கழித்து, கூட்டங்கள் நடந்து கொண்டு இருந்த ஜோன்ஸ்பரோ என்ற இடத்திற்கு அப்போது சிறிய குழந்தை யாயிருந்த பெக்கியையும் அழைத்துக்கொண்டு என் மனைவி மேடா, பழைய காட்டன் பெல்ட் ட்ரெயினில் வந்து சேர்ந்தாள். அங்கு அவர்கள் அவ்வண்டியில் வந்து சேர அநேக நாட்கள் பிடித் தன. அவள் வந்து சேர்ந்த அன்றிரவில் நான் வெளியே காத்திருந் தேன். நாங்கள் கூட்டம் நடந்த அந்த அரங்கத்திற்கு செல்ல மூன்று வட்டகைக்கு அப்பால் தள்ளி இருந்தோம். காவல் துறையினர், தெருக்களெல்லாம் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தபடியால், கூட்டத்தை ஒழுங்கு செய்து, தெருக்களில் நின்றிருந்தார்கள். கூட்டம் நடந்த அரங்கத்திற்குச் செல்ல முடியாதபடி மக்கள் கூட்டம் தெருக்களில் நிரம்பி வழிந்தபடியால், அரங்கத்திற்கு சுற்றி வளைத்து எங்களை அழைத்துச் சென்றார்கள். மேடா என்னிடம், “பில்லி, உங்களுடைய பிரசங்கத்தைக் கேட்ட இவர்கள் எல்லாம் வந்திருக்கிறார்களா?'' என்றாள். அதற்கு நான், 'இல்லை'' என்றேன். பிறகு நாங்கள் பாடினோம். அவர்கள் கிழக்கிலும் மேற்கிலுமிருந்து வருகின்றனர் தொலைதூரத்திலிருந்தும் அவர்கள் வந்தனர் நமது இராஜவோடு விருந்துண்ண, அவரது விருந்தினராய் எத்தனை சிலாக்கியம் பெற்றோர் இம்மோட்ச யாத்திரிகர் அவரது பரிசுத்த முகத்தை அவர்கள் தரிசிக்கின்றனர். அது தெய்வீக அன்பினால் பிரகாசித்துக் கொண்டிருக்கிறது அவரது கிருபையில் பங்கு பெற்றோர் பாக்யம் பெற்றோர், அவர்கள் அவர் தம் கிரீடத்தில் முத்துக்களாய் பிரகாசிப்பர் ஓ இயேசு சீக்கிரம் வரப்போகிறார் அப்போது நமது சோதனைகளெல்லாம் முடிவுறும் பாவத்தினின்று விடுதலை பெற்றோருக்கு, நமது கர்த்தர் இந்த க்ஷணத்தில் வந்தால் அது எப்படியிருக்கும்? ஓ! அப்பொழுது அது உமக்கு மகிழ்ச்சியை கொண்டு வருமா? அல்லது கவலையையும் மிகுந்த துக்கத்தையும் கொண்டு வருமா? மகிமையிலுள்ள நமது கர்த்தர் வருகையில் நாம் அவரை ஆகாயத்தில் சந்திப்போம். ஆமென்! ஓ, அவரை நான் நேசிக்கிறேன். அது உங்களுக்கு கவலையையும் துயரத்தையும் கொண்டு வருமா, அல்லது மகிழ்ச் சியைக்கொண்டு வரமா? மகிமையிலுள்ள நமது கர்த்தர் வருகை யில், நாம் அவரை ஆகாயத்தில் சந்திப்போம். இந்த எண்ணங்களை நமது சிந்தையில் கொண்டவர்களாய் நாம் தலைகளை வணங்கு வோம். கர்த்தருக்குச் சித்தமானால், இந்த ஆராதனையை மற்றொரு சமயத்தில் முடிப்பேன். 130எங்கள் பரம பிதாவே, ஓ அவர்கள் கிழக்கிலும் மேற்கிலு மிருந்து வருவார்கள். அவர்கள் கடையாந்தரங்களிலிருந்தும் வருவார்கள். நான் அந்த மகத்தான எடுத்துக்கொள்ளப்படுதலைக் குறித்து சிந்தித்துக் கொண்டிருக்கிறேன். ஆப்பிரிக்காவிலும், இந்தியாவிலுமுள்ள மக்களுக்கு நான் பிரசங்கித்திருக்கிறேன்; உலகம் முழுவதிலுமுள்ள மக்களுக்கு பிரசங்கித்திருக்கிறேன்; அவர்களது முகங்களை நான் மீண்டும் எப்படியாய் காணப் போகி றேன். அவர்களில் அநேகர் கதறிக்கொண்டும் அழுது கொண்டும், அங்கே விமான நிலையத்திற்கு சென்று வேலியில் சாய்ந்து கொண்டு, கதறி அழுது கொண்டிருந்தனர். ஒரு சமயம் பவுலோடு அவர்கள் ஊருக்கு வெளியே சென்று முழங்காற்படியிட்டு ஜெபித்ததை நான் நினைவு கூருகிறேன். “நீங்களெல்லாரும் இனி என் முகத்தைப் பார்க்கமாட்டீர்களென்று அறிந்திருக்கிறேன்'' என்று பவுல் கூறினான். அவர்கள் கிழக்கிலும் மேற்கிலுமிருந்து வருவார்கள் நமது இராஜவோடு அவரது விருந்தினராக விருந்துண்ண அவர்கள் தொலைதூர தேசங்களிலும் இருந்து வருவார்கள் இம்மோட்ச யாத்திரிகர் எத்தனை சிலாக்கியம் பெற்றோர் அவர்கள் அவரது பரிசுத்த முகத்தை (மரகதம் போன்ற நிறமுள்ள மகிமையை) நோக்கிக் கொண்டேயிருப் பார்கள். அது தெய்வீக ஒளியினால் பிரகாசமாயிருக்கும் (வெறும் விளக்கொளியல்ல அல்லது குத்துவிளக்கு ஒளியு மல்ல- ஆனால் தெயவீக ஒளி- தெய்வீக ஒளியால் பிரகாசிமாயிருக் கும்) அவரது கிருபையில் பங்கு கொண்டோர் பாக்கியமுள்ளோர், அவர்கள் அவர் தம் கிரீடத்தில் முத்துக்களாய் பிரகாசிப்பர் ஓ, தேவனே, அக்கினி தழல் தீர்க்கதரிசியின் உதடுகளைத் தொட்ட பொழுது, அது அவனை சுத்தமாக்கியது அப்பொழுது தேவ சத்தமானது, 'யார் நமக்காக போவான்?'' என்று கூவியது அப்பொழுது அவன், ''இதோ அடியேன், என்னை அனுப்பும்'' என்றான் 131ஓ, இக்காலையில் தூதனை அனுப்புமே. ஆறு செட்டை களோடு கூடிய கேருபீனை ஆலயத்தினுள் பறந்து “கர்த்தர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர்'' என்று சத்தமிட்டுச் கொண்டே இருந்த அக்கேருபீனை ஏசாயா கண்டானே, அதை அனுப்பும் இளைஞன் ஏசாயா, ''நான் அசுத்த உதடுகளுள்ள மனுஷன், அசுத்த உதடு களுள்ள ஜனங்களின் நடுவில் வாசமாயிருக்கிறவன், கர்த்தருடைய மகிமையை என் கண்கள் கண்டதே'' என்றான். ஆலயத் தின் தூண்கள் அசைந்தன. அப்பொழுது ஒரு தூதன் பலிபீடத்திலிருந்து தன் கையிலே பிடித்த குறட்டால் ஒரு நெருப்புத்தழலை எடுத்து, அதினால் அவனது உதடுகளைத் தொட்டு, ''இதோ, உன்னை சுத்தமாக்கினேன். இப்பொழுது மனுஷகுமாரனே, தீர்க்கதரிசனம் உரை'' என்றான். இன்று காலையில், கர்த்தாவே , தூதனை அனுப் பியருளும்மேன். எந்த பிழையான காரியங்களிலிருந்தும் எங்கள் உதடுகளை சுத்தமாக்கியருளும். எங்கள் இருதயங்களை சுத்தமாக்கி அதில் பிரவேசித்தருளும். கர்த்தாவே சுயவிருப்பம் என்ற திரை யைக் கிழித்தருளும். என்னுடைய சித்தமானது உம்மிலே உம்மு டைய சித்தமாக ஆகட்டும் கர்த்தாவே, ஓ, உம்முடைய சித்த மானது என்னிலே இருக்கட்டும். ஓ , தேவனே. நானும், எனது சபையும், எனது ஜனங்களும் உம்முடையவர்களாக இருக்கட்டும், ஓ, கர்த்தாவே . எங்களை உம்மிடம் சமர்ப்பிக்கிறோம். 132பிதாவே, கவிஞன் தொடர்ந்து இவ்வாறு கூறியுள்ளான். இலட்சக்கணக்கானோர் பாவத்திலும் நிந்தையிலும் மரித்துக் கொண்டிருக்கின்றனர் (ஆப்பிரிக்காவிலும், இந்தியாவிலும், உலகம் பூராவிலும் ஒரு மணிக்கு ஆயிரக்கணக்கில், உம்மை அறியாமல் உம்மை சந்தித்துக்கொண்டிருக்கின்றனர். இப்பொழுது இலட்சக்கணக்கானோர் பாவத்திலும் நிந்தையிலும்மரித்துக் கொண்டிருக்கின்றனர் (இருப்பினும், தேவனே, அதைக்குறித்து எண்ணுகையில் என் ஆத்துமாவை மிகவும் நொறுக்குகிறது). அவர்களுடைய வேதனையான கசப்பான கதறுலுக்கு செவி மடுப்பீர், தீவிரியும், சகோதரரே, அவர்களுடைய அடைக் கலத்துக்காக தீவிரியும் “ஆண்டவரே, இதோ அடியேன்'' என்று அவருக்கு பதிலளிப்பீர் ஆண்டவரே, அதை அளித்தருளும். அதை மீண்டும் அளித் தருளும். கடந்த ஆண்டு முழுவதும் நான் எல்லாவிதமான பிழை களையும் செய்துள்ளேன். பிதாவே, அவைகளுக்காக நீர் என்னை மன்னிக்க வேண்டுமென்று ஜெபிக்கிறேன். இப்புத்தாண்டில் நீர் என்னை புதிதாக அபிஷேகித்தருளும். அங்கே தொலைவில் பாவத்திலும், நிந்தையிலும் சிக்கி மரித்துக் கொண் டிருக்கிற இலட்சக்கணக்கானோரிடம் நான் செல்லட்டும், நான் அவர்களுக்கு இந்த உம்முடைய சத்தியத்தின் மகத்தான வெளிப் பாட்டை கொண்டு செல்லட்டும், அதின மூலம் அவர்களுக்கு பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தை கொண்டு வரமுடியும். அந் நாளில் அவர்கள் கிழக்கிலும் மேற்கிலுமிருந்து கூடிவந்து, உம் முடைய கிரீடத்தில் முத்துக்களாக திகழட்டும் பிரகாசிக் கட்டும் நான் அவர்களிடம் போய், அவர்களுக்கு நம்பிக்கையளித்து, அவர்களை அவர்கள் வாழக்கிற அசுத்தமான இப்பூமியின் அசுத்தத் திலிருந்து தூக்கியெடுக்கட்டும், அதற்காக எனக்கு உதவி செய்யும். கர்த்தாவே. தங்களை பரிசுத்தமாக்கி, கிறிஸ்தவர்களாக வாழச் செய்து, உமக்கு முன்பாக பரிசுத்தமாக்கப்பட்ட சுத்தமாக விளங்கும் படி செய்கிற பரிசுத்த தேவனை அவர்கள் காணட்டும். அவர்கள் எல்லா தீமைகளிலிருந்தும் நீங்கலாக்கி, எல்லாவிதமான உலகத் தின் களியாட்டங்களிலிருந்தும் மனந்திரும்பி, ஜீவிக்கிற தேவனி டம் திரும்பட்டும். அந்த மகத்தான நாளில் உமது இராஜ்யத்தின் பிரதிநிதிகளாக அவர்கள் ஆகட்டும். 133இன்று காலையில் இச்சிறு சபையை பரிசுத்தமாக்கும், கர்த் தாவே. இங்கிருக்கிற ஒவ்வொரு நபரையும் உமது ஆவியால் பரிசுத்தமாக்கியருளும்; பரிசுத்த ஆவியானவர் அவர்களது இருதயங்களுக்குள், எங்கள் ஒவ்வொருவருக்குள்ளும் வர வேண்டும். அவர்களுடைய இருதயங்களை அவர்களது சுயவிருப்ப மாகிய திரை வழியாகதிறந்து, அதினால் அவர்கள் தங்கள் சுய சித்தத்தை மறுத்து, உம்முடைய சித்தத்தை அறியும்படி அவர்களை வரச்செய்திருக்கிற, அவர்களில் இருக்கிற ஆவியை புதுப்பியும். அந்த இளம் பிள்ளைகள், கர்த்தாவே, அவர்கள் அநேகர் சிறு குழந்தைகளாக இருக்கிறார்கள். நீர் உமது கரங்களில் அவர்களை எவ்வளவாய் வளர்க்கிறீர்! எவ்வாறு ஒரு தாயானவள் தனது சிறு பிள்ளைகளை கவனித்து, அவர்கள் கண்களிலுள்ளதை எல்லாம் துடைத்து, அவர்களை அவள் நேசிக்கிறபடியினால் அவர்களுக்கு விசேஷித்த காரியங்களை அவள் கொடுக்கிறாளோ, அதேவிதமாக நீர் புதிதாக பிறந்த உம்முடைய குழந்தைகளை நேசிக்கறீர், கர்த் தாவே. அவர்களால் இன்னும் நடக்க இயலாது, அவர்கள் பேசக் கூட முடியாது. அழுது, தங்களது தாயை நோக்கிப் பார்க்கிற அந்த ஒரேயொரு காரியத்தை மட்டுமே அவர்களால் செய்ய முடியும். ஓ, தேவனே, அவர்களை உமது கரங்களால் சிறிய ஆட்டுக்குட்டி களைப் போல் மெதுவாக மென்மையாகப் பிடித்துக் கொள்ளும்; அவர்களால் நடக்க இயலுகிற அளவுக்கு அவர்கள் வளரும் வரை யிலும் அவர்களை வழி நடத்தியருளும். ஆராதனையின் வழிகள் முழுவதிலும் அவர்களை தொடர்ந்து நடத்தும், கர்த்தாவே அதை அளித்தருளும். எங்களுக்கு விரோதமாகப் பாவஞ்செய்கிறவர்களை நாங்கள் மன்னிக்கிறது போல், எங்களை எங்கள் பாவங்களிலிருந்து மன்னித்தருளும். எங்களை சோதனைக்குட்படப்பண்ணாமல் தீமையினின்று இரட்சித்தருளும். இராஜ்யமும் வல்லமையும் மகிமையும் என்றென்றைக்கும் உம்முடையவைகளே. இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் கேட்கிறேன். ஆமென். 134தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக! கர்த்தர் உங்களுக்கு ஒரு குறிப்பிட்ட காரியத்தின் பேரில் இந்தப் புத்தாண்டை ஆரம்பிக்க, இன்று காலையில் ஒரு காரியத்தை செய்திருக்கிறார் என்று நான் நம்புகிறேன். அதென்னவெனில்: நீங்கள் இயேசு கிறிஸ்துவை நேசிக்கவும், ஒரு நாளில் நீங்கள் அவரைக் காணவும், அவரை நேசித்து, அவரோடு என்றென்றும் ஜீவிக்கவும் விரும்பும்படி உங்களுக்கு செய்திருக்கிறது. உங்களில் ஒருவர் கூட இழந்து போகப்படக்கூடாது என்றும், நீங்கள் ஒவ்வொருவரும் இரட்சிக் கப்பட்ட, பரிசுத்த ஆவினால் நிரப்பப்பட்டு, அவருடைய வருகை பரியந்தமும் காக்கப்பட வேண்டுமென்றும் தான் நான் வாஞ்சை கொண்டிருக்கிறேன். ஏனெனில் அது சீக்கிரத்தில் இருக்கும் என்று நான் விசுவாசிக்கிறேன். இப்பொழுது நான் ஆராதனையை சகோதரர் நெவில் அவர் களிடம் தருகிறேன்.